நுழைவுத் தேர்வு ரத்துக்கு தடை: மாணவர்கள் கருத்து
சென்னை:
மருத்துவம், பொறியியல் படிப்புக்கான நுழைவுத் தேர்வு முறை தொடரும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதுமாணவர்களிடையே இரு விதமான கருத்துக்களை ஏற்படுத்தியுள்ளன.
நுழைவுத் தேர்வு முறையை ரத்து செய்தது செல்லாது என்றும், இம்ப்ரூவ்மென்ட் தேர்வு முறையை ரத்து செய்வதும், ரத்துசெய்யாமல் தொடருவதும் அரசின் உரிமை. இருப்பினும் இந்த ஆண்டு மட்டும் இம்ப்ரூவ்மென்ட் முறையை வைத்துக்கொள்ளுமாறும் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இதன் மூலம் இந்த ஆண்டும் நுழைவுத் தேர்வு மற்றும் இம்ப்ரூவ்மென்ட் முறை மூலமே மாணவர் சேர்க்கை நடைபெறும் எனதெரிகிறது. உயர்நீதிமன்ற தீர்ப்பு மாணவர்களிடையே இரு விதமான கருத்துக்களை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு தரப்பு மாணவர்கள் இந்த உத்தரவை வரவேற்றாலும், மற்றொரு தரப்பு மாணவர்கள் மத்தியில் நுழைவுத் தேர்வு தொடரும்என அறிவிக்கப்பட்டுள்ளது ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது.
ஏராளமான பணத்தையும் நேரத்தையும் செலவழித்து நுழைவுத் தேர்வுக்காகப் படித்து, அதில் நல்ல மதிப்பெண்களையும்பெற்றிருந்த நிலையில் அரசின் உத்தரவு இடியாக தலையில் இறங்கியது. ஆனால் உயர்நீதிமன்றத் தீர்ப்பு தங்களது வயிற்றில்பால் வார்த்தது போல உள்ளதாக பெரும்பாலான மாணவர்கள் கூறுகிறார்கள்.
இருப்பினும் சில மாணவ, மாணவிகள் உயர்நீதிமன்றத் தீர்ப்பு தங்களுக்கு பெரும் ஏமாற்றத்தை தந்துள்ளதாகதெரிவித்துள்ளனர். சில மாணவ, மாணவியர்களோ, நுழைவுத் தேர்வை மட்டும் ரத்து செய்து விட்டு இம்ப்ரூவ்மென்ட் தேர்வுமுறையை மட்டும் அமல்படுத்தி வரலாம் என்றும் யோசனை தெரிவித்துள்ளனர்.
கிருஷ்ணகிரியைச் சேர்ந்த மஞ்சுநாதன் என்ற மாணவர் கூறுகையில், நான் மருத்துவம் மற்றும் பொறியியல் ஆகியஇரண்டுக்குமே நுழைவுத் தேர்வு எழுதியிருந்தேன். இதன் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடந்தால் எனக்கு நிச்சயம்மருத்துவப் படிப்புக்கு சீட் கிடைத்து விடும்.
ஆனால் அரசின் உத்தரவு எனக்கு பேரிடியாக இருந்தது. தற்போது உயர்நீதிமன்ற உத்தரவால் நான் பிழைத்துள்ளேன். எனதுடாக்டர் கனவு நனவாகி விடும் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
இப்படி மாணவர்கள் மத்தியில் பலவிதமான கருத்துக்கள் நிலவுகிறது. ஆயினும், நுழைவுத் தேர்வு மற்றும் இம்ப்ரூவ்மென்ட்முறையை அரசு ரத்து செய்தது குறித்துப் பிரச்சினையில்லை. ஆனால் திட்டமிட்டு முன் கூட்டியே சொல்லி விட்டு செய்திருந்தால்இந்தக் குழப்பம் வந்திருக்காது என்ற எண்ணம் மாணவர்கள் மத்தியில் நிலவும் பொதுவான கருத்தாக உள்ளது.
| ||||
![]() திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்! |