For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மோசடியில் ஈடுபட்டது ஜெயலட்சுமிதான்: சிபிஐ அறிக்கை

By Staff
Google Oneindia Tamil News

மதுரை:

ஜெயலட்சுமி வழக்கில் சிபிஐ தனது இறுதி அறிக்கையை நேற்று தாக்கல் செய்தது.

Jayalakshmiஅதில், ஜெயலட்சுமி தான் போலீஸாரை மயக்கி பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டார் என்று கூறப்பட்டுள்ளது. இதனால்ஜெயலட்சுமி விவகாரத்தில் பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

ஜெயலட்சுமி வழக்கை விசாரித்து வரும் சிபிஐ, முதலில் தனது இடைக்கால அறிக்கையை மதுரை உயர்நீதிமன்ற கிளையில்தாக்கல் செய்தது. இன்னும் பலரிடம் விசாரணை நடத்த வேண்டியுள்ளதால் இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய கால அவகாசம்வேண்டும் என சிபிஐ அதிகாரிகள் கூறினர்.

இதற்கு உயர்நீதிமன்ற கிளை அனுமதி அளித்தது. இந் நிலையில் சிபிஐ தனது இறுதி அறிக்கையை நேற்று தாக்கல் செய்தது. 100பக்கங்களைக் கொண்ட இந்த இறுதி அறிக்கையில் 502 ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன.

இந்த அறிக்கையில் ஜெயலட்சுமி கூறிய புகார்களில் உண்மையில்லை என்றும், அவர் தான் போலீஸாரை மயக்கி மோசடிகள்செய்தார் என்றும் கூறப்பட்டுள்ளது.

சில போலீஸார் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், வீட்டுக்குள் பூட்டி வைத்து சித்ரவதை செய்ததாகவும், தன்னிடம்அவர்கள் பணமோசடி செய்ததாகவும் ஜெயலட்சுமி தனது வாக்குமூலத்தில் கூறியிருந்தார். இது தொடர்பாக சாட்சிகளிடம்விசாரித்தபோது, அவர் கூறிய குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை என்றும் தெரியவந்தது.

மல்டி வெவல் மார்க்கெட்டிங் தொழில்செய்த தான், தொழில் நிமித்தமாகவே போலீஸாரை சந்தித்ததாக ஜெயலட்சுமிகூறியிருந்தார். ஆனால் உண்மையில் தனது தொழிலை வளர்த்துக் கொள்ள போலீஸாரை ஒரு துருப்புச் சீட்டாக பயன்படுத்திக்கொள்ளவே அவர் போலீஸாரிடம் பழகியுள்ளார்.

போலீஸ் வட்டாரத்தில் தன்னை ஒரு பெண் போலீஸ் என்று அறிமுகம் செய்துள்ளார். அதன் பிறகு டிஎஸ்பி ராஜசேகருடன்நெருக்கத்தை ஏற்படுத்தி அவரை திருமணம் செய்துள்ளார். இந்த திருமணத்தின் மூலம் மற்ற போலீஸ் அதிகாரிகளுடன் அவர்பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார்.

அவர்கள் மூலம் வெளியிடங்களில் லட்சக்கணக்கில் கடன் வாங்கியுள்ளார். இது தவிர நகைகள் மற்றும் விலை உயர்ந்தபொருட்கள் ஆகியவற்றையும் வாங்கிக் குவித்துள்ளார்.

ஜெயலட்சுமி கூறிய புகார்கள் உண்மைக்குப் புறம்பானவை என்றாலும், இந்த வழக்கில் டிஎஸ்பி ராஜசேகர், இன்ஸ்பெக்டர்கள்மலைச்சாமி, இளங்கோவன், சுந்தர வடிவேல், சுப்புராம், மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் ஷாஜகான் ஆகியோர் மீது கூறப்பட்டபுகார்கள் உண்மை என்று தெரியவந்துள்ளதால் ஜெயலட்சுமியோடு சேர்த்து அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுஇறுதி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

போலீசாரால் தான் மோசம் போய்விட்டதாகக் கூறி சிபிஐ விசாரணை கோரிய ஜெயலட்சுமி, சிபிஐயின் விசாரணையில் வசமாகமாட்டிக் கொண்டுள்ளார்.7 போலீஸாருக்கு சம்மன்:

இந் நிலையில் ஜெயலட்சுமியின் தாயார் மற்றும் குழந்தைகளை கடத்தியதாக தொடரப்பட்டுள்ள வழக்கில் குற்றப் பத்திரிக்கைநகலைப் பெற்றுக் கொள்ள வருமாறு 7 போலீஸாருக்கு மதுரை தலைமை குற்றவியல் நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

இன்ஸ்பெக்டர்கள் வெள்ளையன், ஷாஜகான் மற்றும் ஏட்டு கண்ணன் உள்ளிட்ட 7 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. 7 பேரும்தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

இந் நிலையில் 7 பேரும் வரும் 20ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகி குற்றப் பத்திரிக்கை நகலைப் பெற்றுக் கொள்ளுமாறு சம்மன்அனுப்பப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X