சேது: சுற்றுப்புற சூழலுக்கு பாதிப்பில்லை- டிஆர் பாலு
டெல்லி:
சேது சமுத்திரத் திட்டத்தால் சுற்றுப்புற சூழலுக்கு பாதிப்பு ஏற்படாது என்று மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர்டி.ஆர். பாலு இன்று லோக் சபாவில் தெரிவித்தார்.
அவர் கூறுகையில், சேது சமுத்திரத் திட்டத்தால் சுற்றுப்புற சூழலுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை. சுற்றுப்புற சூழலுக்கு எந்தவிதத்திலும் பாதிப்பு ஏற்படாத வகையில் மிகவும் கவனமாகத் தான் இந்த திட்டம் நிறைவேற்றப்படும்.
கடலை ஆழப்படுத்தும் பணி மிகுந்த கவனத்துடன் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணிகளால் மீன் வளமோ, கடலுக்குஅடியில் இருக்கும் அரிய பவளப்பாறைகளுக்கோ எந்த பாதிப்பும் ஏற்படாது.
இது குறித்து சந்தேகம் எழுப்பியவர்களுக்கு விரிவாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. திட்டம் தொடங்குவதற்கு முன்னதாகநாக்பூரிலுள்ள சுற்றுப்புற சூழல் ஆய்வு மையம் 2 வருடங்கள் ஆய்வு மேற்கொண்டது என்றார் பாலு.
| ||||
![]() திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்! |