For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

2004- ஒரு பிளாஷ்பேக்!

By Staff
Google Oneindia Tamil News

ஜனவரி மாதம் முதல் டிசம்பர் வரை ஒவ்வொரு மாதம் பெரும் பரபரப்பான நிகழ்வுகளைக் கொண்டிருந்த 2004முடிகிறது. எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு தமிழகத்தில் மிகப் பெரும் சோகச் சம்பவங்களும்,துயரங்களும், அதிர்ச்சிகளும் நடந்தேறிவிட்டன.

2004ம் ஆண்டின் ஆரம்பமே பெரும் சோகமாகத்தான் இருந்தது. ஜனவரி 23ம் தேதி திருச்சி ஸ்ரீரங்கத்தில் திருமணமண்டபத்தில் பிடித்த தீயின் கோரப் பசிக்கு 55 அப்பாவி உயிர்கள் இரையாகின.

ஆண்டின் முடிவில் உலகமே அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கும் சுனாமி தாக்குதலுக்கு ஒரு லட்சத்துக்கும் அதிமானஉயிர்களை இழந்துவிட்டது தெற்காசியா.

வேதனைகளைக் கொடுத்த 2004 முடிந்து, 2005 பிறக்கப் போகிறது. வருகிற ஆண்டாவது வசந்தத்தைக்கொடுக்கட்டும் என்ற எதிர்பார்ப்புடன் கடந்து போன 2004ல் நடந்த முக்கிய நிகழ்வுகளை திரும்பிப் பார்ப்போம்.

  • ஜனவரி

    ஜன. 4: அமெரிக்க விண்கலம் செவ்வாய் கிரகத்தில் இறங்கியது.

    ஜன. 8: பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் ஒன்றரைஆண்டு சிறை வாசத்திற்குப் பின்னர் ஜாமீனில் விடுதலை ஆனார்.

    Fire mishap in Srirangamஜன. 14: பொடவின் கீழ் கைது செய்யப்பட்ட 8 மதிமுகவினர் ஜாமீனில் விடுதலை.

    ஜன. 19: தலைமைத் தேர்தல் ஆணையராக தமிழகத்தைச் சேர்ந்த டி.எஸ். கிருஷ்ணமூர்த்தி பதவியேற்றார்.

    ஜன. 21: முன்னாள் மத்திய அமைச்சர் அருணாச்சலம் மரணமடைந்தார்.

    ஜன. 23: ஸ்ரீரங்கம் கல்யாண மண்டபம் தீவிபத்தில் மணமகன் குருராஜன் உள்ளிட்ட 55 பேர் பலியானார்கள்.

    ஸ்பிக் நிறுவன பங்குகள் விற்பனை வழக்கில் முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்டோரை தனி நீதிமன்றம் விடுதலைசெய்தது.

    விடுதலைப் புலிகளுடன் நேரடிப் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என அதிபர் சந்திரிகா அறிவித்தார்.

  • பிப்ரவரி

    பிப். 1: மெக்காவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி புனிதப் பயணம் மேற்கொண்ட 200க்கும் மேற்பட்டவர்கள்பலியாயினர்.

    Vairamuthuபிப். 3: திமுகவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடைத் தொடர்ந்து விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன்தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார்.

    பிப். 4: தமிழக சட்டசபை கூடியது, திமுக உள்ளிட்ட கட்சிகள் ஆளுனர் உரையைப் புறக்கணித்து வெளிநிடப்பு.

    பிப். 6: பெங்களூர் நீதிமன்றத்திலிருந்து சொத்துக் குவிப்பு வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்றக் கோரி உச்சநீதிமன்றத்தில் ஜெயலலிதா மீண்டும் மனுதாக்கல் செய்தார்.

    தேர்தலுக்காக மக்களவை கலைக்கப்பட்டது.

    பிப். 7: பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஜாமீனில் விடுதலைசெய்யப்பட்டார்.

    பிப். 9: தர்மபுரி மாவட்டத்திலிருந்து பிரித்து உருவாக்கப்பட்ட கிருஷ்ணகிரி மாவட்டம் உதயமானது.

