லண்டனில் குண்டு வைத்தவன் போட்டோ வெளியீடு!
லண்டன்:
லண்டனில் குண்டு வைத்தவர்களில் 4 பேர்களின் பெயர், விவரங்கள் தெரிய வந்துள்ள நிலையில், அதில் ஒருவனின்படத்தையும் இங்கிலாந்து போலீசார் வெளியிட்டுள்ளனர்.
![]() |
3 பாகிஸ்தானியர்கள் தவிர ஜமைக்காவைச் சேர்ந்த ஒரு தீவிரவாதியும் இந்தத் தற்கொலைப் படையில் இடம் பிடித்துள்ளதுதெரியவந்துள்ளது.
லண்டனில் கடந்த 7ம் தேதி நடந்த தொடர் குண்டு வெடிப்பில் பலியான 4 பேரும் இங்கிலாந்தில் பிறந்து வளர்ந்தபாகிஸ்தானியர்கள் என்று முதலில் கூறப்பட்டது. ஆனால், விரிவான விசாரணையில் இந்த நால்வரில் ஒருவன் ஜமைக்காவைச்சேர்ந்தவன் என்று தெரிய வந்துள்ளது.
இதனால் இந்த குண்டு வெடிப்பை பாகிஸ்தானை மையமாகக் கொண்ட தீவிரவாத அமைப்பு மட்டும் நடத்தவில்லை என்றும்மேலும் விரிவான ஒரு தீவிரவாத அமைப்புக்கு இதில் தொடர்புள்ளதாகவும் போலீசார் கருதுகின்றனர்.
இதற்கிடையே குண்டுகளுடன் பஸ், ரயில்களில் ஏறி அதை இயக்கி வெடிக்கச் செய்து பலியான 4 பேரின் பெயர் விவரங்களும்வெளியாகியுள்ளன. அவர்களது விவரம்: ஹசீப் உசேன் (வயது 18), முகமது சித்திக் கான் (30), சாஹ்ஷாத் தன்வீர் (22),ஆகியோர். இவர்கள் பாக்ஸ்தானியர்கள்.
இவர்களில் ஆசிப் உசேனின் படத்தை லண்டன் போலீஸார் நேற்று வெளியிட்டனர். பஸ் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்தகுளோஸ் சர்க்யூட் கேமராவில் இவன் பதிவாகியுள்ளான். அதை வைத்து இவனது படத்தை போலீசார் வெளியிட்டுள்ளனர்.
மேலும் குண்டு வெடிப்புக்குப் பயன்படுத்தப்பட்ட வெடி மருந்து குறுத்தும் லண்டன் போலீசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.அசிடோன் பெராக்ஸைட் என்ற வெடி மருந்தைத் தான் இவர்கள் பயன்படுத்தியுள்ளனர்.
இதற்கிடையே பாகிஸ்தானிலுள்ள இஸ்லாமிய பள்ளிக் கூடங்கள் மற்றும் மதரஸாக்கள் தீவிரவாத செயல்களுக்கு துணைபோவதாக இங்கிலாந்து வெளியுறவுத் துறை செயலாளர் ஜாக் ஸ்ட்ரா குற்றம் சாட்டியுள்ளார்.
அவர் கூறுகையில், பாகிஸ்தானிலுள்ள இஸ்லாமிய பள்ளிக்கூடங்கள் மற்றும் மதரஸாக்களில் தீவிரவாதிகளுக்கு பயிற்சிஅளிக்கப்படுவதாக சந்தேகம் எழுந்துள்ளது. இவற்றை பாகிஸ்தான் அரசு கண்காணிக்க வேண்டும் என்றார்.
இதற்கிடையே குண்டு வெடிப்பில் தொடர்புடைய தன்வீர், சமீப காலத்தில் 2 முறை பாகிஸ்தானுக்கு வந்து சென்றதாகபாகிஸ்தான் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 2003ம் ஆண்டு இறுதியில் பாகிஸ்தான் வந்த தன்வீர் 4 மாதங்கள் தங்கி, அங்குள்ள மதரஸாவிற்கு அடிக்கடி சென்றுவந்ததாக தெரியவந்துள்ளது. தன்வீர் பாகிஸ்தானில் தங்கியிருந்த நாட்களில் யார், யாருடன் தொடர்பு வைத்திருந்தான் என்பதுகுறித்து பாகிஸ்தான் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
| ||||
![]() திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்! |