சுலைமான் சேட் மரணம்: தலைவர்கள் இரங்கல்
பெங்களூர்:
இந்திய தேசிய லீக் தலைவர் இப்ராகிம் சுலைமான் சேட், இன்று மணிப்பாலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் வைத்துமரணமடைந்தார்.
இந்திய தேசிய லீக் கட்சியின் தலைவராக இருந்தவர் இப்ராகிம் சுலைமான் சேட் (வயது 83). கேரளாவைச் சேர்ந்த இவர், 1971ம்ஆண்டு கோழிக்கோடு தொகுதியிலிருந்து முதன்முதலாக பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் வளர்ச்சிக்கு இவர் பாடுபட்டார். கேரளாவில் பல முஸ்லிம் அறக்கட்டளை மற்றும்அமைப்புகளுக்கு இவர் தலைவராக இருந்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன் சுலைமான் சேட்டுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து இவர் கர்நாடக மாநிலம்மணிப்பாலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் இன்று காலை அவரது உயிர் பிரிந்தது. உடனடியாக அவரது உடல்அவரது சொந்த ஊரான கோழிக்கோடு மாவட்டத்திலுள்ள மஞ்சேரிக்கு கொண்டு செல்லப்பட்டது. நாளை அவரது உடல் அடக்கம்செய்யப்படுகிறது.
சுலைமான் சேட் மறைவுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில்,இப்ராகிம் சுலைமான் சேட் அரசியல் மாச்சரியங்களுக்கு அப்பாற்பட்டு நட்பைப் பேணுவதிலும் சிறந்து விளங்கிய தலைவர்ஆவார். இந்திய முஸ்லிம் மக்களின் பிரதிநிதியாக தான் சார்ந்துள்ள சமுதாய மக்களின் நலனுக்காக அரும் தொண்டாற்றியவர்என்று குறிப்பிட்டுள்ளார்.
கருணாநிதி இரங்கல்:
திமுக தலைவர் கருணாநிதி விடுத்துள்ள இரங்கல் செய்தியில், இஸ்லாமியர்களின் நல்வாழ்வுக்காகவும், உரிமைகளுக்காகவும் போர் முழக்கம் செய்தவர்இப்ராகிம் சுலைமான் சேட். அவரது பிறப்பும், தொண்டும் என்றும் நினைவில் இருக்கும். அவரது மறைவுக்கு திமுக சார்பில் இரங்கல்களைத்தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
இதே போல முதல்வர் ஜெயலலிதா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தா. பாண்டியன் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் சேட் மறைவுக்குஇரங்கல் தெரிவித்துள்ளனர்.
| ||||
![]() திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்! |