    பிப். 10: ஸ்டிரைக்கின்போது வேலைநீக்கம் செய்யப்பட்ட, பதவி இறக்கம் செய்யப்பட்ட அரசு ஊழியர்களுக்குமீண்டும் வேலை வழங்கப்படுவதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

    பிப். 15: காங்கிரஸ் கட்சியில் சேருவது தொடர்பாக பேச காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்தார்ப.சிதம்பரம்.

    பிப். 23: சென்னை அருகே ஸ்ரீஹரிகோட்டா விண்கல ஏவுதளத்தில் ராக்கெட் வெடித்துச் சிதறியதில் 6விஞ்ஞானிகள் பலியாயினர்.

    பிப். 24: கவிஞர் வைரமுத்துவுக்கு, அவர் எழுதிய கள்ளிக்காட்டு இதிகாசம் நூலுக்காக சாகித்ய அகாடமி விருதுவழங்கப்பட்டது.

  • மார்ச்

    மார்ச் 2: கஞ்சா கடத்தியதாக கைது செய்யப்பட்ட வழக்கில் சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி மதுரைப் பெண்செரீனா ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

    Jeevajothiமார்ச் 4: பிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கில் சரவண பவன் ராஜகோபாலுக்கு எதிராக ஜீவஜோதி சாட்சியம்அளித்தார்.

    மார்ச் 6: கும்பகோணத்தில் மகாமகம் திருவிழா வெகு விமரிசையாக, எந்தவித அசம்பாவிதமும் இல்லாமல்நடந்தேறியது.

    மார்ச் 9: முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த், நடிகை பல்லவி ஆகியோர் பாஜகவில் இணைந்தனர்.

    விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அறிவித்த பொது மன்னிப்பை நிராகரித்தார் கருணா.

    மார்ச் 12: சந்தனக் கடத்தல் வீரப்பனைப் பிடிக்க சரியான துப்பு தருவோருக்கு ரூ. 5 கோடி வழங்கப்படும் எனகர்நாடக முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா அறிவித்தார்.

    மார்ச் 25: கொல்கத்தாவில் உள்ள சாந்தி நிகேதன் பல்கலைக்கழகத்தில் வைக்கப்பட்டிருந்த ரவீந்திரநாத் தாகூரின்நோபல் பரிசு திருடு போனது.

    மார்ச் 28: பாமக போட்டியிடும் 6 எம்.பி தொகுதிகளில் அதிமுக மற்றும் பாஜகவுக்கு ஆதரவாக வாக்களிக்கமக்களுக்கு கோரிக்கை விடுத்தார் நடிகர் ரஜினிகாந்த்.

    மார்ச் 31: நடிகர் பார்த்திபன்-சீதாவுக்கு சென்னை குடும்ப நீதிமன்றம் விவாகரத்து வழங்கியது.

  • ஏப்ரல்

    ஏப்.2: மதுரையில் பாமக நிறுவனர் ராமதாஸுக்கு கருப்புக் கொடி காட்ட முயன்ற ரஜினி ரசிகர்கள் மீது பாமகதொண்டர்கள் பயங்கரத் தாக்குதல் நடத்தினர்.

    Vaikoஏப்.9: விடுதலைப் புலிகள் இயக்கத்தில் பிளவு; அதிருப்தி தலைவர் கருணாவுக்கு எதிராக விடுதலைப் புலிகள்பெரும் தாக்குதல்.

    பொடா வழக்கிலிருந்து வைகோவை விடுதலை செய்து பொடா மறு ஆய்வுக் குழு உத்தரவு.

    ஏப். 12: பிரதமர் வாஜ்பாய் போட்டியிட்ட லக்னோ நாடாளுமன்றத் தொகுதியில், பாஜகவினர் வழங்கிய இலவசசேலை வழங்கும் நிகழ்ச்சியில் பெரும் நெரிசல் ஏற்பட்டு 25 ஏழைப் பெண்கள் பரிதாப சாவு.

    ஏப். 17: பெங்களூரில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் நடிகை செளந்தர்யா சாவு.

    ஏப். 22: வட கொரியாவில் இரண்டு ரயில்கள் மோதியதில் 3,000 பேர் வரை சாவு.

    ஏப். 26: திமுகவிலிருந்து நீக்கப்பட்ட இயக்குனர் விஜய டி.ராஜேந்தர், லட்சிய திமுக என்ற புதிய கட்சியைத்தொடங்கினார்.

