• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

திமுக மேடையில் கண்கலங்கிய வைகோ

By Staff
|

திண்டுக்கல் :

ஐம்பெரும் காப்பியம் போல, ஐந்தாவது முறையாக முதல்வராக கருணாநிதியை தமிழகம் அழைக்கிறது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ திண்டுக்கல் திமுக மாநாட்டில் பேசினார்.

திமுகவின் மண்டல மாநாட்டில் பேசியவர்களிலேயே வைகோவின் உரை தான் மிகவும் உருக்கமாகவும் உணர்ச்சிப்பூர்வமாகவும்இருந்தது.

மற்ற கூட்டணிக் கட்சித் தலைவர்களை விட வைகோவின் பேச்சுக்கு திமுக தொண்டர்கள் மத்தியில் பெரும் வரவேற்பும்,கைத்தட்டலும் எழுந்தது. பேச்சுக்கிடையே வைகோ பலமுறை உணர்ச்சிவசப்பட்டு, கண்ணீர் விட்டு அழுதார்.

வைகோ பேசியதாவது:

நீதி வழங்குவதில் தமிழகத்திற்கும், தமிழர்களுக்கும் தனிப் பெரும் வரலாறு உண்டு. அவர் மீதான வழக்கு தமிழகத்திலிருந்துகர்நாடகத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இது தமிழனுக்குக் கிடைத்த அவமானம்.

நீதியை நிலை நாட்ட நம் மண்ணில் நகழ்ந்த வரலாறுகள் ஏராளம். அந்த வரலாறுகளை எல்லாம் காலில் போட்டு மிதித்து விட்டார்ஜெயலலிதா. அனைத்தையும் களங்கப்படுத்தி விட்டார்.

கலைஞருக்கு தைரியமில்லை என்கிறார் அந்த ஆணவம் பிடித்த ஜெயலலிதா. யாரைப் பார்த்து யார் தைரியம் இல்லாதவர் என்றுசொல்வது? அந்தத் தகுதி ஜெயலலிதாவுக்கு உள்ளதா?

தமிழகத்தில் மகத்தான பாதை அமைக்கின்ற வகையில் இந்த மாநாடு அமைந்துள்ளது. திண்டுக்கல் ரயில் நிலையத்தில் மாற்றுக்கட்சியினரால் கருணாநிதிக்கு அவமதிப்பு வந்திட்டபோதும், அவரைக் குறி வைத்து அழிக்க முயன்றபோதும் பாதுகாத்து நின்றுகொண்டிருந்த தம்பி என்ற உரிமையில் இங்கு பேசுகிறேன்.

ஐம்பெரும் காப்பியமாக, ஐந்தாவது முறை கருணாநிதி தலைமையில் ஆட்சி அமைய நாடே எதிர்பார்க்கிறது, தமிழகம்அழைக்கிறது என்றார் வைகோ.

ராமதாஸ்:

பாமக நிறுவனர் ராமதாஸ் பேசுகையில்,

தமிழக சட்டசபைக்கு செப்டம்பர் மாதவாக்கில் தேர்தல் வரலாம் என்று தெரிகிறது. சம்பந்தப்பட்டவர்களின் ஆஸ்தானஜோதிடர்கள் நாள் கூட குறித்து விட்டதாக பேச்சு உள்ளது. எனவே தேர்தலுக்கு கூட்டணியினர் இப்போதே தயாராக வேண்டும்.

வீரப்பன், திருட்டு விசிடி, வீராணம் ஆகியவை எங்களது சாதனைகள் என்று அதிமுகவினர் கூறுகிறார்கள்.

ஆனால் கல்வி, வேலைவாய்ப்பின்மை, வறுமை ஆகிய 3 முக்கிய அம்சங்களில் அதிமுக அரசு தோல்வியடைந்து விட்டது.

மரங்களைவெட்டியதாக கூறும் இந்த அரசு, தமிழகத்தின் முன்னேற்றத்தை, வளர்ச்சியை வெட்டிச் சாய்த்ததை மறுக்க முடியுமா?அதிமுக அரசு ஜனநாயக விரோத அரசு, இதை அகற்றிய ஆக வேண்டும் என்றார்.

நல்லகண்ணு:

இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் நல்லகண்ணு பேசுகையில, காவல்துறையை மட்டும் தமிழக அரசு நம்பியுள்ளது. அதைக்கொண்டு தேர்தலில் பல்வேறு முறைகேடுகளைச் செய்ய அதிமுக அரசு திட்டமிட்டுள்ளது.

எம்.ஜி.ஆர். கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பன், மார்க்சிஸ்ட் செயலாளர் வரதராஜன், தமிழக முஸ்லீம் முன்னேற்றக் கழக தலைவர்ஜவாஹிருல்லாஹ், உழவர் உழைப்பாளர் கட்சித் தலைவர் செல்லமுத்து, மூவேந்தர் முன்னேற்றக் கழக தலைவர் டாக்டர்சேதுராமன் உள்ளிட்ட தலைவர்களும் பேசினர்.

Mail this to a friend  Post your feedback  Print this page 

பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X