• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சிக்கினார் வத்தலகுண்டு ஆதிகேசவன் சுப்ரமணியன்!

By Staff
|

சென்னை:

Ideal Subramaniyam சென்னை மோசடி மன்னன் ஆதிகேவசன் பாணியில், பல பேரிடம் பல கோடி ரூபாய் பணத்தை சுருட்டிய திண்டுக்கல் மாவட்டம்வத்தலகுண்டு பகுதியைச் சேர்ந்த ஐடியல் சுப்ரமணியன் என்ற மோசடி நபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த ஆதிகேசவன், நூற்றுக்கணக்கான பேருக்கு கடன் வாங்கித் தருவதாக கூறி பல கோடிரூபாய்களை சுருட்டி ஏப்பம் விட்டார். இவரை சில மாதங்களுக்கு முன்பு சென்னை போலீஸார் கைது செய்தனர்.

இந்த ஆதி கேசவனின் அதே பாணியில் பணத்தை மோசடி செய்த ஐடியல் சுப்ரமணியன் என்ற நபரை சென்னை போலீஸார்தற்போது கைது செய்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சொந்த ஊராகக் கொண்டவர் ஐடியல் சுப்ரமணியன். தற்போது திண்டுக்கல் மாவட்டம்வத்தலகுண்டு அருகே உள்ள விராலிபட்டியில் வசித்து வருகிறார். ஆடம்பரமான பங்களாவில் வசித்து வரும் ஐடியல், பக்திப்பழமாக காட்சி அளிப்பார்.

பட்டை பட்டையாக விபூதி, சந்தனம், குங்குமம் மணக்க, கை, கழுத்து நிறைய நகைகளுடன் காட்சி தருவார். 10க்கும் மேற்பட்டசொகுசுக் கார்கள், 3 பங்களாக்கள் என படு வசதியாக வாழ்ந்து வந்த ஐடியல் சுப்ரமணியத்தின் முக்கியத் தொழில் மோசடி.

ஆனால் அதை மறைப்பதற்காக ஏகப்பட்ட நிறுவனங்களை தொடங்கி நடத்தி வந்தார். அனைத்து நிறுவனங்களுக்கும் ஐடியல்என்று தான் பெயர் வைத்திருந்தார். அதனால் தான் அவருக்கு ஐடியல் சுப்ரமணியன் என்ற பெயர் வந்தது.

கொடைக்கானலில் பெரிய டிராவல்ஸ் கம்பெனி வைத்திருந்தார். அதில் 40 கார்கள் வரை ஓடிக் கொண்டிருந்தன. பல்வேறுஅரசியல் தலைவர்களுடன் சேர்ந்து இருப்பது போல புகைப்படம் எடுத்து தனது வீடு, அலுவலகங்களில் வைத்துக் கொள்வார்.

எப்போதும் ஆளும் கட்சியிலேயே இருப்பார். கொடைக்கானலில் தான் இவரது ராஜ்ஜியம் கொடி கட்டிப் பறந்தது. இதேகொடைக்கானலில் முன்பு ஒரு ஹோட்டலில் சாதாரண சூப்பர்வைசராக இருந்தவர் தான் இந்த ஐடியல்.

இப்போதோ, பல கோடிகளுக்கு அதிபதி, கொடைக்கானலின் ராஜாக்களில் ஒருவர். எப்படி இது சாத்தியமானது? ஐடியலின்மோசடி வேலைகள் மிகவும் கில்லாடியானது. ஆதி கேசவன் பாணியை அப்படியே பின்பற்றியுள்ளார் இந்த ஐடியல்.

குறைந்த வட்டிக்குக் கடன் தருவது என்பது தான் ஐடியலின் பாணி. இதையே தான் அந்த ஆதியும் செய்தார். முக்கியப்புள்ளிகளை மட்டுமே ஐடியல் அணுகுவார். அவர்களது பிசினஸை டெவலப் செய்ய கடன் தருவதாக கூறுவார். அவர்கள் ஒருதொகையைக் கேட்பார்கள்.

இவரோ, கூடுதலாக ஒரு தொகையைக் கூறி தருவதாக உறுதி அளிப்பார். சந்தோஷப்படும் நபர், ஐடியல் கேட்கும் கமிஷன்தொகையைக் கொடுத்து விடுவார். கமிஷனை வாங்கிக் கொண்டு செக்கில் கையெழுத்துப் போட்டு, சரக்கென்று கிழித்துபார்ட்டி கையில் கொடுப்பார் ஐடியல்.