    ஜீவஜோதி கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கில் சென்னை ஹோட்டல் சரவண பவன் அதிபர்ராஜகோபாலுக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை, ரூ 55 லட்சம் அபராதம் விதிப்பு.

    ஏப். 28: சொத்துக் குவிப்பு வழக்கை பெங்களூரிலிருந்து வேறு மாநிலத்திற்கு மாற்றக் கோரிய ஜெயலலிதாவின்மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

  • மே

    மே. 4: மிஸ் கூவாகம்-2004 ஆக மும்பை அரவாணி பாபி டார்லிங் தேர்வு.

    Manmohan singhமே. 10: நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப் பதிவு நடந்தது.

    சிவகாசி மதிமுக வேட்பாளர் சிப்பிப்பாறை ரவிச்சந்திரன் மீது அமைச்சர் இன்பத் தமிழன் துப்பாக்கியால் சுட்டார்.

    மே. 13: நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி, பாஜக கூட்டணி தோல்வி, தமிழகம், புதுவையில்40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி அபார வெற்றி.

    மே 14: ஜக்குபாய் படத்தை ரஜினிகாந்த் கைவிட்டார். மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணிக்குக் கிடைத்தவெற்றி குறித்துக் கூறுகையில், ஆண்டவன் அளித்த தீர்ப்பு என்றார்.

    மே. 19: மன்மோகன் சிங் புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்டார்.

    கேரள மாநில முன்னாள் முதல்வர் ஈ.கே.நாயனார் இறந்தார்.

    மே. 26: நக்சலைட் தலைவரான, தமிழர் விடுதலைப் படைத் தலைவர் சுப. இளவரசனை போலீஸார் பிடித்தனர்.

    மே. 29: இந்தியத் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட இலகு ரக விமானமான சரஸ்வெற்றிகரமாகப் பரிசோதனை.

  • ஜூன்

    ஜூன். 2: அரசு மருத்துவமனைகளில் நுழைவுக் கட்டணம் ரத்து, கோவில்களில் மிதியடிகளை விடுவதற்கானகட்டணம் ரத்து உள்ளிட்ட சலுகைகளை அறிவித்தார் ஜெயலலிதா.

    Bharanitharanஜூன். 4: மக்களவை சபாநாயகராக சோம்நாத் சாட்டர்ஜி பதவியேற்றார்.

    ஜூன். 6: முன்னாள் அமெரிக்கக் குடியரசுத் தலைவர் ரொனால்டு ரீகன் மரணமடைந்தார்.

    தெலுங்குப் பட அதிபரை துப்பாக்கியால் சுட்டதாக என்.டி.ராமாராவின் மகனும், நடிகருமான பாலகிருஷ்ணாகைது.

    ஜூன். 8: 122 ஆண்டுகளுக்குப் பிறகு சூரியனை வெள்ளி கிரகம் கடந்து சென்ற அபூர்வு நிகழ்வு நடந்தது.

    ஜூன். 14: பெற்றோரால் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட சேலம் குட்டிச் சாமியாரை போலீஸார் மீட்டனர்.

    ஜூன். 23: பணி நீக்கம் செய்யப்பட்ட 15,000 தற்காலிக ஊழியர்களுக்கு மீண்டும் வேலை வழங்குவதாக முதல்வர்ஜெயலலிதா அறிவிப்பு.

    ஜூன். 30: பல்லாண்டுகளாக சென்னை மக்களின் வாழ்வில் அங்கம் வகித்து வந்த சென்னை மீட்டர்கேஜ் ரயில்கள்நிறுத்தப்பட்டன.

  • ஜூலை

    ஜூலை. 1: ரூ. 30,000 கோடி போலி முத்திரைத் தாள் வழக்கில் சிபிசிஐடி டிஐஜி முகம்மது அலி உள்ளிட்ட 3 பேர்கைது.

    Kumbakonam Tragedyஉலகப் புகழ் பெற்ற ஹாலிவுட் நடிகர் மர்லன் பிராண்டோ மரணம்.

    கை விலங்கிடப்பட்ட நிலையில் ஈராக் அதிபர் சதாம் உசேன் நீதிமன்றத்தில் ஆஜர்.

