For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மோடிக்கு விசா மறுப்பு: இந்திய மனித உரிமை கமிஷனே காரணம்

By Staff
Google Oneindia Tamil News

வாஷிங்டன்:

நரேந்திர மோடிக்கு விசா மறுக்கப்பட்டதற்கு அமெரிக்காவில் உள்ள எந்த அமைப்பும் காரணமல்ல, அதற்கு இந்திய மனிதஉரிமைக் கமிஷனின் அறிக்கை தான் காரணம் என அமெரிக்கா கூறியுள்ளது.

பல்லாயிரம் அப்பாவி உயிர்கள் பலியாகக் காரணமாக இருந்த குஜராத் மதக் கலவரத்தை திட்டமிட்டு, முன்னின்று நடத்தியதாகக்கூறி நரேந்திர மோடிக்கு விசா வழங்க அமெரிக்கா மறுத்துவிட்டது.

இதற்கு அமெரிக்காவில் உள்ள சில இந்திய எதிர்ப்பு அமைப்புகளே காரணம் என பாஜக குற்றம் சாட்டியுள்ளது.

ஆனால், இதை அமெரிக்கா மறுத்துள்ளது. குஜராத் மதக் கலவரம் தொடர்பாக இந்திய மனித உரிமை ஆணையம் நடத்தியவிசாரணையும் அதன் அறிக்கைகளும் தான் மோடிக்கு விசா மறுக்க அடிப்படையாக அமைந்தன என அமெரிக்காவிளக்கமளித்துள்ளது.

அமெரிக்க வெளியுறவுத்துறை துணை செய்தித் தொடர்பாளர் ஆடம் எரிலி வாஷிங்டனில் நிருபர்களிடம் பேசுகையில்,

குரஜாத் மதக் கலவரத்துக்கு காரணமே நரேந்திர மோடி தான் என்பதில் அமெரிக்காவுக்கு எந்த சந்தேகமும் இல்லை. இந்தக்கலவரம், அப்பாவி உயிர்கள் பலியானது ஆகியவை குறித்து நாங்கள் விசாரணை நடத்தவில்லை. விசாரித்தது இந்தியஅமைப்புகளும் இந்திய அரசும் தான்.

குஜராத் மதக் கலவரத்தை ஒடுக்க அம் மாநில அரசு முழுமையாகத் தவறிவிட்டதை அவை நடத்திய விசாரணைகள் வெட்டவெளிச்சமாக்கிவிட்டன.

இந்திய மனித உரிமைக் கமிஷனும் நரேந்திர மோடியைத் தான் குறை கூறியுள்ளன. மதரீதியில் மனித உயிர்களை பலியாவதைத்தடுக்க மோடியின் அரசு நடவடிக்கை எடுக்காதததை சுட்டிக் காட்டியுள்ளது கமிஷன்.

ஆக, மோடி தவறு செய்தாரா இல்லையா என்று ஆராய்ந்து குறை சொன்னது அமெரிக்க அல்ல. சொல்வது இந்திய மனித உரிமைத்தலைமை அமைப்பு தான். அந்தக் கமிஷன் வெளியிட்ட கருத்துக்களின் அடிப்படையில் விசாரணை நடத்திய பின்னர் தான்மோடிக்கு விசா தருவதில்லை என்ற முடிவுக்கு அமெரிக்க அரசு வந்தது.

ஏற்கனவே தனக்குத் தரப்பட்ட விசாவை ஏன் அமெரிக்கா ரத்து செய்தது என்று மோடி கேள்வி கேட்டுள்ளார். அந்த விசாஅவருக்குத் தரப்பட்டது குஜராத் மத ரணகளத்துக்கு முன்னால் என்றார் எர்லி.

அமெரிக்காவுக்கு பிரதமர் கோரிக்கை:

இதற்கிடையே மாநிலங்களவையில் பேசிய பிரதமர் மன்மோகன் சிங்,

நரேந்திர மோடியின் விசா ரத்து செய்யப்பட்டது கவலை தருகிறது. இதை அமெரிக்காவின் தவறான நடவடிக்கையாகவே மத்தியஅரசு கருதுகிறது. இது தேவையில்லாத ஒரு நடவடிக்கை.

இதனால் இந்த நடவடிக்கையை திரும்பப் பெற்று மீண்டும் விசா வழங்குமாறு அமெரிக்காவிடம் கோரப்பட்டுள்ளது என்றார்.

வீடியோ கான்பரன்சிங் பேசும் மோடி:

இதற்கிடையே அமெரிக்கா செல்ல விசா மறுக்கப்பட்ட நரேந்திர மோடி வீடியோ கான்பரசிங் மூலம் வட அமெரிக்க இந்தியர்கள்சங்கம் ஏற்பாடு செய்துள்ள பொது கூட்டத்தில் பேசுவார் என்று தெரிகிறது.

நியூயார்க்கில் மேடிசன் ஸ்கொயர் கார்டன் மைதானத்தில் அமைக்கப்படவுள்ள பெரிய திரையில் மோடி தோன்றி அங்குகூடியிருப்போர் மத்தியில் பேசவுள்ளார். நாளை இந்தக் கூட்டம் நடக்கிறது. இக் கூட்டத்தில் 10,000 இந்தியர்கள்பங்கேற்கவுள்ளதாக இந்தியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

மனித உரிமை ஆணையர் கருத்து தெரிவிக்க மறுப்பு:

மோடி விவகாரம் குறித்து இந்திய மனித உரிமை ஆணைய தலைவர் ஏ.எஸ்.ஆனந்திடம் கேட்கப்பட்டது. ஆனால் அவர் எந்தக்கருத்தையும் தெரிவிக்க மறுத்து விட்டார். இந்த விவகாரம் குறித்து மத்திய அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. எனவே இதில் நான் கருத்து கூற எதுவும் இல்லை என்று நீதிபதி ஆனந்த் தெரிவித்தார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X