For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அயோத்தி கோவில் வளாகத்தை பார்வையிட்டார் அத்வானி

By Staff
Google Oneindia Tamil News

அயோத்தி:

அயோத்தியில் தீவிரவாதிகள் தகர்க்க முயற்சித்த ராமர் கோவில் வளாகத்தை பா.ஜ.க. தலைவர் அத்வானி நேற்றுபார்வையிட்டார்.

அயோத்தியில் ராமர் கோவிலை தகர்க்க தீவிரவாதிகள் முயற்சித்தனர். அவர்களை பாதுகாப்புப் படை சுட்டுக் கொன்றது.இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந் நிலையில் பா.ஜ.க. தலைவர் அத்வானி, ராம ஜென்ம பூமிக்கு நேற்று சென்று பார்வையிட்டார்.

உத்திர பிரதேச முன்னாள் முதல்வர்கள் கல்யாண் சிங், ராஜ்நாத் சிங், மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் உமா பாரதி, முன்னாள்மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ஆகியோர் அத்வானியுடன் சென்றனர்.

அப்போது, தீவிரவாதிகள் தாக்குதல் சம்பவம் பற்றிய விவரங்களை அத்வானிக்கு போலீஸ் அதிகாரிகள் விளக்கினர்.அப்பகுதியைச் சுற்றிப் பார்த்த அவர், அனுமன் கோவிலில் தரிசனம் செய்தார். ஆனால் ராமர் கோவிலுக்கு அவர்செல்லவில்லை.

பின்னர், விஸ்வ இந்து பரிஷத்தின் கரசேவகபுரத்துக்குச் சென்றார். பா.ஜ. மற்றும் விஸ்வ இந்து பரிஷத் தொண்டர்களிடையேஅவர் பேசுகையி, ராம ஜென்ம பூமி மீது தாக்குதல் நடத்த வேண்டும் என்பது தீவிரவாதிகளின் நீண்ட கால விருப்பம். அதைஎப்படி பூர்த்தி செய்து கொண்டனர் என்பதை பார்வையிட வந்துள்ளேன்.

தீவிரவாதிகளை ஒடுக்க கொண்டு வந்த பொடா சட்டத்தை ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ரத்து செய்தது. அதன் மூலம்,தீவிரவாதப் பிரச்னையில் அரசு சமரசத்துடன் செயல்படுகிறது என்ற மனப்பான்மையை ஏற்படுத்தியுள்ளது. இந்த மனப்பான்மைநீக்கப்பட வேண்டும் என்றார்.

இதன் பிறகு அவர் நிருபர்களிடம் பேசுகையில், பல ஆண்டுகளாக ராமர் கோவில் பிரச்னை தூங்கிக் கொண்டிருந்தது. இந்தத்தாக்குதலின் மூலம், கோவில் பிரச்னைக்கு தீவிரவாதிகள் மீண்டும் உயிர் கொடுத்து விட்டனர். மக்கள் மனதில் இப்பிரச்னையைமீண்டும் கிளப்பி விட்டுள்ளனர்.

அயோத்திக்கு வருவதில் எனக்கு தர்ம சங்கடமே இல்லை. கோவில் கட்டும் குறிக்கோளை நாங்கள் நெருங்கி விட்டோம்.இப்பிரச்சினையை ஒருங்கிணைப்பு மற்றும் ஒத்துழைப்பு மூலம் தீர்க்க முயற்சிக்க வேண்டும்.

ராம ஜென்ம பூமியைத் தாக்க தீவிரவாதிகள் திட்டமிட்ட தகவல், அரசுக்கு ஏற்கனவே கிடைத்துள்ளது. 6 ஆண்டுகளாக மத்தியஉள்துறை அமைச்சர் பதவி வகித்தேன். அப்போது, முக்கிய இடங்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளரகசிய தகவலை புலனாய்வு அமைப்புகள் தரும்.

அதில், ராம ஜென்ம பூமியின் பெயர் எப்போதும் இருக்கும். தற்போது நடந்துள்ள தாக்குதல் பற்றி அரசு விரிவான விசாரணைமேற்கொள்வதற்கு இதுவே தகுந்த நேரம். அயோத்தி தாக்குதல் முயற்சியில் வெற்றி பெற்றிருந்தால், அதன் பின்விளைவுகள்மிகவும் கடுமையாக இருந்திருக்கும்.

லண்டனில் நடந்த வெடிகுண்டு தாக்குதல் போன்ற ஒரே சம்பவத்தால் வெளிநாடுகள் பதட்டம் அடைந்துள்ளன. நாம் 20ஆண்டுகளாக பாதிக்கப்பட்டுள்ளோம்.

தீவிரவாதத்தை ஒடுக்க சாதாரண சட்டங்களால் பலன் ஏற்படவில்லை என்பதால், தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில்பொடா சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால் தங்போதைய காங்கிரஸ் அரசு அந்த சட்டத்தை விலக்கிக் கொண்டு விட்டது.

சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோவிலை பிரமாண்டமாக கட்டி முடிக்கும் வரை, மக்கள் திருப்தி அடைய மாட்டார்கள். தேசியஜனநாயகக் கூட்டணி ஆட்சியின் கடைசி ஐந்தாறு மாதங்களில், இப்பிரச்னைக்கு தீர்வு காண தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டது. தற்போதைய அரசும், அந்த முயற்சியை எடுக்க வேண்டும் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X