For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

புளு பிலிம்- ஜெயேந்திரரின் பெண் தொடர்புகள்: ரவி சுப்பிரமணியம் பகீர் சாட்சியம்

By Staff
Google Oneindia Tamil News

காஞ்சிபுரம்:

Ravi ஜெயேந்திரர் பல பெண்களுடன் இருந்துள்ளதை நேரில் பார்த்துள்ளதாக காண்டாக்டர் ரவி சுப்பிரமணியம் கூறியுள்ளார்.

காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் நீதிபதி உத்தமராஜன் முன் அப்ரூவரரான ரவி சுப்பிரமணியத்திடம் ஜெயேந்திரரின் வழக்கறிஞர்கள்குறுக்கு விசாரணை நடத்தினர். அதற்கு முன் ரவி சுப்பிரமணியம் தனது சாட்சியத்தை அளித்தார்.

அப்போது ஜெயேந்திரர், விஜயேந்திரர் தவிர இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 22 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர்.சங்கராச்சாரியார்கள் இருவரும் நீதிமன்றத்துக்கு வரவில்லை.

அப்போது சத்தியமாகக் கூறுகிறேன் என்று சொல்லிவிட்டு ரவி சுப்பிரமணியம் கூறிய அதிர்ச்சிகரமான தகவல்கள்:

லீலாவுடன் அரட்டை:

நான் பிராமண வகுப்பைச் சேர்ந்தவன். என் மனைவி சித்ரா, நாயுடு சமூகத்தைச் சேர்ந்தவர். 1994ம் ஆண்டில் எனக்கும்மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு தோன்றியதால் பிரிந்துவிட்டோம்.

தனியார் நிறுவனங்களில் பணியாற்றி வந்த நான் பின்னர் கட்டட காண்ட்ராக்ட் எடுத்து செய்ய ஆரம்பித்தேன். என் நண்பர்விஸ்வநாதன் மூலமாக காஞ்சி மடத்துடன் தொடர்பு கிடைத்தது. விஸ்வநாதனின் அக்காள் லீலாவுக்கும் ஜெயேந்திரருக்கும்நெருங்கிய தொடர்பு இருந்து வந்தது.

லீலாவும் ஜெயேந்திரரும் மணிக்கணக்கில் டெலிபோனில் அரட்டை அடிப்பது வழக்கம். அவர் மூலமாக ஜெயேந்திரரின்அறிமுகம் கிடைத்தது.

சரஸ்வதியிடம் தகாத செயல்:

1995ம் ஆண்டில் நான், விஸ்வநாதன், அவரது மனைவி சரஸ்வதி மூன்று பேரும் தாம்பரத்தில் ஜெயேந்திரர் தங்கியிருந்தகல்யாண மண்டபத்தில் அவரை சந்திக்கப் போனோம். இரவு நேரத்தில் ஜெயேந்திரரை நாங்கள் தனித்தனியாக சந்திக்கவைக்கப்பட்டோம்.

பின்னர் மூவரும் வீட்டுக்குத் திரும்பியபோது, தன்னிடம் ஜெயேந்திரர் தகாத முறையில் நடக்க முயன்றதாக சரஸ்வதி எங்களிடம்கூறினார்.

இதையடுத்து ஜெயேந்திரரை கண்டிக்குமாறு லீலாவிடம் சொன்னோம். அவரும் ஜெயேந்திரருடன் பேசினார். இதைத் தொடர்ந்துசரஸ்வதியிடம் டெலிபோனிலேயே ஜெயேந்திரர் மன்னிப்பு கேட்டார்.

அதே சமயம் நானும் லீலாவும் தொடர்ந்து, அடிக்கடி காஞ்சி மடத்துக்கு சென்று வந்தோம். லீலாவுடன் மணிக்கணக்கில்ஜெயேந்திரர் தனியே பூட்டிய அறையில் இருப்பார். இந்த விஷயங்கள் எல்லாம் எனக்குத் தெரிந்து போனதால், என்னை சங்கராகல்லூரிக் குழுவின் உறுப்பினராக ஜெயேந்திரர் நியமித்தார்.

அந்தக் கல்லூரிக்காக கட்டடம் கட்ட ரூ. 1.6 கோடி செலவிட திட்டமிட்டார். அந்தப் பணியை என்னிடம் தந்தார். நான் கட்டித்தந்தேன். இதையடுத்து காஞ்சி மடத்தின் பல கட்டட வேலைகளை எனக்குத் தந்தார் ஜெயேந்திரர்.

Jayendrarமதிய நேரத்தில் பெண்களுடன்..

