For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்னை அருகே வாகன சோதனை மையம்: பிரதமர் தகவல்

By Staff
Google Oneindia Tamil News

மதுரை:

சென்னை அருகே உலகத் தரம் வாய்ந்த வாகன சோதனை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் அமைக்கப்படும் என்று சேதுசமுத்திரத் திட்ட தொடக்க விழாவில் பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.

ரூ. 2,427.40 கோடி மதிப்பிலான சேது சமுத்திர திட்ட தொடக்க விழா, மதுரையில் நேற்று மாலை நடைபெற்றது. திட்டத்தைதொடங்கி வைத்து பிரதமர் மன்மோகன்சிங்பேசுகையில்,

இந்நாள், தமிழக மக்களுக்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் குறைந்த பட்ச செயல் திட்டத்தில் கொடுத்த, வாக்குறுதியைநிறைவேற்றும் நாள்.

சுனாமியால் பாதிக்கப்பட்ட போது, உங்கள் துயரத்தில் பங்கு கொண்டு தேவையான உதவிகளை செய்ய தமிழகம் வந்தேன்.அப்போது உங்கள் துயரத்தை கண்டு நானும் கண்ணீர் சிந்தினேன். இன்று அதே கடலால் பல நூற்றாண்டாக இப்பகுதிக்கு வந்துகொண்டிருக்கும் வளங்களையும் செழிப்பையும் உங்களுடன் சேர்ந்து பகிர்ந்து கொள்ள வந்திருக்கிறேன்.

சேது சமுத்திர திட்டம், பொருளாதார வருவாயைப் பெருக்கி வேலை வாய்ப்பை அதிகரிக்கும். இக்கனவை நிறைவேற்றகாரணமான, சோனியா, அமைச்சர் பாலு மற்றும் என்ஜினியர்களை பாராட்டுகிறேன். இத்திட்டம், இந்திய துறைமுகத் துறையில்இதுவரை இல்லாத வகையில் மாபெரும் திட்டமாகும்.

கடல் வாழ் உயிரினங்கள் மற்றும் சுற்றுச்சூழல் உணர்வுகள் கொண்ட பகுதியில் இக்கால்வாய் அமைய இருப்பதால்இத்திட்டத்தை நடைமுறைப் படுத்துபவர்கள், அவற்றை மனதில் கொண்டு நிறைவேற்ற வேண்டும்.

மனித சமுதாயத்துக்கு இயற்கையை அழிக்க உரிமை கிடையாது. எதிர்கால சந்ததியினர் வாழ்க்கை பற்றி நாம் கவலைப்படாமல் இருக்க முடியாது. நம்முடைய குழந்தைகளும் பேரக் குழந்தைகளும் தான் நம் எதிர்காலம். இத்திட்டம், ஒட்டுமொத்தவளர்ச்சியையும் மேம்பாட்டையும் தமிழகத்துக்கு கொண்டு வரும். கடல் வாணிப செலவை குறைக்கும்.

கடல் வாணிபம் என்பது கப்பல் துறைமுக நிர்வாகம், சரக்கு பரிமாற்றம் செய்வோர் உள்நாட்டு சரக்கு எடுத்து செல்வோர்அனைவரும் கொண்ட சங்கிலித் தொடர் பிணைப்பு. இதில் முக்கியத்துவம் வாய்ந்தது துறைமுகம். சமீப காலங்களில் கடல்சார்ந்த பொருளாதாரம் எந்த அளவுக்கு வளர வேண்டுமோ அந்த அளவுக்கு வளரவில்லை.

உலகில் உள்ள தலை சிறந்த தனியார் துறைமுக சரக்கு கையாளும் நிறுவனங்களை இந்திய துறைமுகங்கள் கவர்கின்றன.உள்நாட்டுப் பொதுத் துறை மற்றும் தனியார் துறை முதலீடுகளை இத்துறையில் நாங்கள் வரவேற்கிறோம். இதன் மூலம் இந்தியதொழில் முனைவோர்களுக்கான சரக்கு கையாளும் ஊக்குவிக்கும் கொள்கை வரவுகளை எங்கள் அரசு அளிக்க தயாராகஇருக்கிறது.

நமது நாட்டின் சிறந்த கடல் வாணிப வரலாற்றில் தமிழகமும், தமிழக மக்களும் முக்கிய பங்கு வகித்துள்ளனர். ரோம், கிரேக்கம்போன்ற நாடுகளுடனான நமது வணிகத் தொடர்பை தமிழ் இலக்கியங்கள் பறை சாற்றுகின்றன. சேர, சோழ, பாண்டியமன்னர்கள் கொற்கை, முசிறி, தொண்டி, பூம்புகார் போன்ற துறைமுக நகரங்களை செழிக்க செய்தனர். அத்துடன் தமிழையையும்சமஸ்கிருதத்தையும் வெளிநாடுகளுக்கும் கொண்டு சேர்த்தனர்.

எங்கள் அரசு, தொன்மையான தமிழை சமஸ்கிருதத்துக்கு இணையான செம்மொழியாக அறிவித்திருப்பதை பெருமையாகநினைக்கிறேன். சிறந்த மக்களின் சிறந்த மொழியின் முழுமையான வளர்ச்சிக்கு எங்களை அர்ப்பணிக்கிறோம்.

வாகன சோதனை ஆராய்ச்சி மையம்:

உலகத் தரத்துக்கு இணையான கட்டுமான வசதிகள் நமது நாட்டில் இருக்க வேண்டும் என பல முறை கூறியிருக்கிறேன். இதில்நாம் முதல் இடத்துக்கு செல்ல வேண்டும். இரண்டாம் இடத்தில் மன நிறைவு பெற முடியாது.

கடந்த 10 ஆண்டாக அடைந்துள்ள ஆறு சதவீத வளர்ச்சிக்கு பதில் வரும் 10 ஆண்டில் 7 முதல் 8 சதவீத வளர்ச்சிக்கான இலக்கைநிர்ணயித்துள்ளோம். இதற்காக நாம் அதிக முதலீடு செய்ய வேண்டும். கட்டமைப்பு வசதிகள், வணிக வளர்ச்சிக்கான சூழலைஉருவாக்குவதுடன் நேரடியாக பொருளாதார வளர்ச்சிக்கு வழி வகுக்கின்றன. அதற்கு கடல் வணிக கட்டமைப்புஇன்றியமையாதது.

சேது சமுத்திர திட்டம், இப்பயணத்தில் முக்கியமான முதல் படி. தொழில் வளர்ச்சியில் தமிழகம் நமது நாட்டில் முன்னணியில்நிற்கிறது. இதில் மேலும் ஆர்வமூட்ட, வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கு பல நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளது.

உலகத் தரம் வாய்ந்த வாகன சோதனை, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தை சென்னையில் அமைக்கும் முடிவை இன்றுஅறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். இத்திட்டம் நேரடியாகவும் மறைமுகமாகவும் பெரிய முதலீட்டை ஈர்க்கும். ஏற்கனவேவளர்ச்சி அடைந்துள்ள தமிழக வாகன தொழில்களுக்கு ஊக்கத்தை இத்திட்டம் அளிக்கும். வாகன தொழிலில் தமிழகம்இன்னொரு "டெட்ராய்ட்டாக மாறும் என்றார் மன்மோகன் சிங்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X