For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பகலில் பகட்டு; இரவில் திருட்டு!

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

பகல் முழுவதும் சொகுசுக் காரில் சுற்றி வந்து, இரவில் கொள்ளைக்காரனாக மாறும் நபரை போலீஸார் கைதுசெய்துள்ளனர்.

சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் சமீபத்தில் ராதாகிருஷ்ணன் என்ற கொள்ளையன் சரணடைந்தான். இதைத்தொடர்ந்து அவனை போலீஸார் காவலில் எடுத்து விசாரித்தனர். அப்போது பல திடுக்கிடும் தகவல்கள்போலீஸாருக்குக் கிடைத்தன.

ராதாகிருஷ்ணன் கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தைச் சேர்ந்தவன். 1989ம் ஆண்டு முதல் திருட்டுத் தொழிலில்ஈடுபட ஆரம்பித்துள்ளான். சென்னையில்தான் அவன் அதிகமாகக் கொள்ளையடித்துள்ளான்.

1991ம் ஆண்டு அவனை போலீஸார் கைது செய்து குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தனர். சிறையிலிருந்துவெளிவந்த ராதாகிருஷ்ணன் 1993ம் ஆண்டு முதல் மீண்டும் திருட்டில் ஈடுபடத் தொடங்கினான்.

சென்னை நகரின் பல பகுதிகளிலும் ராதாகிருஷ்ணன் கொள்ளையடித்துள்ளான். வீடுகளின் பூட்டுக்களைஉடைத்தும், ஜன்னல்களை உடைத்தும் புகுந்து திருடியுள்ளான்.

திருடிய நகைகளை விற்றும், கொள்ளையடித்த பணத்தை வைத்தும் திருவேற்காடு பகுதியில் பெரிய வீடுகட்டியுள்ளான். அதுதவிர பல கோவில்களுக்கு தானம் செய்துள்ளான்.

அன்னதானம் நடத்துவது, ஏழை, எளியோருக்கு இலவச திருமணம் செய்து வைப்பது என தான் செய்யும்பாவத்திற்குப் பரிகாரமும் செய்து வந்துள்ளான்.

திருட்டின் மூலம் பெரும் வசதி படைத்தவனாக மாறிய ராதாகிருஷ்ணன் கார் வாங்கி அதில் வலம் வந்துள்ளான்.அரசியல் ஆசையும் அவனுக்கு வந்துள்ளது. எப்படியாவது ஒரு கவுன்சிலராகவோ, எம்.எல்.ஏவாகவோ மாறி விடவேண்டும் என்று ஆசைப்பட்டுள்ளான்.

இரவில் திருடப் போகும் போது பல வீடுகளில் கணவன், மனைவி இடையே நடக்கும் அந்தரங்க செயல்களையும்ஆசை தீரப் பார்த்து ரசித்துள்ளான். பல வீடுகளில் கணவனும், மனைவியும் சேர்ந்து நீலப் படங்கள் பார்த்துள்ளனர்.அதை இவனும் ரசித்துப் பார்த்துள்ளான்.

கொள்ளையடித்தப் பணத்தை வைத்து பல துணை நடிகைகளுடன் உல்லாசம் அனுபவித்திருக்கிறான். இதுவரைஅவனிடமிருந்து 400 பவுன் திருட்டு நகைகளை போலீஸார் கைப்பற்றியுள்ளனர்.

இப்படி பல விஷயங்களை போலீசாரிடம் கக்கியுள்ள ராதாகிருஷ்ணனிடம் விசாரணை நடந்து வருகிறது.

அவனிடமிருந்து மேலும் பல சுவாரஸ்யமான தகவல்கள் கிடைக்கலாம் என போலீஸார் கருதுகிறார்கள்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X