ஜெயேந்திரருக்கு பெண்கள் விஷயத்தில் நிறைய தொடர்பு இருந்தது. மதிய நேரத்திலேயே தனது அறைக்குள் பல பெண்களுடன்அவர் இருப்பதை பார்த்திருக்கிறேன்.

பிரேமா:

மடத்தின் சைல்ட் டிரஸ்ட் மருத்துவமனையின் இயக்குனர் நடராஜனின் மனைவி பிரேமா, ஹைதராபாத்தில் ஆல் இந்தியாரேடியோவில் வேலை பார்க்கும் பெண் ஆகியோரை ஜெயேந்திரருடன் தவறான நிலையில் நான் பார்த்திருக்கிறேன்.

பத்மா-ரேவதி:

மருத்துவமனையின் கேண்டீன் வைத்திருக்கும் பத்மாவையும் மதிய நேரத்தில் ஜெயேந்திரருடன் பார்த்திருக்கிறேன். மடத்துக்குச்சொந்தமான நசரத்பேட்டை பள்ளியின் முதல்வர் ரேவதியும் ஜெயேந்திரருடன் பார்த்திருக்கிறேன்.

மதிய ஓய்வு நேரத்தில், பக்தர்களை சந்திக்காதபோது இவர்களுடன் இருந்துள்ளார் ஜெயேந்திரர்.

புளு பிலிம்:

இதைத் தவிர நிறைய புளு பிலிம் படங்களையும் ஜெயேந்திரர் பார்ப்பார். மதியம் 1.30 மணி முதல் மாலை 3 மணி வரைஇதெல்லாம் நடக்கும்.

2000ம் ஆண்டில் ஒருநாள் 25 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணுடன் ஜெயேந்திரர் இருந்தார். அநத நேரத்தில் ஒரு மிகப் பெரியதொழிலதிபரின் மனைவி ஜெயேந்திரரை சந்திக்க வந்துவிட்டார். அவர் மிகப் பெரிய இடம் என்பதால் அனுமதி இல்லாமலேயேஜெயேந்திரரின் அறைக்குள் நுழைய வந்துவிட்டார்.

அரைகுறை ஆடையுடன் இளம்பெண்:

இதனால் பக்கத்து அறையில் இருந்த என்னை அவரசமாக அழைத்த ஜெயேந்திரர், அந்த ஆந்திரா பெண்ணின் கணவரைப் போலநடிக்குமாறு கூறினார். ஜெயேந்திரின் அறைக்குள் அரைகுறை ஆடையுடன் இருந்த அந்த இளம் பெண்ணின் அருகில் அவரதுகணவர் போல நடித்தேன். தொழிலதிபரின் மனைவி வந்துவிட்டுப் போகும் வரை அப்படியே உட்கார்ந்திருந்தேன்.

காஞ்சி மடத்துக்கு நிறைய காண்ட்ராக்ட் வேலைகள் செய்தும் எனக்கு பெரிய லாபம் கிடைத்துவிடவில்லை.

கமிஷன் பார்ட்டி அய்யர்:

இதற்குக் காரணம் கமிஷன் மாஸ்டரான சுந்தரேச அய்யர். அவருக்கு அதிக கமிஷன் கொடுக்கும் திருச்சி எஸ்.ஜி.ஆர்.நிறுவனத்திற்கு அதிக கட்டட வேலைகளை தந்தார் அய்யர். இதனால் அய்யருக்கு நிறைய லாபம் கிடைத்தது.

இந் நிலையில் 1998ம் ஆண்டில் திருவெற்றியூரில் சங்கரா காலனி கட்ட ரூ. 12 கோடி திட்டத்தை எனக்குத் தந்தார் ஜெயேந்திரர்.இந் நிலையில் ஸ்டெர்லிங் கன்ஸ்ட்ரக்ஷன் என்ற நிறுவனம் ரூ. 50 லட்சம் கமிஷன் தந்து அந்தப் பணியை ஜெயேந்திரரிடம்இருந்து பெற்றுக் கொண்டது. இதனால் எனக்கு அந்த காண்ட்ராக்ட் கிடைக்கவில்லை.

எனக்கு காண்ட்ராக்ட் கொடுத்தால் ஜெயேந்திரருக்கு அவரது பிறந்த நாளையொட்டி தங்கத்தால் ஏதாவது செய்து கொடுப்பேன்.63,64வது பிறந்த நாள்களின்போது ரூ. 4.5 லட்சத்தில் தங்க கிரீடம் செய்து போட்டேன்.