    ஜூலை. 16: கும்பகோணத்தில் பள்ளிக் கூடத்தில் பெரும் தீவிபத்து. 95 பிஞ்சுக் குழந்தைகள் பரிதாபமாகஇறந்தனர்.

    ஜூலை. 21: ஈராக் தீவிரவாதிகளால் 3 இந்தியர்கள் கடத்தப்பட்டனர்.

    ஜூலை. 24: மதுரையில் சென்னை உயர் நீதிமன்றத்தின் கிளை தொடங்கி வைக்கப்பட்டது.

    கொலை வழக்கில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட் ஜார்க்ண்ட் முக்தி மோர்ச்சா தலைவரும், மத்திய அமைச்சருமானசிபுசோரன், அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

  • ஆகஸ்ட்

    ஆக. 5: நெல்லையிலிருந்து சென்னை வரை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நடை பயணத்தைத்தொடங்கினார்.

    Maranஆக. 12: மதுரை ஆதீனம் இளையமடாதிபதி காசி விஸ்வநாதன் திடீரென்று அப் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.

    ஆக. 13: ஏதென்ஸ் நகரில் கோடைகால ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கின.

    ஆக. 14: சிறுமியை கற்பழித்துக் கொலை செய்த கொல்கத்தாவைச் சேர்ந்த தனஞ்செய சாட்டர்ஜிக்கு தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்டது.

    ஆக. 15: அஸ்ஸாம் மாநிலத்தில் சுதந்திர தின விழாவின்போது ஏற்பட்ட குண்டுவெடிப்பில் 17 குழந்தைகள்பரிதாபச் சாவு.

    ஆக. 17: மறைந்த மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் தபால் தலையை சென்னையில் நடந்த நகழ்ச்சியில்காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வெளியிட்டார்.

    ஆக. 21: ஹூப்ளி நீதிமன்றம் பிறப்பித்த வாரண்ட் உத்தரவைத் தொடர்ந்து மத்திய பிரதேச மாநில முதல்வர்பதவியை உதறினார் உமா பாரதி.

    ஆக. 29: உட்கட்சிப் பூசல் காரணமாக கேரள மாநில முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் ஏ.கே.ஆண்டனி.

  • செப்டம்பர்

    செப். 1: இராக்கில் கடத்தப்பட்ட 3 இந்தியர்கள் உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டனர்.

    Jayalakshmiரஷிய பள்ளிக் கூடத்தில் தீவிரவாதிகள் வெறித் தாக்குதல்; 400க்கும் மேற்பட்ட குழந்தைகள் பரிதாபச் சாவு.

    செப். 2: சேது சமுத்திரத் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது.

    செப். 3: காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமன், கோவில் அலுவலகத்தில் வைத்துவெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.

    செப். 11: சிவகாசிப் பெண்மணி ஜெயலட்சுமியின் வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டு மதுரைஉயர்நீதிமன்றக் கிளை தீர்ப்பு.

    செப். 15: போலீஸ் தடையை மீறி வைகோ சென்னை நகருக்குள் நுழைந்தார், கைது செய்யப்பட்டு பின்னர்விடுவிக்கப்பட்டார்.

    செப். 17: தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்டது.

    செப். 23: திருட்டு விசிடி ஒழிப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் திரையுலகினர் பேரணி,ஜெயலலிதாவுடன் சந்திப்பு.

    செப். 26: பத்ரிநாத் புனிதப் பயணம் மேற்கொண்ட தமிழகத்தைச் சேர்ந்த பயணிகள் சென்ற பஸ் விபத்தில் சிக்கிசென்னையைச் சேர்ந்த 10 பேர் பலி.

    செப். 27: திருட்டு விசிடிக்கு எதிராக முதல்வர் ஜெயலலிதா அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டார். திரையுலகுக்குபல்வேறு சலுகைகளும் அறிவிக்கப்பட்டன.

    செப். 30: 2000, 2001, 2000 ம் ஆண்டுகளுக்கான தமிழக அரசின் திரைப்பட விருதுகளை அறிவித்தார்ஜெயலலிதா.

  • அக்டோபர்

    அக். 1: திருட்டு விசிடி விற்பவர்களை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்வதற்கான அவசரச் சட்டம்பிறப்பிக்கப்பட்டது.

