காவல் நிலையத்தில் ஒரு பாசப் போராட்டம்
சென்னை:
7 வருடங்களாக வளர்ப்புப் பெற்றோரிடம் வளர்ந்து வந்த சிறுமியை, அவளது நிஜத் தந்தை வலுக்கட்டாயமாக பிரித்துச் சென்றார். ஆனால் தந்தையிடம் செல்ல மறுத்தஅந்த சிறுமி தனது வளர்ப்புப் பெற்றோரைப் பார்த்து கதறி அழுதது பார்த்தவர்களின் மனதை உருக வைத்தது.
சென்னை ராயப்பேட்டை காவல் நிலையத்தில் தான் இந்த உணர்ச்சிப் போராட்டம் நடந்தது.
இவர்களுக்கு மொத்தம் நான்கு குழந்தைகள். அதில் இருவரை செளதியில் தங்களுடன் வைத்திருந்தனர். ஜோன்ஸ் மற்றும் ஜெனீதா ஆகிய இருவரை மட்டும்சென்னையில் உள்ள ஜேம்ஸின் சகோதரி பிரின்ஸஸ் வீட்டில் விட்டிருந்தனர்.
பிரின்ஸஸ் மிகப் பெரிய பணக்காரர். அவரது கணவர் ரத்னய்யா பிசினஸ் செய்து வருகிறார். சென்னை கோபாலபுரத்தில் இவர்கள் வசித்து வருகிறார்கள். இவர்களுக்குகுழந்தைகள் கிடையாது என்பதால், ஜோன்ஸையும், ஜெனீதாவையும் தங்களது பிள்ளைகளாக கருதி வளர்த்து வந்தனர். இரு குழந்தைகளையும் தனது அக்காவுக்கேதத்து கொடுப்பதாக ஜேம்ஸும் கூறியிருந்தராம்.
ஜோன்ஸ், ஜெனீதா பிறந்தது முதலே பிரின்ஸஸ் வீட்டில் தான் வளர்ந்து வந்தனர். பிரின்ஸஸ் மற்றும் அவரது கணவர் ரத்னய்யா ஆகியோரைத் தான் அப்பா, அம்மாஎன்று அழைத்து வந்தனர். ஜோன்ஸும் அதேபோலவே பிரின்ஸஸ்-ரத்னய்யா மீது அதிக பாசம் வைத்திருந்தாள்.
இந் நிலையில் 3 ஆண்டுகளுக்கு முன்பு ஜோன்ஸை தங்களுடன் அழைத்துச் சென்று விட்டனர் ஜேம்ஸ் தம்பதியினர். சமீபத்தில், ஜெனீதாவையும் தங்களுடன்அழைத்துச் செல்ல முடிவு செய்து சென்னைக்கு வந்தனர். ஆனால் குழந்தை தங்களுடனேயே இருக்கட்டும், செளதிக்கு அனுப்பமாட்டேன் என பிரின்ஸஸ் கூறியுள்ளார்.
இதை ஏற்க மறுத்த ஜேம்ஸ் தம்பதியினர் குழந்தையை கண்டிப்பாக கூட்டிச் செல்லப் போவதாக கூறியுள்ளனர். பின்னர் சில நாட்களுக்கு முன்பாக ஜெனீதாவைகிஷ்கிந்தா பொழுது போக்கு பூங்காவிற்கு ஜேம்ஸ் தம்பதியினர் அழைத்துச் சென்றனர். பின்னர் தங்களுடனேயே அவளை வைத்துக் கொண்டனர்.
இதைத் தொடர்ந்து ராயப்பேட்டை போலீஸ் நிலையத்தில் பிரின்ஸஸ் புகார் கொடுத்தார். ஜெனீதாவை ஜேம்ஸ் தம்பதியினர் கடத்தி விட்டதாக தனது புகாரில் அவர்கூறியிருந்தார். இதுகுறித்து விசாரிக்க இரு தரப்பினரையும் போலீஸார் காவல் நிலையத்திற்கு அழைத்திருந்தனர்.
பாசப் போராட்டம்:
அங்கு ஜெனீதாவுடன் ஜேம்ஸ் தம்பதியினர் வந்திருந்தனர். பிரின்ஸஸைப் பார்த்தும், ஜெனீதா கதறியபடி, அம்மா, என்னை இவர்களுடன் அனுப்பாதே என்று அழுதகாட்சி காவல் நிலையத்தை பரபரப்புக்குள்ளாக்கியது.
பிரின்ஸஸ் மற்றும் ரத்னய்யாவும் அழுதபடி ஜெனீதாவை தங்களிடமே கொடுத்து விடுமாறு ஜேம்ஸிடம் கெஞ்சினர். இருப்பினும் ஜேம்ஸ், ஜெனீதாவை கீழேயே இறக்கிவிடவில்லை.
நீண்ட நேரமாக சகோதர, சகோதரிக்கிடையே உணர்ச்சி மிகுந்த வாக்குவாதம் நடந்தது. பின்னர் கொஞ்சம் போல மனமிறங்கிய ஜேம்ஸ், சரி, ஊருக்கு வா அங்குவைத்துப் பேசிக் கொள்வோம் என்று கூறினார். இதை பிரின்ஸஸ்ஸும் ஏற்றுக் கொண்டார். விசாரைணக்கு அழைத்த காவல்துறை அதிகாரிகளிடம் இதை தெரிவித்தஇரு தரப்பினரும் அங்கிருந்து சென்றனர்.
பின்னர் குழந்தை ஜெனீதாவுடன் ஜேம்ஸ் தம்பதியினர் அங்கிருந்து சென்றனர். போகும் போது அம்மா, அம்மா என்று பிரின்ஸஸைப் பார்த்து கதறியபடி ஜெனீதாசென்றது அங்கு கூடியிருந்தோரிடம் சோகத்தை ஏற்படுத்தியது.
ஜேம்ஸும், சகோதரி பிரின்ஸஸும் தங்களது சொந்த ஊரான கன்னியாகுமரி மாவட்டம் திட்டு விளை கிராமத்திற்கு செல்கின்றனர். அங்கு ஊர்ப் பெரியவர்கள்முன்னிலையில் வைத்து ஜெனீதாவை யார் வளர்ப்பது என்பதை முடிவு செய்யவுள்ளனர் என்று ஜேம்ஸின் வழக்கறிஞர் சுப்ரமணியம் கூறியுள்ளார்.
தொடர்ந்து சுப்ரமணியம் கூறுகையில், 7 வருடங்களாக பிரின்ஸஸ், குழந்தையை வளர்த்து வந்தாலும் சட்டப்படி தத்து கொடுக்கப்படாத காரணத்தால்ஜெனீதாவைஅவர் உரிமை கொண்டாட முடியாது. ஜெனீதா, அவளது பெற்றோருக்குத் தான் சொந்தம். இரு தரப்பினரும் கூடிப் பேசி ஜெனீதாவின் நலனை முன்னிட்டு நல்ல முடிவுஎடுக்க வேண்டும் என்றார்.
| ||||
![]() திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்! |