For Daily Alerts
சங்கரராமன் வழக்கு: உச்சநீதிமன்றத்தில் ஒத்திவைப்பு
டெல்லி:
சங்கரராமன் கொலை வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்றக் கோரி உச்சநீதிமன்றத்தில் ஜெயேந்திரர் தாக்கல் செய்த வழக்குவிசாரணை மே 6ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
குற்றப்பத்திரிகை வழங்கப்பட்ட அன்றே உச்சநீதிமன்றத்தில் ஜெயேந்திரர் சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில்,சங்கரராமன் கொலை வழக்கு தமிழ்நாட்டில் நடந்தால் எனக்கு நீதி கிடைக்காது. எனவே இந்த வழக்கை வேறு மாநிலத்திற்குமாற்ற வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சி.லகோத்தி மற்றும் ஜி.பி.மாதுர்ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச், விசாரணையை மே 6ம் தேதிக்கு ஒத்தி வைத்தது.
| ||||
![]() திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்! |