    Veerappanஅக். 5: தமிழக மீனவர்கள் 20 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது.

    அக். 7: பொடா மறு ஆய்வுக் குழு தலைவரான நீதிபதி சஹாரியா ராஜினாமா செய்தார்.

    அக். 11: ஐ.நா சார்பு நிறுவனம் முதல்வர் ஜெயலலிதாவுக்கு தங்கத் தாரகை விருது வழங்கியது.

    கருணா ஆதரவாளர்கள் தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகள் என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்கினர்.

    அக். 15: தமிழ் உள்ளிட்ட பிற மொழிப் படங்களைத் திரையிடுவதற்கு கர்நாடக திரைப்பட வர்த்தக சபை விதித்ததடைக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.

    அக். 18: 20 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக, கர்நாடக போலீஸாருக்கு தண்ணி காட்டி வந்த சந்தனக் கடத்தல்வீரப்பன் மற்றும் 3 கூட்டாளிகள், தமிழக அதிரடிப்படை வீரர்களால் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.

    அக். 20: தமிழக அரசு ஊழியர்களுக்கு மேலும் சில சலுகைகளை அறிவித்தார் முதல்வர் ஜெயலலிதா.

    அக். 29: தமிழக ஆளுநர் பதவியிலிருந்து ராம் மோகன் ராவ் ராஜினாமா செய்தார்.

    அக். 30: வீரப்பனை வீழ்த்திய தமிழக அதிரடிப்படையினருக்கு ரூ. 3 லட்சம் ரொக்கம், இலவச வீட்டு மனை,பதவி உயர்வு ஆகியவற்றை அறிவித்தார் ஜெயலலிதா.

  • நவம்பர்

    நவ. 3: தமிழக ஆளுநராக சுர்ஜித் சிங் பர்னாலா பதவியேற்றார்.

    Jayendrarஅமெரிக்க அதிபர் தேர்தலில் ஜார்ஜ் புஷ் மீண்டும் வெற்றி பெற்றார்.

    நவ. 8: தமிழத் திரையுலகம் சார்பில் தல்வர் ஜெயலலிதாவுக்கு சென்னையில் கோலாகலமான பாராட்டு விழாநடத்தப்பட்டது.

    நவ. 9: சென்னை தொழிலதிபரின் மனைவி, மகளைக் கடத்திச் சென்று பாலியல் ரீதியில் கொடுமைப்படுத்தியதாகசாமியார் சதுர்வேதி கைது செய்யப்பட்டார்.

    நவ. 10: உமா பாரதி பாஜகவிலிருந்து அதிரடி நீக்கம்.

    நவ. 11: சங்கரராமன் கொலை வழக்கில் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

    நவ. 18: நடிகர் தனுஷுக்கும், ரஜினிகாந்த்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும் சென்னையில் திருமணம் நடந்தது.

    பிரபல டாக்டர் மாத்ருபூதம் சென்னையில் மரணம்.

    ஜெயேந்திரர் கைதைக் கண்டித்து அத்வானி உள்ளிட்டவர்கள் டெல்லியில் உண்ணாவிரதம்.

    நவ. 22: சங்கரராமன் கொலையை செய்த கூலிப் படைத் தலைவன் அப்பு வெளிநாடு செல்ல சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்தது.

    ஜெயேந்திரரை விடுதலை செய்யக் கோரி ஹேபியஸ் கார்பஸ் மனுவைத் தாக்கல் செய்த கன்னியாகுமரிவழக்கறிஞர் வில்பிரட் பிரகாஷுக்கு உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது.

    ஜெயேந்திரரை விடுதலை செய்யக் கோரி கோவை மாவட்டம் பல்லடத்தில் இந்து முன்னணியைச் சேர்ந்த தலித்சமூகத்தைச் சேர்ந்த சண்முகம் என்பவர் விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டார்.

    நவ. 23: வெங்கடேச பண்ணையார் கொலை குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட ராமன் கமிஷன் விசாரணைக்குஇடைக்கால தடை விதிக்கப்பட்டது.

    சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் இரவு முழுவதும் பெரும் வன்முறையில்இறங்கினர்.

    சென்னை பல்கலைக்க செமஸ்டர் தேர்வில் பிட் அடித்ததாக பாய்ஸ் பட நாயகன் பரத் பிடிபட்டார்.

    ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்குதல் வழக்கில் ஜெயேந்திரர் கைது.

    சங்கரராமன் மனைவி பத்மாவிடம் தமிழக அரசு சார்பில் ரூ. 5 லட்சம் உதவி நிதிக்கான காசோலையை வழங்கினார்முதல்வர் ஜெயலலிதா.

    திருக்கோவில் சொத்துப் பாதுகாப்புக் குழுத் தலைவர் பதவியிலிருந்து ஜெயேந்திரரை தமிழக அரசு நீக்கியது.

    ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 12 மீனவர்களை இலங்கை கடற்படை கடத்திச் சென்றது. மீட்கக் கோரி பிரதமருக்குமுதல்வர் ஜெயலலிதா கடிதம்.

    வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக எஸ்.பி. செந்தாமரைக் கண்ணனிடம் டி.ஆர்.ஓ. விசாரணை.

    சிவகாசி ஜெயலட்சுமிக்கு மதுரை அரசு மருத்துவமனையில் கோர்ட் உத்தரவுப்படி மருத்துவப் பரிசோதனைகள்நடத்தப்பட்டன.

    முன்னணி தனியார் தொலைக்காட்சி சானலான ராஜ் டிவியின் ஒளிபரப்பு சாதனங்களை மத்திய சுங்கத் துறைஅதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    அமைச்சர் தளவாய் சுந்தரம் தன்னிடம் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக அரசு டாக்டர் கோமதி புகார்தெரிவித்தார்.

    ஜெயேந்திரருக்கு சாதகமாக தான் செயல்படவில்லை என்று திமுக தலைவர் கருணாநிதி விளக்கமளித்தார்.

    ஜெயேந்திரர் வழக்கை சிபிஐ விசாரிக்கக் கோரிய மனு உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி.

    ரஜினி, சின்னா உள்ளிட்ட முக்கியக் குற்றவாளிகளை அடையாள அணிவகுப்பின்போது அடையாளம் காட்டினார்சங்கரராமனின் மனைவி பத்மா.

    போலீஸார் தன்னை சித்திரவதைப்படுத்தி ஒப்புதல் வாக்குமூலம் வாங்கியதாக முக்கியக் குற்றவாளியான கதிரவன்காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

    நவ. 25: தேர்தல் செலவுக் கணக்குகளை உடனடியாக தாக்கல் செய்யாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்போவதாக பாஜக மற்றும் பாமக கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்தது.

    திருவண்ணாமலையில் கார்த்திகை மகா தீபம் வெகு சிறப்பாக ஏற்றப்பட்டது.

    திமுக தலைவர் கருணாநிதி வயிற்று உபாதை காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டார்.

    தமிழக உளவுத்துறை டிஜிபியாக அலெக்சாண்டர் நியமிக்கப்பட்டார்.

    ப.சிதம்பரம் தலைமையிலான காங்கிரஸ் ஜனநாயகக் கட்சி காங்கிரஸ் கட்சியுடன் சோனியா காந்தி முன்னிலையில்டெல்லியில் இணைந்தது.

    ஜெயேந்திரர் வழக்கை கவனமுடன் கையாளுமாறு முதல்வர் ஜெயலலிதாவுக்கு பிரதமர் மன்மோகன் சிங் கடிதம்எழுதினார். உடனடியாக பதில் அனுப்பினார் ஜெயலலிதா.

    ஜெயேந்திரர் வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும் என்று பாஜக தலைவர் அத்வானி கோரிக்கைவிடுத்தார்.

    ஜாமீன் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தை அணுக வேண்டாம் என தனது வழக்கறிஞர்களுக்கு ஜெயேந்திரர்உத்தரவிட்டார்.

    காஞ்சிபுரம் எஸ்.பி. டேவிட்சன் மாற்றப்பட்டார், புதிய எஸ்.பி. ஆனார் பிரேம்குமார்

    . நவ. 26: ஒன்றுக்கும் மேற்பட்ட மருத்துவமனைகளில் பணியாற்றியதாக கூறி 10 அரசு டாக்டர்களை இந்தியமருத்துவக் கவுன்சில் 3 ஆண்டுகாலம் டாக்டர் பணியாற்றத் தடை விதித்தது.

