For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எஸ்.பி. பொன் மாணிக்கவேல் மீது மாயமான டிஎஸ்பி சரமாரி புகார்

By Staff
Google Oneindia Tamil News

சேலம்:

காணாமல் போனதாக கூறப்படும் சேலம் மாவட்டம் ஓமலூர் டி.எஸ்.பி. மணிரத்தினம், அம் மாவட்ட காவல்துறைக்கண்காணிப்பாளர் பொன் மாணிக்கவேல் மீது சரமாரியாக புகார்களைக் கூறி, சேலம் சரக டிஐஜி தமிழ் செல்வனுக்கு கடிதம்எழுதியுள்ளார்.

வீரப்பனைப் பிடிக்கும் அதிரடிப்படையில் இருந்த மணிரத்தினம், வீரப்பன் வீழ்த்தப்பட்டதைத் தொடர்ந்து டி.எஸ்.பியாக பதவிஉயர்த்தப்பட்டு ஓமலூரில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பொறுப்பேற்றார்.

இந் நிலையில் சேலம் வந்த அவர் அங்கு ஜீப்பை நிறுத்தி விட்டு, டிரைவரை காத்திருக்கச் சொல்லி விட்டு சென்றவர்திரும்பவில்லை. அவர் எங்கு போனார் என்பது தெரியவில்லை. அவரைத் தேடும் பணியில் போலீஸார் தீவிரமாகஇறங்கியுள்ளனர்.

தனது கணவர் காணாமல் போனதற்கு மாவட்ட எஸ்.பி. பொன் மாணிக்கவேலின் கடுமையான செயல்பாடுகளும், தரக்குறைவானபேச்சுக்களுமே காரணம் என டிஎஸ்பியின் மனைவி புகார் கூறியுள்ளார்.

இந் நிலையில், டிஐஜி தமிழ்ச் செல்வனுக்கு, டி.எஸ்.பி. மணிரத்தினம் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அக் கடிதத்தில், சேலம்காவல்துறைக் கண்காணிப்பாளர் பொன் மாணிக்கவேல் மீது சரமாரியாக அவர் புகார்கள் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

பணிச் சுமையை அதிகம் கொடுத்து தனக்கு பொன் மாணிக்கவேல் நெருக்கடி தந்ததால் குடும்பத் தலைவர் என்ற முறையில்தன்னால் தனது குடும்பத்தைக் கவனிக்க முடியவில்லை என்றும் இதே நிலை நீடித்தால், தன்னால் தனது குடும்பத்தை இனிமேல்சுத்தமாக கவனிக்கவே முடியாது என்றும் டிஎஸ்பி தனது புகார் கடிதத்தில் கூறியுள்ளார்.

மேலும் எஸ்.பி. பொன் மாணிக்கவேல் தன்னை பலமுறை அவமானப்படுத்தியுள்ளதாகவும் மணிரத்தினம் கூறியுள்ளதாகதெரிகிறது.

மணிரத்தினத்திடமிருந்து தனக்கு கடிதம் வந்திருப்பதை தமிழ்ச் செல்வனும் உறுதிப்படுத்தியுள்ளார். ஆனால் அதில்எழுதப்பட்டுள்ள விவரங்கள் குறித்து அவர் கருத்து ஏதும் தெரிவிக்க மறுத்து விட்டார்.

கடிதத்தில் கூறப்பட்டுள்ள விவரங்கள் குறித்து உயர் அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்பட்டிருப்பதாக மட்டும் அவர் கூறினார்.

இதற்கிடையே, மணிரத்தினத்தின் மனைவி தனலட்சுமி கூறுகையில், எனது கணவர் டிஐஜிக்குக் கடிதம் எழுதியுள்ளார் என்றுஎனக்கு தகவல் வந்துள்ளது. அதில் தன்னால் குடும்பத்தைக் கவனிக்க முடியாத அளவுக்கு பணிச்சுமை கொடுக்கப்பட்டிருப்பதாகஎனது கணவர் கூறியிருக்கிறார்.

பணியில் இருக்கும்போதுதான்அவர் காணாமல் போயுள்ளார். எனவே அவரைக் கண்டுபிடிக்க வேண்டியது அரசின் கடமைஎன்றார் தனலட்சுமி.

எஸ்.பி. பொன் மாணிக்கவேல் இதற்கு முன்பும் பல முறை சர்ச்சைகளில் சிக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. சசிகலாவின் பூரணஆசி பெற்ற இவர், நியாயமான அதிகாரி என்ற பெயர் பெற்றவர்.

லஞ்சம் வாங்காத ஒரு சில மூத்த அதிகாரிகளில் பொன். மாணிக்கவேலும் ஒருவர். ரெளடிகளை ஒழித்துக் கட்டுவதிலும் கள்ளச்சாராயத்தை ஒழிப்பதிலும் ஸ்பெஷலிஸ்டான இவரை சேலத்தில் ரெளடிகளை ஒழிக்கவே அனுப்பி வைத்தார் முதல்வர்ஜெயலலிதா.

அதே நேரத்தில் தனக்கு கீழ் பணிபுரியும் அதிகாரிகள், போலீசாரை மிகவும் கடுமையாக நடத்துபவர் என்ற குற்றச்சாட்டுக்குஅடிக்கடி ஆளாகி வருகிறார்.

இவர் செங்கை கிழக்கு மாவட்ட எஸ்.பியாக இருந்தபோது, வட்டிக்குப் பணம் கொடுத்தார்கள் என்பதற்காக இரண்டுபோலீஸ்காரர்களை அவர்களது வீட்டிற்கே சென்று அடித்தவர் இவர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X