For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெயலட்சுமி மீது 4 மோசடி வழக்குகள்: சிபிஐ அதிரடி

By Staff
Google Oneindia Tamil News

மதுரை:

Jayalakshmiகாவல்துறையினர் தன்னை பாலியல் ரீதியாக சீரழித்ததாக புகார் கூறிய ஜெயலட்சுமி மீது 4 வழக்குகளை சிபிஐ அதிகாரிகள் பதிவுசெய்துள்ளனர். இதுதொடர்பாக மதுரை நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்த நான்கு குற்றப்பத்திரிக்கைகளிலும் ஜெயலட்சுமியேபிரதான எதிரியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

போலீஸார் மீது சரமாரியாக புகார் கூறி தமிழகத்தைப் பெரும் பரபரப்பில் ஆழ்த்தியவர் ஜெயலட்சுமி. போலீஸார் தன்னைஎப்படியெல்லாம் பயன்படுத்திக் கொண்டார்கள் என்பதை வார இதழ்களில் தொடர் கதையாகவும் எழுதி வந்தார்.

இந் நிலையில் ஜெயலட்சுமி கூறிய புகார்களின் அடிப்படையில் விசாரணை நடத்திய சிபிஐ 7 காவல் துறையினர் மீதுகுற்றச்சாட்டுக்களைக் கூறி நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்தது. அதேசமயம், புகார் கூறிய ஜெயலட்சுமியும் பல லட்சம்அளவுக்கு மோசடி செய்துள்ளதாகவும் திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பான விரிவான விவரங்கள் நேற்று மதுரை தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நான்குகுற்றப்பத்திரிக்கைளில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளன.

ஜெயலட்சுமி, இன்ஸ்பெக்டர்கள் இளங்கோவன், மலைச்சாமி ஆகியோர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் 4 வழக்குகளை சிபிஐபதிவு செய்துள்ளது. நான்கு வழக்குகளிலும் ஜெயலட்சுமிதான் முக்கிய எதிரியாக சேர்க்கப்பட்டுள்ளார்.

முதல் குற்றப்பத்திரிக்கை:

மதுரை கிருஷ்ணா நகை மாளிகையில், ஜெயலட்சுமியை இன்ஸ்பெக்டர் இளங்கோவன் அறிமுகப்படுத்தினார். அதன் பின்னர்தனியாக வந்த ஜெயலட்சுமி, 21 பவுனில் நகை செய்ய வேண்டும் என்று கூறி 16 பவுன் நகை ஒன்றை மாடல் பார்க்க வேண்டும்என்று கூறி வாங்கிச் சென்றுள்ளார்.

இன்ஸ்பெக்டர் இளங்கோவனின் பெயரைப் பயன்படுத்தி அந்த நகையை அவர் வாங்கிச் சென்றுள்ளார். அந்தநகையையோ,அதற்கான பணத்தையோ அவர் திருப்பிக் கொடுக்கவில்லை.

இதேபோல, உடுமலைப்பேட்டையில் எம்.ஆர்.எஸ். பேங்கர்ஸில் மலைச்சாமி உதவியுடன் ரூ. 51,500 பணம் கடனாகப்பெற்றுள்ளார். அதையும் திருப்பிக் கொடுக்கவில்லை. இங்கு மலைச்சாமி பெயரைச் சொல்லி பணத்தைத் தராமல் இருந்துள்ளார்.

இந்தக் குற்றங்களுக்காக ஜெயலட்சுமி, இளங்கோவன், மலைச்சாமி ஆகியோர் மீது கூட்டுச் சதி செய்தல் (120பி), மோசடி செய்தல்(420) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது.

இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட நகைக் கடையில் எழுதிக் கொடுக்கப்பட்ட பிராமசி புத்தகம் சான்றாக இணைக்கப்பட்டுள்ளது.சாட்சிகளாக 7 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

2வது குற்றப்பத்திரிக்கை:

ஈரோட்டில் வசிக்கும் இன்ஸ்பெக்டர் இளங்கோவனின் அண்ணன் அய்யாசாமியிடம் சென்று தன்னை சப் இன்ஸ்பெக்டர் என்றுகூறிக் காண்டார் ஜெயலட்சுமி. தனது தம்பி கோவையில் போலீஸ் கண்காணிப்பாளராக இருப்பதாக அவடரிம் கூறியஜெயலட்சுமி, தனது தம்பியின் மூலம் அய்யாசாமியின் மகள் சண்முக சுந்தரத்துக்கு சப் இன்ஸ்பெக்டர் வேலை வாங்கித் தருவதாககூறியுள்ளார்.

இதற்காக அய்யசாமியிடம் ரூ. 2 லட்சம் பணம் வாங்கியுள்ளார். மேலும் சண்முக சுந்தரத்தை மதுரை திருநகரில்சட்டவிரோதமாகவும் ஜெயலட்சுமி அடைத்து வைத்துள்ளார்.

இந்த வழக்கில், 420, 343 (சட்டவிரோதமாக அடைத்து வைத்தல்) ஆகிய பிரிவுகளின் கீழ் ஜெயலட்சுமி மீது வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.11 ஆவணங்களும், 12 சாட்சியங்களும் இதில் சேர்க்கப்பட்டுள்ளன.

3வது குற்றப்பத்திரிக்கை:

மதுரை தீபம் ஜூவல்லர்ஸ் நகைக் கடையில், 56 கிராம் எடை கொண்ட ஐஸ்வர்யா டிசைன் தங்கச் சங்கிலியும், 32 கிராம்எடையுள்ள வளையல்களையும் ஜெயலட்சுமி வாங்கியுள்ளார். இதற்கான மொத்த தொகையில், 16,000 ரூபாயைக் கொடுக்காமல்ஏமாற்றியுள்ளார். இளங்கோவன் இதற்கு உதவியுள்ளார்.

இருவர் மீதும் 420, 419, 120 பி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 5 ஆவணங்களும், 6 சாட்சிகளும்சேர்க்கப்பட்டுள்ளனர்.

4வது குற்றப்பத்திரிக்கை:

கரூரைச் சேர்ந்த விஜய் என்ற ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியிடம் பெட்ரோல் பங்க் நடத்த பணம் வேண்டும் என்று கேட்டு ரூ.1லட்சம் கடன் வாங்கியுள்ளார் ஜெயலட்சுமி. அதற்கு இளங்கோவன் உதவியுள்ளார்.

வாங்கிய பணத்தை மதுரை டவுன்ஹால் ரோடு கனரா வங்கியில் போட்டு வைத்து அதை ஜெயலட்சுமி செலவழித்துள்ளார்.விஜய்யிடம் அப்பணத்தைத் திரும்பக் கொடுக்கவில்லை. இதுதொடர்பாக 17 ஆவணங்களும், 9 பேர் சாட்சிகளாகவும்சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கில் ஜெயலட்சுமி, இளங்கோவன் மீது 120 பி, 420 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

போலீஸார் மீது புகார் கூறிய ஜெயலட்சுமி மீதே, 420 பிரிவின் கீழ் 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது புதிய பரபரப்பைஏற்படுத்தியுள்ளது. விரைவில் இந்த வழக்குகளில் குற்றப்பத்திரிக்கை நகல்கள் வழங்கப்படும்.

சிக்கும் காக்கிகள்:

அதே நேரத்தில் ஜெயலட்சுமியுடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்த எடிஎஸ்பி ராஜசேகர், இன்ஸ்பெக்டர்கள் மலைச்சாமி, சுந்தரவடிவேல் ஆகியோர் மீதும், மாஜி எஸ்பி சொக்கலிங்கம் உள்ளிட்ட 2 அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கமாறு அரசுக்கு சிபிஐபரிந்துரைக்கும் என்று தெரிகிறது.

ஜெயலட்சுமியை கடத்திய விவகாரத்தில் தொடர்புடைய இளங்கோவன், ஷாஜகான் உள்பட மொத்தத்தில் 9 அதிகாரிகள் மீதுதுறைரீதியிலான நடவடிக்கைக்கு சிபிஐ பரிந்துரைக்கவுள்ளதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X