அப்பு அறிமுகம்:

இந் நிலையில் 2001ம் ஆண்டில் அப்புவை எனக்கு நண்பர் சரவணன் அறிமுகப்படுத்தினார். அரசாங்கத்தால் அப்புவுக்கு சிலதொல்லைகள் இருப்பதாகவும் அதை சரி செய்ய ஜெயேந்திரரின் உதவி வேண்டும் என்றும், அதற்கு ஏற்பாடு செய்யுமாறும்சரவணன் கூறினார்.

இதையடுத்து அப்பு, கதிரவன் ஆகியோருடன் சென்று ஜெயேந்திரரை சந்தித்தேன். அப்போது அப்பு பற்றி விசாரித்து அறிந்தஜெயேந்திரர், பின்னர் ஒரு நாள் எங்களை மீண்டும் வரச் சொன்னார்.

அப்போது தன்னை இரண்டு பேர் பிளாக் மெயில் செய்தவாக ஜெயேந்திரர் கூறினார். அதற்கு அப்பு, எதற்கும் கவலைப்படாதீர்கள்என்று ஆறுதல் கூறினார்.

ஒருநாள் காலை 8 மணிக்கு என்னை மடத்துக்கு வரவழைத்தார் ஜெயேந்திரர். அப்போது ரகுவிடம் இரண்டு போட்டோக்களைஎடுத்து வரச் சொன்னார். அந்த போட்டோக்களை என்னிடம் கொடுத்தார். அதில் இருந்தவர்கள் சங்கரரராமனும் ஆடிட்டர்ராதாகிருஷ்ணனும்.

சங்கரராமன்- ராதாகிருஷ்ணன்:

அந்த போட்டோக்களின் பின்னாள் ரகுவை விட்டு அவர்களது முகவரியை எழுத வைத்த ஜெயேந்திரர் அவற்றை கதிரவனிடம்தரச் சொன்னார். அவ்வாறே செய்தேன்.

இதையடுத்து ஒரு நாள் என்னை போனில் தொடர்பு கொண்ட ஜெயேந்திரர், ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட விவரத்தைச்சொல்லி, இனிமேல் எனக்கு பிரச்சனை வராது என்று சொல்லி சந்தோஷப்பட்டார்.

தாக்கப்பட்ட ராதாகிருஷ்ணனுக்கு மறுநாள் நீலகண்ட அய்யர், நெய்வேலி கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் மூலம் பிரசாதம் கொடுத்துஅனுப்பினார் ஜெயேந்திரர்.

2004ம் ஆண்டு மகாமகத்துக்கு முதல் நாள் தஞ்சாவூர் சாஸ்தா கல்லூரியில் வந்து தன்னை சந்திக்கச் சொன்னார் ஜெயேந்திரர்.நானும் போனேன். அப்போது ஆயிரம் ரூபாய் கட்டு ஒன்றை என்னிடம் தந்த ஜெயேந்திரர் அதை கதிரவனிடம் ஒப்படைக்கச்சொன்னார்.

அதை கதிரவனிடம் தந்தேன். 01.09.04ம் தேதி காஞ்சி ஜெயபாலா ஹோட்டலுக்கு நானும் அப்புவும் இரவு 7 மணிக்குப்போனோம். அங்கு எங்களை ஜெயேந்திரர் வரச் சொல்லியிருந்தார். நாங்கள் அந்த ஹோட்டலுக்குச் சென்றபோது, அங்கு சுந்தரேசஅய்யரும் தான் இருந்தார்.

இறுதி எச்சரிக்கை:

அப்போது சங்கரராமன் எழுதிய இறுதி எச்சரிக்கை கடிதத்தை எங்களிடம் ஜெயேந்திரர் தந்தார். இனிமேல் இவனிடம் இருந்துஎனக்கு லெட்டர் வரக் கூடாது என்ற சொன்ன ஜெயேந்திரர், அவனை தீர்த்துக் கட்டுங்கள். 50 லட்சம் ரூபாய் செலவானாலும்பரவாயில்லை என்றார்.

சுந்தரேச அய்யரிடம் திரும்பி, இவர்கள் கேட்கும் பணத்தைத் தந்துவிடு.. 50 லட்சமானாலும் சரி என்றார்.

இதையடுத்து விஜயேந்திரரை பார்த்துவிட்டுப் போகுமாறு ஜெயேந்திரர் கூறினார். நாங்களும் விஜயேந்திரரை போய் சந்தித்துசங்கரராமனைக் கொல்லுமாறு ஜெயேந்திரர் சொன்னதைக் கூறினோம்.

அப்போது தனது தம்பி ரகுவிடம், கொலைக்குத் தேவையான பணத்தை ஏற்பாடு செய்யுமாறு விஜயேந்திரர் கூறினார்.