    பெண் ஊழியர்கள் உடை மாற்றுவதை ரகசிய கேமராக்கள் மூலமாக பார்த்து ரசித்ததாக சென்னை விஸ்வாஸ்கோல்ட் மார்ட் நகைக் கடை அதிபர் மீது புகார் கூறப்பட்டது.

    மகாராஷ்டிர மாநில ஆளுநராக முன்னாள் கர்நாடக முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா நியமனம்.

    ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் சிபு சோரன் மீண்டம் மத்திய அமைச்சராகப் பதவியேற்றார்.

    விடுதலைப் புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் தனது 50வது பிறந்த நாளைக் கொண்டாடினார்.

    நவ. 27: ஆந்திர அரசு திறந்து விட்ட கிருஷ்ணா நிதி நீர் சென்னை பூண்டி ஏரிக்கு வந்தடைந்தது.

    இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே ராணுவ ஒப்பந்தம் போட்டுக் கொள்வதற்கு மதிமுக பொதுச் செயலாளர்வைகோ கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

    சங்கரராமன் கொலை வழக்கு தொடர்பாக அவரது மனைவி பத்மாவிடம் காஞ்சிபுரம் போலீஸார் விசாரணைநடத்தினர்.

    காஷ்மீரில் 8 சக வீரர்களை சுட்டு கொன்று ராணுவ வீரர் தற்கொலை செய்து கொண்டார்.

    நவ. 28: நீதிமன்ற நடவடிக்கைகள் தமிழில் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தி பாமக நிறுவனர் ராமதாஸ்சென்னையில் தர்ணா போராட்டம் நடத்தினார்.

    சிவகாசி ஜெயலட்சுமி வழக்கை விசாரிக்க மேலும் 3 மாதம் அவகாசம் கேட்டு மதுரை உயர் நீதிமன்றக் கிளையில்மனு தாக்கல் செய்தது சிபிஐ.

    சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக மார்க்கண்டேய கட்ஜு பதவியேற்றார்.

    வேலூர் சிறையில் ஜெயேந்திரரை சந்தித்துப் பேசினார் சுவாமி தயானந்த சரஸ்வதி.

    ஜெயேந்திரர் விடுதலைக்காக சாமியார்களைத் திரட்டிப் போராட்டம் நடத்தப் போவதாக சுப்ரமணிய சுவாமிதெரிவித்தார்.

    சங்கரராமனைக் கொலை செய்ய உத்தரவிட்டது நான்தான் என்று ஜெயேந்திரர் ஒப்புதல் வாக்குமூலம்கொடுத்துள்ளதாக உயர் நீதிமன்றத்தில் காவல்துறை தெரிவித்தது.

    ஸ்ரீரங்கம் உஷாவுடன் ஜெயேந்திரருக்கு நெருக்கமான தொடர்பு இருந்ததாக உயர் நீதிமன்றத்தில் பரபரப்புத்தகவலை வெளியிட்டது காவல்துறை.

    நவ. 29: வயதான ஆண்களை தேர்வு செய்து 5 முறை திருமணம் செய்து அவர்களது சொத்துக்களைப் பறித்தகில்லாடிப் பெண் ராணியை சேலம் மாவட்ட போலீஸார் கைது செய்தனர்.

    காவி உடை சாமியார்களின் காம வெறியாட்டத்தைத் தடுக்க தனி போலீஸ் படை அமைக்க வேண்டும் என்றுதிராவிடர் கழக பொதுச் செயலாளர் கி.வீரமணி கோரிக்கை விடுத்தார்.

    ஜெயேந்திரருடன் தொடர்பு வைத்திருந்ததாக புகார் கூறப்பட்ட ஸ்ரீரங்கம் உஷா காஞ்சிபுரம் போலீஸில்விசாரணைக்காக ஆஜரானார்.

    ஜெயேந்திரர் தன்னிடம் ஆபாசமாக பேசி, அத்துமீறி நடக்க முயன்றதாக பிரபல எழுத்தாளர் அனுராதா ரமணன்பரபரப்புப் புகார் கூறினார்.

    நவம்பர் 30: செக்ஸ் சாமியார் சதுர்வேதி தாக்கல் செய்த ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம்விசாரணைக்கு ஏற்றது.

