For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இந்தியாவை வெல்ல யாரும் இல்லை: கலாம்

By Staff
Google Oneindia Tamil News

கீவ்:

பொக்ரான் அணு குண்டு சோதனை மற்றும் அதைத் தொடர்ந்து விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகளை மீறி இந்தியா மிகப் பெரிய சக்தியாக உருவெடுத்துள்ளது.இந்தியாவை யாராலும் அவ்வளவு லேசாக எடுத்துக் கொள்ள முடியாது என்று குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பேசியுள்ளார்.

உக்ரைன் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அப்துல் கலாம் கீவ் நகரில், உக்ரைன் வாழ் இந்தியர்களை சந்தித்தார். அப்போது அவர்களிடையே கலாம்பேசுகையில், பொக்ரானில் நடந்த அணுகுண்டு சோதனைக்குப் பிறகு இந்தியா மீது பல்வேறு நாடுகள் பொருளாதாரத் தடையை விதித்தன.

அந்த சமயத்தில் ஒவ்வொரு இந்தியரும் உத்வேகம் கொண்டு உறுதியுடன் எழுந்து நின்றார்கள். இதனால் பொருளாதாரத் தடைகள் தவிடுபொடியாகின. சாதாரணவிவசாயி முதல் வெளிநாடு வாழ் இந்தியர்கள் வரை அத்தனை இந்தியர்களும் மிகவும் ஒற்றுமையுடனும், உறுதியுடனும் இருந்ததால் தடைகளை நம்மால் எளிதாகதாண்ட முடிந்தது.

ஒவ்வொரு துறையிலும் நாட்டை சுய சார்பு கொண்டதாக மாற்ற வேண்டியது ஒவ்வொரு இந்தியரின் கடமையாகும், லட்சியமாகும். இனிமேல் இந்தியாவை யாராலும்லேசாக எடுத்துக் கொள்ள முடியாது.

நம்மால் தனித்து இயங்க முடியும் என்பதை உலகுக்குக் காட்டி விட்டோம். இனி பொருளாதார ரீதியில் இந்தியாவை பலப்படுத்தும் முயற்சிகளில் இந்தியர்கள் கவனம்செலுத்த வேண்டும். 2020ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை வல்லரசாக்கும் எனது லட்சியத்தை நான் மிகுந்த வேகத்தோடு செயல்படுத்தப் போகிறேன்.

சமீபத்தில் நாம் காட்ரோசாட்-1 என்ற செயற்கைக் கோளை செலுத்தினோம். தற்போது நல்ல படங்களை அது அனுப்பிக் கொண்டுள்ளது. இந்த தொழில்நுட்பத்தைஉக்ரைன் நாடும் பயன்படுத்திக் கொள்வது குறித்து உக்ரைன் தலைவர்களுடன்பேசவுள்ளோம்.

கிரிமினல் பின்னணி கொண்டவர்கள் அரசியலில் இருக்கிறார்களே, எம்.பியாக தேர்வு செய்யப்படுகிறார்களே என்று யாரும் கூறக் கூடாது. காரணம், நல்லவர்கள்,நல்லவர்களையே தேர்ந்தெடுப்பார்கள். நல்லவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டிய பொறுப்பு உங்களிடம்தான் (மக்களிடம்) உள்ளது. எனவே நல்லவர்களையேதேர்ந்தெடுங்கள்.

நமது நாட்டில் கல்வியறிவு குறைவாக உள்ளது. எனவே படித்த ஒவ்வொருவரும் ஐந்து பேருக்கு கல்வியறிவு புகட்ட உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும். அப்படிசெய்தால் நிச்சயம் எழுத்தறிவின்மை ஒழிந்து விடும்.

உடல் ஊனமுற்றவர்கள் என்று யாரையும் அழைக்காதீர்கள். நான் அவர்களை விசேஷ குடிமக்கள் என்றுதான் அழைப்பேன். அவர்களுக்கு வேலை வாய்ப்பு, கல்வியில்3 சதவீத இட ஒதுக்கீட்டை இந்திய அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது. இதை சில மாநிலங்கள் சரியாக கண்டுகொள்ளாமல் உள்ளன. அதுமாதிரியான மாநிலஅரசுகளுக்கு மத்தியஅரசு கண்டிப்பாக இந்த இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது.

இங்கே ஒரு இந்தியப் பள்ளியைத் திறக்க வேண்டும் என்று கோரியுள்ளீர்கள். இதுகுறித்து உரிய அதிகாரிகளிடம் பேசுகிறேன். அதற்கு முன்பாக உங்களுக்குஉறுதிமொழி கொடுக்க இயலாத நிலையில் உள்ளேன். இருப்பினும் நிச்சயம் உங்களது கோரிக்கை பரிசீலிக்கப்படும் என்றார் கலாம்.

அப்துல் கலாமின் பேச்சு கூடியிருந்த இந்தியர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது. அவர்கள் கேட்ட பல கேள்விகளுக்கும் கலாம் பளிச் என பதில் அளித்துஆச்சரியப்படுததினார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X