சுனாமி நிதியில் பெரும் மோசடி: அரசு மீது வாசன் குற்றச்சாட்டு
சென்னை:
சுனாமி நிவாரண நிதியில் முதல்வர் ஜெயலலிதா பெருமளவில் மோசடி செய்துள்ளதாக தமிழக காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் குற்றம் சாட்டியுள்ளார்.
சுனாமி பாதித்த தமிழக மக்களுக்காக, தமிழக அரசு கேட்காமலேயே ரூ. 500 கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கியது. இதுவரை தமிழக சுனாமி நிவாரணப்பணிகளுக்காக ரூ. 2,347 கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.
மத்திய அரசின் கோரிக்கையை ஏற்று உலக வங்கி ரூ. 1861 கோடி நிதியையும், ஆசிய வளர்ச்சி வங்கி ரூ. 620 கோடி நிதியையும் ஒதுக்கின.
ஆனால், சுனாமியால் பாதிக்கப்பட்ட கடலோர மாவட்டங்களில் நிவாரணப் பணிகளில் ஏராளமான முறைகேடுகள் நடந்துள்ளன. இதனால் மீனவர்களிடையேகொந்தளிப்பு ஏற்பட்டு பல்வேறு பகுதிகளில் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே மீனவர்களிடயே கோஷ்டி மோதல் ஏற்படும் அளவுக்கு மிக மோசமான நிலையை ஆளுங்கட்சி ஏற்படுத்தி விட்டது.
மத்திய அரசு வழங்கியுள்ள நிதியைக் கொண்டு சுனாமி நிவாரணப் பணிகள் முழுமையாக நடைபெறவில்லை. அனைத்துக் கட்சி கண்காணிப்பு குழுக்கள் மாவட்டஅளவில் அமைக்கப்பட்டன. ஆனால் இக்குழுக்கள் இதுவரை கூட்டப்பட்டதாக தகவலே இல்லை.
முழுமையான அளவில் நிவாரணப் பணிகள் நடைபெறுகிறதா என்பதை கோட்டையில் உட்கார்ந்திருக்கும் முதலமைச்சர் அதிகாரிகள் மூலம் கண்காணித்து விடமுடியாது. நிவாரணப் பணிகளுக்கென ஒதுக்கப்பட்ட நிதி குறித்து, அனைத்துக் கட்சி கண்காணிப்புக் குழுக்களின் கூட்டத்தைக் கூட்டி ஆய்வு நடத்த வேண்டும் என்றுஅவர் கூறியுள்ளார்.
| ||||
![]() திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்! |