டிடிவி தினகரனுக்கு பெங்களூர் நீதிமன்றம் சம்மன்
பெங்களூர்:
ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்பாக கைப்பற்றப்பட்ட பொருட்களை பெங்களூர் நீதிமன்றத்திற்கு மாற்றுமாறுபெங்களூர் தனி நீதிமன்ற நீதிபதி பச்சாப்பூரே இன்று உத்தரவிட்டார்.
முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு மற்றும் லண்டன் ஹோட்டல் வழக்கு ஆகியவற்றை ஒன்றாகவிசாரிக்கலாம் என்று பெங்களூர் நீதிமன்றம் கடந்த வாரம் உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து ஒன்றாக இணைக்கப்பட்ட வழக்கின் விசாரணை பெங்களூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இன்றும்விசாரணை நடைபெற்றது.
முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் கைப்பற்றப்பட்ட பொருட்களை சென்னையிலிருந்து பெங்களூர்நீதிமன்றத்திற்கு மாற்றுமாறு நீதிபதி பச்சாப்பூரே உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கில் 5வது எதிரியாக சேர்க்கப்பட்டுள்ளடிடிவி தினகரனை பெங்களூர்ர நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பமாறும் நீதிபதி உத்தரவிட்டார்.
பின் வழக்கு விசாரணை வருகிற 12ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.
| ||||
![]() திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்! |