For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

புதிய தண்டத்திற்கு மாறிய ஜெயேந்திரர்!

By Staff
Google Oneindia Tamil News

கலவை

Jeyandrarதன்னிடம் இதுவரை இருந்த தண்டத்தை மாற்றிவிட்டு புதிய தண்டத்தை வைத்துள்ளார் ஜெயேந்திரர்.

சங்கரராமன் கொலை வழக்கில் கைதாகி சிறைக்குச் சென்று இரண்டு மாதங்களுக்குப் பிறகு ஜாமீனில்விடுதலையாகியுள்ளார் ஜெயேந்திரர்.

சிறையிலிருந்து வெளியே வந்த ஜெயேந்திரர் சில மாற்றங்களை கடைப்பிடித்துள்ளார். இதுவரை வைத்திருந்ததண்டத்தை (கையில் வைத்திருக்கும் நீண்ட குச்சி) விலக்கி விட்டு புதிய தண்டத்திற்கு மாறியுள்ளார்.

வேலூர் சிறையிலிருந்து நேற்று மாலை கலவை வந்த, அவர் அங்கு கெருசிரம பூஜை, சந்திர மெளலீஸ்வரர் பூஜைஆகியவற்றை நடத்தினார். பசுவுக்கு பூஜை நடத்திய பின்னர் 64 பேருக்கு அரிசி தானம் வழங்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து கங்கையிலிருந்து கொண்டு வரப்பட்ட நீரில் குளித்து பழைய தண்டத்தை விடுத்து புதுத்தண்டத்தை கையில் எடுத்துக் கொண்டார்.

சன்னியாசிகளுக்கு ஆச்சாரக் குறைவு ஏற்படும்போது பழைய தண்டத்தை கைவிட்டு புதிய தண்டத்தை எடுத்துக்கொள்வது வழக்கமாம்.

திடீர் மெளன விரதம்:

நேற்று வேலூர் சிறையில் இருந்து வெளியே வந்தபோது போலீஸ் அதிகாரிகளுடன் கொண்டே வந்தஜெயேந்திரர், நிருபர்கள் நின்ற இடத்தை நெருங்கியதும் பேச்சை நிறுத்திவிட்டார்.

அவரிடம் நிருபர்கள் கேள்வி கேட்க ஆரம்பித்தவுடன், கூட வந்த மடத்தின் நிர்வாகிகள் அவர் மெளன விரதத்தில்இருப்பதாகக் கூறிவிட்டனர். அதன் பிறகு சிரித்தபடியே ஆசி வழங்கினாரே ஒழிய பேசவேயில்லை.

அதே போல முதலில் சங்கராச்சாரியாருடன் பேசிக் கொண்டே வந்த போலீஸ் அதிகாரிகள், அவர் நிருபர்களைநெருங்க ஆரம்பித்தவுடன் வாய் மூடி மெளனம் கடைபிடித்ததோடு, சங்கராச்சாரியார் அவர்களைப் பார்த்துசிரித்தபோது, பதிலுக்கு முறைப்பையே தந்ததனர்.

யோசித்து காலில் விழுந்த திருநாவுக்கரசர்:

ஜெயேந்திரர் சிறையில் இருந்து வெளியே வர, அவரை பா.ஜ.க. மூத்த தலைவர் சுஷ்மா சுவராஜ், விஎச்பி தலைவர்அசோக் சிங்கல், ஜனதா கட்சி மாநிலத் தலைவர் சந்திரலேகா, மாஜி மத்திய அமைச்சர் திருநாவுக்கரசர் ஆகியோர்காத்திருந்தனர்.

மற்ற மூன்று தலைவர்களும் சாஷ்டாங்கமாக ஜெயேந்திரரின் காலில் விழுந்து ஆசி பெற, கொஞ்சம் யோசித்ததிருநாவுக்கரசரும் அவரச அவசரமாக காலில் விழுந்து எழுந்தார்.

இவர்களைத் தொடர்ந்து விஎச்பி, இந்து முன்னணித் தொண்டர்கள் ஏராளமானோர் அவர் காலில் விழுந்து ஆசிபெற்றனர்.

உளவு போலீஸ் கண்காணிப்பு:

கலவை மடத்துக்கு ஜெயேந்திரர் சென்றபோது அங்கும் ஏராளமான இந்து முன்னணி, விஎச்பி தொண்டர்கள்குவிந்திருந்தனர்.

கூட்டத்தை விலக்கி அவரை மடத்துக்குள் கொண்டு செல்ல நிர்வாகிகள் பெரும் சிரமப்பப்பட்டனர். இதையெல்லாம்கவனிக்க உளவுப் பிரிவு போலீசார் தான் வந்திருந்தனரே தவிர, பாதுகாப்புக்கோ, கூட்டத்தைக் கட்டுப்படுத்தவோஒரு காக்கிச் சட்டையையும் பார்க்க முடியவில்லை.

இன்றும் மெளன விரதம்:

இதற்கிடையே சங்கராச்சாரியார் இன்றும் மெளன விரதத்தில் இருப்பதாக மடத்தின் நிர்வாகிகள் தெரிவித்தனர்.கலவையில் உள்ள சங்கர மடத்துக்குள் சென்று அவரைச் சந்திக்க நிருபர்கள் அனுமதிக்கப்படவில்லை.

கேமராக்கள், டேப் ரெக்கார்டர்களை உள்ளே எடுத்துச் செல்லவும் நிர்வாகிகள் தடை விதித்துவிட்டனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X