    சென்னை அண்ணாநகர் அனிதா கொலை வழக்கில் கார் டிரைவருக்கு 20 ஆண்டு சிறைத் தண்டனைவிதிக்கப்பட்டது.

    ஜெயேந்திரர் வழக்கில் குறிஞ்சி சாமியாரிடம் காஞ்சிபுரம் போலீஸார் விசாரணை நடத்தினர்.

    ஸ்ரீரங்கம் உஷாவிடம் காமாட்சியம்மன் கோவிலுக்கு பக்தர்கள் காணிக்கையாக அளித்த 65 கிலோ தங்கம் குறித்துகாஞ்சிபுரம் போலீஸார் விசாரணை நடத்தினர்.

  • டிசம்பர்

    டிச. 4: மாணவனைக் கட்டாயப்படுத்தி ஓரினச் சேர்க்கை மேற்கொண்டதாக சேலத்தைச் சேர்ந்த கிறிஸ்தவப்பாதிரியார் கைது.

    M S Subbulakshmiடிச. 6: பொடா சட்டத்தை ரத்து செய்வதற்கான சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

    டிச. 7: ஜெயேந்திரர் விவகாரம் தொடர்பாக நடிகை சொர்ணமால்யாவிடம் காஞ்சிபுரம் போலீஸார் விசாரணை.

    டிச. 11: பாரதரத்னா, இசையரசி எம்.எஸ்.சுப்புலட்சுமி சென்னையில் மரணம்.

    டிச. 14: பஞ்சாப் மாநிலத்தில் 2 ரயில்கள் நேருக்கு நேர் மோதியதில் 30க்கும் மேற்பட்டோர் பலி.

    டிச. 19: சங்கரராமன் கொலை வழக்கில் கூலிப் படைத் தலைவன் அப்பு பிடிபட்டான்.

    டிச. 23: முன்னாள் பிரதமர் நரசிம்மராவ் டெல்லியில் மரணம்.

    டிச. 24: சங்கர மட மேலாளர் சுந்தரேச அய்யர் கைது செய்யப்பட்டார்.

    டிச. 25: திரிபுரா முன்னாள் முதல்வர் நிரூபன் சக்கரவர்த்தி மரணமடைந்தார்.

    டிச: 26: இந்தோனேசியாவின் சுமத்ரா தீவுக்கு அருகே கடலில் பெரும் பூகம்பம் ஏற்பட்டது. ரிக்டர்அளவுகோலில் இது 8.9 ரிக்டராக இருந்தது. உலகின் 5வது மிகப் பெரும் பூகம்பம் என வல்லுனர்கள்தெரிவித்தனர்.

    உலகைக் குலுக்கிய சுனாமி தாக்குதலால் தெற்காசியா மற்றும் தென் கிழக்கு ஆசிய நாடுகள் கடும் பாதிப்பு.தமிழகத்தில் பல்லாயிரக்கணக்கானோர் கடல் கொந்தளிப்புக்கு சாவு. தமிழக கடலோர மாவட்டங்களில் பெரும்பாதிப்பு.

    தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் உயிழந்தவர்களின் உடல்கள் குவியல் குவியலாக மீட்கப்பட்டன.

    Tsunami - Dead bodies lying in hospitalதிமுக தலைவர் கருணாநதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், அவரது உடல் நலம் குறித்து வதந்திகிளம்பியது.

    காஞ்சி இளைய சங்கராச்சாரியார் விஜயேந்திரரிடம் போலீஸ் விசாரணை.

    ரவி சுப்ரமணியம் கைது, காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

    டிச. 27: சுனாமி தாக்குதலுக்குப் பலியானவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் 5,000த்தைத் தாண்டியது. இந்தியஅளவில் 10,000 பேர் பலியாகியிருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

    டிச. 28: சுனாமி தாக்குதலுக்குப் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 50,000த் தாண்டியது.

    டிச. 30: இந்தோனேசிய கடல் பகுதியில் மீண்டும் பூகம்பம் ஏற்பட்டது.

    விஜயேந்திரர் தம்பி ரகு கைது செய்யப்பட்டார்.

    டிச. 31: முன்னாள் திமுக அமைச்சர் ஆலடி அருணா நெல்லை அருகே வெட்டிக் கொலை.

    சுனாமி தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 1.15 லட்சத்தை தாண்டியது.

  •  
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X