காங். கூட்டத்தில் சட்டை கிழிப்பு, கார் உடைப்பு

Subscribe to Oneindia Tamil

கொடைக்கானல்:

கொடைக்கானலில் நடந்த தமிழக இளைஞர் காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில் கோஷ்டி மோதல் ஏற்பட்டது. இதில் மாநிலஇளைஞர் காங்கிரஸ் தலைவர் விஷ்ணு பிரசாத் உள்பட பலரின் சட்டைகள் கிழிக்கப்பட்டன.

தமிழக இளைஞர் காங்கிரஸ் கட்சியின் மாநில செயற்குழுக் கூட்டம் கொடைக்கானலில் நடந்தது. இதில் மாநிலத் தலைவர்விஷ்ணு பிரசாத் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இதுதொடர்பாக நகரெங்கும் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்களில் இளங்கோவனின் படம் மற்றும் பெயர் இடம் பெறவில்லை எனகூறப்படுகிறது. இதையடுத்து இளங்கோவன் ஆதரவாளர்கள் செயற்குழுக் கூட்டம் நடந்த ஹோட்டல் முன்பு கூடி ரகளையில்ஈடுபட்டனர்.

அங்கு கட்டப்பட்டிருந்த பேனரை அவர்கள் கிழித்தெறிந்தனர். கார் ஒன்றும் அடித்து நொறுக்கப்பட்டது. அவர்களுக்கு எதிராகஇன்னொரு கோஷ்டியும் மோதலில் இறங்க முயன்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வந்த இளைஞர் காங்கிரஸ் தலைவர் விஷ்ணு பிரசாத் அந்த கோஷ்டிகளிடம்மாட்டிக் கொண்டார். அவரது சட்டையை சிலர் கிழித்தனர். மேலும் பலரின் சட்டைகளும் கிழிக்கப்பட்டன.

பின்னர் விஷ்ணு பிரசாத் ஒரு வழியாக ஹோட்டலுக்குள் அழைத்துச் செல்லப்பட்டார். அதன் பின்னர் செயற்குழுக் கூட்டம்தொடங்கியது. கோஷ்டி மோதல் காரணமாக கூட்டம் வேகமாக நடத்தி முடிக்கப்பட்டது. மோதலில் ஈடுபட்டவர்கள் மதுஅருந்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+