இந்தோனேஷியா: இன்று மீண்டும் நிலநடுக்கம்
Subscribe to Oneindia Tamil
ஜகார்த்தா:
இந்தோனேஷியாவிலுள்ள சுமத்ரா தீவில் இன்றும் நிலநடுக்கம் ஏற்பட்டது.
சுமத்ரா தீவில் தினமும் நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. கடந்த 3 மாதங்களில் இதுவரை 200 முறைக்கும் அதிகமாக இங்குநிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
கடந்த டிசம்பர் 26 மற்றும் மார்ச் 28ம் தேதிகளில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதால் அதன் தொடர்ச்சியாக நில அதிர்வுஏற்படுவதே இதற்கு காரணம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
இந் நிலையில் இன்று அதிகாலை சுமத்ரா தீவில் மீண்டும் நில நடுக்கம் ஏற்பட்டது. இந்திய நேரப்படி அதிகாலை 1.10மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
ரிக்டர் அளவு கோலில் இது 5.1 ஆக பதிவாகியிருந்தது. வடக்கு சுமத்ராவிலுள்ள மேற்கு கடற்கரை பகுதியில் இந்த நிலநடுக்கம்மையம் கொண்டிருந்தது.












Click it and Unblock the Notifications