For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காஞ்சி மடம் வழிபாட்டு தலமே: நிர்வாகிகள்

By Staff
Google Oneindia Tamil News

கலவை:

Kanchi Muttகாஞ்சி மடம் ஒரு கோயிலோ, புனிதமான இடமோ அல்ல என்று முதல்வர் ஜெயலலிதா கூறிய கருத்துக்கு மடத்தின் நிர்வாகிகள் மறுப்புதெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக சங்கர மடத்தின் நிர்வாகிகள் கூறியதாவது:

கடந்த 12ம் தேதி பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் ஜெயலலிதா எழுதிய கடிதத்தில் காஞ்சி மடத்தில் வழக்கமாக நடைபெறும்பூஜைகளுக்கு எந்தத் தடையும் வராது, சங்கராச்சாரியார்கள் இல்லாத காலங்களிலும் பூஜைகள் நடந்துள்ளன என்று கூறியிருந்தார்.

ஆனால் சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 27ம் தேதி முதல்வரின் கருத்துக்கு மாறாக, காஞ்சி மடம் வழிபாட்டுக்குரிய இடமல்ல என்றுதமிழக அரசின் சார்பில் கூறப்பட்டது. இதையடுத்து விஜயேந்திரர் கைது தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையம் விசாரணைநடத்தத் தடை விதிக்கப்பட்டது.

மடத்தில் ஆதிசங்கரர் மற்றும் அவரது சீடர்களின் சிலைகளுக்கு பூஜைகள் நடைபெறுகின்றன. 1,500 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட விநாயகர்சிலையும் மடத்தில் உள்ளது. அதற்கும் பூஜை நடத்தப்படுகிறது. இதுதவிர பல்வேறு மன்னர்கள் வழங்கிய நெய் விளக்குகள் எந்ததடையுமின்றி தொடர்ந்து எரிய வேண்டும்.

இந்தப் பணிகள் தடையின்றி நடைபெற, மறைந்த நீதிபதி கிருஷ்ணசாமி ரெட்டி தலைமையில் ஒரு குழுவை மறைந்த சந்திரசேகரேந்திரசரஸ்வதி சுவாமிகள் அமைத்தார். அதன்படி இப்போதும் இந்தப் பணிகள் தங்கு தடையின்றி நடைபெற்று வருகின்றன.

மடத்தில் இருக்கும் கிரானைட் கற்கள் 1,500 ஆண்டுகளுக்கும் மேலாக பழமை வாய்ந்தது என்று இந்திய தொல்லியல் துறைஉறுதிப்படுத்தியுள்ளது.

சங்கராச்சாரியார்கள் எங்கு தங்கினாலும், சந்திரமெளலீஸ்வரருக்கும் அவரது துணைவி திரிபுர சுந்திரிக்கும் தவறாமல் பூஜைகள்நடைபெற்று வந்தன. ஜெயேந்திரர் சிறையில் இருந்து விடுதலையாகி கலவையில் தங்கியிருக்கும் காலம் முதல் இந்த நடைமுறையைத்தவறாமல் கடைப்பிடித்து வருகிறார்.

காஞ்சி மடம் வழிபாட்டுக்குரிய இடமல்ல என்று தமிழக அரசு கூறியுள்ளது. ஆனால், மதத் தலைவர் பம்பான் சுவாமிகளின் சமாதியைவழிபாட்டுக்குரிய இடமாக இந்து அறநிலையத் துறை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது. போகர் என்ற துறவியின்சமாதியின்மேல்தான் பழனி முருகன் கோயில் கட்டப்பட்டுள்ளது.

அந்த வகையில் சந்திரசேகரேந்திர சுவாமிகளின் சமாதி இங்கு இருப்பதால் இதுவும் வழிபாட்டுக்குரிய இடம்தான். எல்லவாற்றுக்கும்மேலாக ஜெயலலிதாவே இங்கு இருமுறை வழிபாடு நடத்தியுள்ளார் என்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X