For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வன்னியர்களுக்காக மருத்துவக் கல்லூரி: ராமதாஸ்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

வன்னிய சமூகத்தினருக்காக மருத்துவக் கல்லூரியுடன் கூடிய பல்கலைக்கழகம், திண்டிவனம் அருகே உருவாகி வருவதாகபாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

வன்னியர் சமூக அமைப்பான, சமூக மேம்பாட்டு மருத்துவ மாமன்ற மாநில மாநாடு சென்னை ராஜா முத்தையா அரங்கில்நடந்தது. இதில் கலந்து கொண்டு ராமதாஸ் பேசுகையில், நமது வன்னிய சமுதாயம் மேலும் முன்னேற்றம் அடைய வேண்டும்.இதற்காக கடுமையாக உழைக்க வேண்டும்.

மருத்துவத் துறையில் நமது சமூகத்தைச் சேர்ந்தவர்கள் சிறப்பிடம் பெற வேண்டும். சிறப்புப் பட்டங்களை அவர்கள் பெறவேண்டும். இவர்களிடம் சென்றால்தான் நமக்கு நல்ல சிகிச்சை கிடைக்கும் என்ற நிலையில் வன்னிய டாக்டர்கள் இருக்கவேண்டும்.

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 70 லட்சம், 80 லட்சம் கொடுத்துத்தான் சேர முடிகிறது. இதனால் நமது சமூகத்தினர் மருத்துவக்கல்லூரிகளில் சேருவது கடினமாக உள்ளது. எனவே நமக்கென தனியாக ஒரு மருத்துவக் கல்லூரி வேண்டும்.

திண்டிவனம் அருகே நமது சமூகத்தினருக்கென 160 ஏக்கர் பரப்பளவில் பல்கலைக்கழகம் உருவாகி வருகிறது. அங்கு மருத்துவக்கல்லூரியும் உருவாக்கப்படும். உலகத் தரத்தில் இந்தப் பல்கலைக்கழகம் உருவாக்கப்படும்.

நமது சதாயத்தைச் சேர்ந்த 2 கோடி மக்களுக்கும் பலன் அளிக்கும் வகையில் இந்த பல்கலைக்கழகம் அமையும். இதை உருவாக்கவன்னியர்களின் முழுமையான ஆதரவு, ஒத்துழைப்பு தேவை.

நமது சமூகத்தைச் சேர்ந்த ஒவ்வொரு டாக்டரும் ரூ. 10,000 கொடுக்க வேண்டும். நமது சமூகத்தைச் சேர்ந்த டாக்டர்கள் 1000பேராவது இருப்பார்கள். எனவே ஆளுக்கு 10,000 கொடுத்தால் ரூ. 1 கோடி சேர்ந்து விடும்.

சமுதாய முன்னேற்ற மாமன்றத்தில் 25,000 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் மாதம் தலா ரூ. 100 அனுப்பிவைத்தால் போதும், நமது சமூகத்தை மிஞ்ச வேறு சமூகம் இல்லை என்ற நிலை உருவாகும்.

நமது சமூகத்தினருக்காக உருவாகி வரும் மருத்துவக் கல்லூரி இன்னும் 2 ஆண்டுகளில் தொடங்கி விடும். அதேபோல, ஐ.ஏ.எஸ்.,ஐ.பி.எஸ். பயிற்சி மையம் இன்னும் 3 மாதங்களில் தொடங்கி விடும். இது உலகத் தரம் வாய்ந்ததாக இருக்கும் என்றார் ராமதாஸ்.

நிகழ்ச்சியில் ராமதாஸின் மகனும், மத்திய சுகாதாரத்துறை அமைச்சருமான அன்புமணியும் பேசினார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X