காஞ்சிபுரத்தில இருந்து காரில் சென்னைக்குத் திரும்பினோம். அப்போது தனது அடியாள் கதிரவனிடம், சங்கரராமனைமுடித்துவிடு என அப்பு உத்தரவு போட்டார்.

காலியான சங்கரராமன்:

மறுநாள் நானும் கதிரவனும் காரில் காஞ்சிபுரம் போனோம். வரதராஜ பெருமாள் கோவில் 16 கால் மண்டபம் அருகே சென்றபோதுரஜினி என்ற சின்னாவும் வந்து காரில் ஏறிக் கொண்டான். ரஜினிக்கு சங்கரராமனின் வீட்டை கதிரவன் அடையாளம் காட்டிவிட்டு,இன்னிக்கே அவன் கதையை முடித்துவிடு என்ற கதிரவன், அவனுக்கு ரூ. 10,000 தந்தார்.

பின்னர் ஜெயேந்திரரை பார்த்துவிட்டு சென்னை திரும்பிவிட்டோம். 03.09.04ம் தேதி அப்பு எனக்கு போன் செய்து சோழாஹோட்டலுக்கு வரச் சொன்னார். மாலை 5.30 மணிக்கு நான் போய் அவரைப் பார்த்தேன்.

6.15 மணியளவில் அங்கு ஓடி வந்த கதிரவன், சங்கரராமனை கொன்றுவிட்டோம் என்பதை சைகை மூலம் சொன்னார்.இதையடுத்து ஜெயேந்திரர் முன்பே சொன்னபடி கதிரவனுக்கு ரூ. 10 லட்சத்தைத் தந்தேன். அதை ஒரு பேப்பரில் எழுதி வாங்கிக்கொண்டேன். (இது ஜெயேந்திரரிடம் ஒப்படைக்கப்பட்ட ரசீது)

நள்ளிரவில் அப்புவிடம் இருந்து போன் வந்தது. அவரது ஆற்காடு ரோடு வீட்டுக்கு ஓடினேன். அப்போது ஜெயேந்திரரைதொடர்பு கொள்ளவே முடியவில்லை என்று அப்பு கோபத்துடன் கூறினார்.

நான் இங்கிருக்க வேண்டாம் என்று சொன்ன அப்பு என்னை மும்பைக்கு போகச் சொன்னார். நானும் பிளைட்டில் மும்பைபோனேன். அதற்கு முன் ஜெயேந்திரரை தொடர்பு கொண்டு சங்கரராமன் கொலை செய்யப்பட்டதைக் கூறினேன். மும்பையில் ஒருநாள் மட்டும் தங்கிவிட்டு திரும்பி வந்துவிட்டேன்.

ஜெயேந்திரர் தந்த ஸ்வீட் பாக்ஸ்:

ஆனால், வீட்டுக்குப் போகாமல் மாப்ஸ் இன் ஹோட்டலில் தங்கினேன். அங்கிருந்தபடியே நண்பர் விஸ்வநாதன் வீட்டைதொடர்பு கொண்டேன். எல்லோரும் பிள்ளையார் பட்டி போகலாம் என்று கூறினேன். கிளம்பி வந்து என்னையும் பிக்-அப் செய்யச்சொன்னேன்.

திட்டமிட்டபடி காரில் கிளம்பி திருச்சி போனோம். ஆனந்த் இன் ஹோட்டலில் தங்கினோம். மறுநாள் காலை பிள்ளையார்பட்டிசென்று தரிசனம் முடித்துவிட்டு திருச்சிக்கு திரும்பினோம்.

அங்கிருந்து ஜெயேந்திரருக்கு போன் போட்டேன். மறுநாள் என்னை மடத்துக்கு வரச் சொன்னார். அன்று கிருஷ்ண ஜெயேந்தி.நான் அவரை சந்தித்தபோது 5 லட்சத்தைத் தந்து அதை கதிரவனிடம் தரச் சொன்னார். மேலும் கிருஷ்ணா ஸ்வீட்ஸ் என்றகடையில் வாங்கப்பட்ட பெரிய இனிப்பு பெட்டியையும் என்னிடம் தந்தார்.

எதிரி தொலைந்தான். நான் ரொம்ப ஹேப்பியாக இருக்கிறேன் என்றார் ஜெயந்திரர்.

அந்த ஸ்வீட் பாக்ஸில் இருந்த குருவாயூரப்பன் படத்தை மட்டும் எடுத்துக் கொண்டு பணத்தையும் ஸ்வீட்டையும் கதிரவனிடம்தந்தேன். இது நடந்தது தியாகராயநகர் சாம் கிளப்பில்.