அதன் பிறகு ஏப்பம்தான்! கடன் தொகையைக் கேட்டு முதலில் அலையும் சம்பந்தப்பட்ட நபர், பிறகு கொடுத்த கமிஷன்தொகையையாவது திருப்பிக் கொடுங்கள் என்று கேட்டு நாயாய் அலைய வேண்டியது தான்.

இப்படியாக பல பேரை ஏமாற்றி கோடிக்கணக்கில் பணத்தை சுருட்டியுள்ளார் ஐடியல். பணத்தைத் திருப்பிக் கேட்டுநச்சரிப்பவர்களை சமாளிக்க ஏகப்பட்ட அடியாட்கள் வேறு இவரிடம் உள்ளார்கள். அவர்களை வைத்து கவனித்துஅனுப்புவாராம் ஐடியல்.

ஐடியல் போலீஸாரிடம் சிக்கியது முன்னாள் கும்பகோணம் காங்கிரஸ் எம்.பி. கலாவள்ளி மூலமாகத் தான். கலாவள்ளியும்,ஐடியலிடம் கடன் கேட்டு ரூ. 10 லட்சம் பணத்தை இழந்தவர். பல முறை பணத்தைத் திருப்பிக் கேட்டு அலைந்து திரிந்தகலாவள்ளி வேறு வழியின்றி சென்னை மாநகர காவல்துறை ஆணையர் நடராஜை சந்தித்துப் புகார் கொடுத்தார்.

இதுதொடர்பாக விசாரிக்குமாறு நடராஜ் உத்தரவிட்டார். சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீஸார் இதுகுறித்து விசாரிக்கத்தொடங்கியபோது, ஐடியலுக்குள் ஆதிகேசவன் மறைந்திருப்பது தெரியவந்தது.

உடனடியாக ஐடியலைப் பிடிக்க திட்டமிட்ட போலீஸார், கொடைக்கானலுக்கு விரைந்தனர். ஆனால் போலீஸ் வலை வீச்சைஅறிந்து கொண்ட ஐடியல் எஸ்கேப் ஆகி விட்டார். இதையடுத்து அவரைப் பிடிப்பதற்காக போலீஸ் படை பல்வேறு வகையில்வலை விரித்துக் காத்திருந்தது.

விராலிபட்டி அருகே உள்ள கோட்டை கருப்பன் சாமி கோவிலில் ஆடித் திருவிழா நடந்தது. இதில் ஆண்கள் மட்டுமே கலந்துகொள்வார்களாம். ஆயிரக்கணக்கான ஆடுகள் வெட்டப்படும். இந்தத் திருவிழாவுக்கு எப்படியும் ஐடியல் வருவார் என்பதைஊகித்த போலீஸார் மாறு வேடத்தில் கோவிலில் முகாமிட்டனர்.

எதிர்பார்த்தபடியே ஐடியலும் அங்கு வந்தார். கோவிலில் வைத்துக் கைது செய்தால் பிரச்சினை கிளம்பலாம் என்பதைஎதிர்பார்த்த போலீஸார் ஐடியலை தொடர்ந்து பின்தொடர்ந்து வந்து அதிகாலையில் அவரை வளைத்துப் பிடித்துக் கைதுசெய்தனர்.

உடனடியாக சென்னைக்குக் கொண்டு வரப்பட்ட ஐடியலிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணையின் போது 20பேரிடம் ரூ. 1 கோடி வரை மோசடி செய்துள்ளதாக ஐடியல் ஒத்துக் கொண்டார்.

2 கொலை வழக்குகளில் தொடர்பு?

இதற்கிடையே ஐடியல் சுப்ரமணியத்திற்கு 2 கொலை வழக்குகளிலும் தொடர்பு இருப்பதாக போலீஸார் சந்தேகப்படுகிறார்கள்.

கடந்த ஆண்டு கொடைக்கானல் மற்றும் மதுராந்தகம் அருகே நடந்த இரண்டு கொலைச் சம்பவங்களில் ஐடியலுக்குத் தொடர்பு இருக்கக் கூடும் என்றசந்தேகம் வலுத்திருப்பதால் ஐடியலிடம் தீவிர விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது தவிர ஐடியல் தனது மோசடிப் பணத்தை திருப்பூரைச் சேர்ந்த சாமியார் ஒருவரிடம் கொடுத்து வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. எனவே திருப்பூர்சாமியாரை பிடிக்கவும் போலீஸார் முடிவு செய்துள்ளனர். அந்த சாமியார் தற்போது தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது.

இந் நிலையில் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஐடியல் சுப்ரமணியத்தை 7 நாள் காவலில் அனுமதிக்கக் கோரி போலீஸார் எழும்பூர் கூடுதல்தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்துள்ளனர்.

Mail this to a friend  Post your feedback  Print this page 

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X