For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பார்வையற்ற காதலர்களை சேர்த்து வைத்த அதிமுக எம்எல்ஏ

By Staff
Google Oneindia Tamil News

வேலூர்:

3 ஆண்டுகளாக காதலித்து வந்த கண் பார்வையற்ற காதலர்களுக்கு திருமணம் செய்து வைத்தார் அதிமுக எம்.எல்.ஏவான பவானிகருணாகரன்.

அரக்கோணத்தைச் சேர்ந்தவர் முத்துச்சாமி, அதே ஊரைச் சேர்ந்தவர் செல்வி. இருவரும் பார்வையற்றவர்கள். டிவி கவர், கீ செயின்உள்ளிட்ட பல்வேறு பொருட்களை (முன்பு லாட்ட சீட்டும் விற்றார்களாம்) அரக்கோணத்திலிருந்து சென்னை செல்லும் மின்சாரரயிலில் விற்று பிழைத்து வருகின்றனர்.

காதலுக்குத் தான் கண் இல்லையே, அது இவர்களுக்கு முற்றிலும் பொருந்தும். இருவரும் ஒருவரை ஒருவர் தீவிரமாக காதலித்துவந்தனர். ரயிலில் விற்பனை செய்தபோதுதான் இருவரும் அறிமுகமாகி காதலிக்கத் தொடங்கியுள்ளனர்.

இவர்களது காதல் வழக்கம் போல மோதலில்தான் ஆரம்பித்ததாம். எந்தப் பெட்டியில் யார் விற்பனை செய்வது என்ற "உரிமைப்"பிரச்சனை பின்னர் காதலாக மாறியது. பின்னர் இருவரும் சேர்ந்தே விற்பனையில் ஈடுபடத் தொடங்கினர்.

3 ஆண்டுகளாக காதலித்து வந்த இருவரும் திருமணம் செய்து கொள்ள விரும்பினர். ஆனால் உற்றார் யாரும் இல்லாததால்கல்யாணத்தை எப்படி நடத்துவது என்பது அவர்களுக்குத் தெரியவில்லை.

கோவிலில் திருமணம் செய்வதா, ரிஜிஸ்ட்ரார் ஆபிசில் செய்வதா, அதற்கு யாரை அணுகுவது என்று புரியாமல் தங்களுக்குஅறிமுகமான ரயில் பயணிகளிடம் உதவி கோரியுள்ளனர்.

அவர்களது காதலை மதித்த ரயில் பயணிகள் உடனடியாக உதவ முன் வந்தனர். அவர்களில் சிலர் அரக்கோணம் அதிமுகஎம்.எல்.ஏ. பவானி கருணாகரனை அணுகி விஷயத்தை சொல்லி அந்தக் காதலவ்ரளுக்கு உதவக் கோரினர்.

அவரும் உடனடியாக உதவ முன் வந்தார். அரக்கோணத்தில் உள்ள வரசக்தி விநாயகர் கோவிலில் திருமணத்திற்கு ஏற்பாடுசெய்யப்பட்டது.

மாவட்ட அதிமுக மாணவர் அணித் தலைவர் குணசேகரன் திருமணத்திற்கான ஏற்பாடுகளைச் செய்தார். அதிமுக தொண்டர்கள்,உள்ளூர் மக்கள், ரயில் நண்பர்கள் என ஏராளமானோர் புடை சூழ முத்துச்சாமியும், செல்வியும் மணக்கோலத்தில் கோவிலுக்குஅழைத்து வரப்பட்டனர்.

கோவில் அர்ச்சகர் ஸ்ரீதர் தாலியை எடுத்துக் கொடுக்க முத்துச்சாமி அதை செல்வியின் கழுத்தில் கட்டினார். அப்போதுமுத்துச்சாமியின் கண்களில் தாரை தாரையாக ஆனந்தக் கண்ணீர் வழிந்தோடியது.

தாலி கட்டி முடித்ததும் கூடியிருந்தவர்களை உணர்வுப்பூர்வமாக வணங்கினார் முத்துச்சாமி.

பின்னர் செய்தியாளரிடம் அவர் கூறுகையில், என்னால் யாரையும் பார்க்க முடியவில்லையே என்று இதுநாள் வரை நான்வருத்தப்பட்டதில்லை. ஆனால் இன்று உணர்கிறேன். எனக்கு உதவிய இந்த உள்ளங்களையும் என் மனைவியாய் அமைந்தசெல்வியையும் பார்க்க முடியாதற்காகாய் வருத்தப்படுகிறேன்.

இந்த நல்ல உள்ளங்களை என் வாழ்நாள் முழுக்க மறக்க மாட்டேன் என்றார் முத்துச்சாமி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X