திருப்பதியில் ஜெயேந்திரர்: 2 மாத விரதத்தை தொடங்கினார்
திருப்பதி:
திருப்பதி கோவிலில் சாமி கும்பிட்ட ஜெயேந்திரரும், விஜயேந்திரரும் 2 மாத கால விரதத்தை தொடங்கினர்.
விரதம் தொடங்குவதற்கு முன்னதாக ஜெயேந்திரர் நேற்று திருமலை சென்றார். அங்கு அவரை திருமலை- திருப்பதி தேவஸ்தானஅதிகாரிகள் வரவேற்றனர். பின் அவர், ஏழுமலையானை தரிசித்தார்.
இதன் பிறகு திருப்பதி சங்கரமடத்திற்கு திரும்பிய ஜெயேந்திரர், சதூர்மாத பூஜையை தொடங்கினார்.
முன்னதாக விஜயேந்திரர் நேற்று முன் தினம் மாலையில் திருமலை சென்று ஏழுமலையானை தரிசித்தார். பக்தர்கள் தரிசனத்தின்இடைவேளை நேரத்தில் விஜயேந்திரர், ஏழுமலையானை தரிசிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
இதன் பின்னர் ரங்கநாயகர் மடத்தில் வைத்து விஜயேந்திரருக்கு தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
நேற்று முதல் திருப்பதி கபில தீர்த்தத்திலுள்ள சங்கரமடத்தில் இருவரும் சதூர்மாத விரதத்தை தொடங்கினர். 2 மாதம்நடைபெறும் இந்த விரதத்தில், காலையும், மாலையும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.
| ||||
![]() திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்! |