For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அல்-கொய்தா தீவிரவாதி ஊடுறுவல்: சென்னை விமான நிலையத்தில் உஷார் நிலை

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

பின் லேடனின் அல்-கொய்தா அமைப்பைச் சேர்ந்த பசூல் அப்துல்லா முகம்மத் என்ற தீவிரவாதி இந்தியாவில்ஊடுறுவியிருப்பதாக வந்த தகவலையடுத்து சென்னை விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்புபோடப்பட்டுள்ளது.

விமானக் கடத்தலைத் தடுக்க கமாண்டோ படையினர் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

அல்-கொய்தா அமைப்பைச் சேர்ந்த பசூல் அப்துல்லா முகம்மத், இந்தியாவுக்கு கடந்த சில மாதங்களாக பலமுறைவந்து சென்றுள்ளதை அமெரிக்க உளவுப் படையினர் கண்டுபிடித்துள்ளனர்.

பசூல் அப்துல்லா கிழக்கு ஆப்பிரிக்காவில் அல்-கொய்தா அமைப்பின் முக்கியப் புள்ளியாவான். சோமராஸ்தீவைச் சேர்ந்த இவன், கென்ய நாட்டின் குடியுரிமையும் பெற்றவன்.

கம்ப்யூட்டர் நிபுணரான பசூல் அப்துல்லா, 18 விதமான புனை பெயர்களில் நடமாடி வருகிறான். தாய் மொழியானசுவாகிலி தவிர ஆங்கிலம், பிரெஞ்சு, அரபி, கோமோரியன் ஆகிய மொழிகளிலும் தேர்ச்சி பெற்றவன்.

கடந்த 1998ம் ஆண்டு கென்யா, தான்சானியா நாடுகளில் உள்ள அமெரிக்கத் தூதரகங்களில் நடத்தப்பட்டவெடிகுண்டுச் சம்பவங்களில் பசூலுக்கு முக்கியப் பங்கு உண்டு. இவனது தலைக்கு அமெரிக்கா ரூ. 10 கோடிவிலை வைத்துள்ளது.

12 நாடுகளில் இவன் மீது ஏராளமான வழக்குகள் உள்ளன. இப்படிப்பட்ட பின்னணி கொண்ட பசூல்இந்தியாவிலும் அதிகமாக நடமாடி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பசூலுக்கு, பாகிஸ்தானின் லஷ்கர்-இ-தொய்பா அமைப்புடன் தொடர்புள்ளதாகவும் அமெரிக்க உளவுப்படைஇந்தியாவிடம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் தீவிரவாதத் தாக்குதலில் ஈடுபட பசூல் மூலம் லஷ்கர் இ தொய்பா அமைப்பினர் திட்டமிட்டுள்ளதாகசந்தேகப்படுகிறது. பசூல் குறித்த தகவல்களை அமெரிக்க உளவுப்படை மத்திய உளவுப் பிரிவிடம் வழங்கியுள்ளது.

இது தொடர்பாக விசாரணை நடத்திய மத்திய உளவுத்துறை, பசூல் இந்தியாவுக்கு வந்து சென்றதை உறுதிசெய்துள்ளது. விமானங்களைக் கடத்தல் போன்ற சம்பவங்களை அரங்கேற்ற பசூல் முயல்வதாக மத்தியஉளவுத்துறை கருதுகிறது.

இதைத் தொடர்ந்து பசூல் தொடர்பான தகவல்களை அனைத்து மாநில அரசுகளும் அனுப்பி வைத்துள்ள மத்தியஉள்துறை அமைச்சகம், உஷாராக இருக்குமாறு எச்சரித்துள்ளது.

சென்னை உள்பட நாடு முழுவதிலும் உள்ள விமான நிலையங்கள் அனைத்திலும் பாதுகாப்புஅதிகரிக்கப்பட்டுள்ளது. விமானங்கள் கடத்தப்பட்டால் சமாளிக்கும் வகையில் கமாண்டோ படையினரும் உஷார்நிலையில் வைக்கப்பட்டள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X