பணம்.. பணம்... பணம்:

05.10.04ம் ஆண்டு மேல்மருத்தூர் அருகே கடமைப்புதூருக்கு என்னை வரச் சொன்னார் ஜெயேந்திரர். அங்கு போனேன். மறுநாள்காலை சுந்தரேச அய்யரை பார்க்கச் சொன்னார். நான் அய்யரைப் பார்த்தவுடனேயே ரூ. 5 லட்சத்துக்கு ஒரு செக் கொடுத்தார்.அதை பணமாக்கி கதிரவனிடம் தரச் சொன்னார்.

நானும் அதை பணமாக்கி அமராவதி ஹோட்டலில் கார் பார்க்கிங்கில் வைத்து அப்பு-கதிரவனிடம் தந்தேன்.

இந் நிலையில் கொலை கேஸை போலீசார் தீவிரமாக விசாரிக்க ஆரம்பித்திருந்தனர். அப்போது ஜெயேந்திரரை பார்க்கப்போனேன். அப்போது என்னிடம் பேசிய ஜெயேந்திரர், இந்த விவகாரம் குறித்து வாயைத் திறக்கப்படாது.. யாரிடமாவதுஉளறினால் எனக்கு அப்புவையும் தெரியாது சுப்புவையும் தெரியாது என்று சொல்லிவிட்டு.. உன்னைக் கையை காட்டிவிடுவேன்என்று மிரட்டும் பாணியில் சொன்னார்.

இது எனக்கு கவலையையும் பயத்தையும் தந்தது. அடுத்த சில நாட்களில் கதிரவன் என்னை ராடிசன் ஹோட்டலுக்கு வரச்சொன்னார். நானும் போனேன். போலீசார் இந்த விஷயத்தை தீவிரமாக விசாரிப்பதாக சொன்ன கதிரவன் தனக்கு மேலும் ரூ. 20லட்சம் வேண்டும் என்றார்.

போலி குற்றவாளிகள் சரண்:

எதற்கு என்று நான் கேட்டதற்கு, கொலையாளிகளாக 5 போலி குற்றவாளிகளை தயார் செய்ய வேண்டும், மேலும் கொலைக்குபயன்படுத்தப்பட்ட வாகனங்கள் என்று காட்ட சில பைக்குகள், கார் வாங்க வேண்டும்.. அதுக்குத் தான் பணம் வேண்டும் என்றார்.

இது பற்றி ஜெயேந்திரரிடம் சொன்னேன். 2 நாள் கழித்து வரச் சொன்னார். திரும்பவும் போனேன். சுந்தரேச அய்யரை கூப்பிட்டஜெயேந்திரர் பார்கவ் புரோக்கரிடம் இரும்பு வாங்கிய அட்வான்ஸ் பணம் ரூ. 20 லட்சத்தை என்னிடம் தரச் சொன்னார்.

அதை என்னிடம் தந்தார் அய்யர். அதை அப்படியே அமராவதி ஹோட்டலில் வைத்து அப்புவிடம் தந்தேன்.

ஆந்திராவுக்கு எஸ்கேப்:

இந்தப் பணம் மூலம் 5 போலி குற்றவாளிகள் சரண்டராகினர். அதற்கான வேலையை கதிரவன் செய்து முடித்தான். இதனால்ஜெயேந்திரர் மகிழ்ந்து போயிருந்தார். அந்த நேரத்தில் கதிரவனையே போலீசார் மடக்கிப் பிடித்துவிட்டனர்.

கதிரவன் மாட்டிக் கொண்டதால் அதிர்ந்து போன ஜெயேந்திரர் ஆந்திரா நோக்கி கிளம்பிவிட்டார். நானும் தமிழகத்தில் இருக்கபயந்து போய் ஊர் ஊராக சுற்றிக் கொண்டிருந்தேன். ஆனால், குருவாயூரில் வைத்து என்னை போலீசார் மடக்கிவிட்டனர்.

இவ்வாறு ரவி சுப்பிரமணியம் வாக்குமூலம் தந்தார். சுமார் இரண்டரை மணி நேரம் அவர் வாக்குமூலம் தந்தார்.

ஜெயேந்திரர் குறித்து ரவி பேசியபோதெல்லாம் ஜெயேந்திரர் தரப்பு வழக்கறிஞருக்கும் ரவியின் வழக்கறிஞருக்கும் இடையேவாக்குவாதம் மூண்டது.

ரவியிடம் அரசு வழக்கறிஞர் எஸ்.தியாகராஜன் கேள்விகள் கேட்டு பதில்களை வாங்கினார்.

ரவியிடம் வரும் 11ம் தேதி குறுக்கு விசாரணை நடைபெறவுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X