For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மலேசியாவில் தத்தளிக்கும் 51 தமிழக இளைஞர்கள்!

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

பெரம்பலூர், கடலூர் மாவட்டங்களைச் சேர்ந்த 51 இளைஞர்கள், மலேசியாவில் வேலைக்காக சென்று அங்கு மிகவும்மோசமான நிலையில் அவதிப்பட்டு வருகிறார்கள்.

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த சுப்ரமணியன் என்பவர் தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு இளைஞர்களைஅணுகி, மலேசியாவில் நல்ல சம்பளத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி ஒவ்வொரு இளைஞரிடமும் ரூ. 1 லட்சம் வரைபணத்தைப் பெற்றுக் கொண்டு மலேசியாவுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

கை நிறைய சம்பளம், மலேசியாவில் வேலை என்று நம்பி கடன் வாங்கியும், வீடு, நிலம், நகைகளை விற்றும், அடகு வைத்தும்100 இளைஞர்கள், சுப்ரமணியனிடம் பணம் கொடுத்து மலேசியாவுக்கு வந்துள்ளனர்.

கடந்த ஏப்ரல் மாதம் 23ம் தேதி 40 பேரும், மே மாதம் 22ம் தேதி 60 பேரும் மலேசியாவில் உள்ள என்.என்.செகன்டரி பிராஸஸ்என்ற நிறுவனத்தின் வேலை பெர்மிட் மூலம் மலேசியா சென்றுள்ளனர். மலேசியா வந்த அவர்களுக்கு பெரும் அதிர்ச்சிகாத்திருந்தது.

அந்த நிறுவனத்தில் வேலைக்கு யாரையும் கேட்கவில்லை என்றும், நிறுவனத்தின் உரிமையாளர் ஒரு தமிழர் என்றும்தெரியவந்துள்ளது. இருப்பினும் கூட அவரும் உண்மையான உரிமையாளரா என்பது உறுதியாகத் தெரியவில்லை.

வந்த 100 பேரையும் பல்வேறு நிறுவனங்களுக்கு மலேசிய நிறுவனம் பிரித்து வேலைக்கு அனுப்பியுள்ளது. ஒரு மாதம் வரைஇவர்கள் வேலை பார்த்துள்ளனர். அதற்குப் பிறகு சரியாக வேலை கொடுக்கப்படவில்லை. சம்பளமும் சரியாகதரப்படவில்லை.

ஒவ்வொருவருக்கும் இந்திய மதிப்பில் அதிகபட்சமாக ரூ. 5000 வரை மட்டுமே சம்பளமாக, அதுவும் முறையாக இல்லாமல்பிரித்துப் பிரித்துக் கொடுக்கப்பட்டுள்ளது. சரியான சாப்பாடு, சம்பளம், வேலை இல்லாமல் இவர்கள் அவதிப்பட்டுள்ளனர்.

ஏதாவது கேட்டால் நிறுவன உரிமையாளர் (தமிழர் அல்ல) அவர்களை அடித்து உதைப்பாராம். மேலும், கொலை செய்துகடலில் வீசி விடுவோம் என்றும் இந்த இளைஞர்கள் மிரட்டப்பட்டுள்ளார்கள்.

இவ்வாறு அவதிப்பட்டு வரும் இளைஞர்களில் ஒருவரான பெரம்பலூர் மாவட்டம் வங்காரம் கிராமத்தைச் சேர்ந்த பாண்டுஎன்பவர் அவதிப்படும் 51 இளைஞர்களின் நிலை குறித்து விளக்கியும், தங்களை மீட்டுச் செல்ல நடவடிக்கை எடுக்குமாறுகோரியும் பெரம்பலூர் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு பேக்ஸ் மூலம் செய்தி அனுப்பியுள்ளார்.

இந்திய தூரகத்தை அணுகியும் தங்களுக்கு சரியான உதவி கிடைக்கவில்லை என்றும் தங்களது மனுவில் இளைஞர்கள்தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட இளைஞர்களின் குடும்பத்தினர் ஆளுநருக்கும், முதல்வர் ஜெயலலிதாவுக்கும் புகார் மனுஅனுப்பியுள்ளனர். முதல்வரை நேரில் சந்தித்த முறையிடவும் முடிவு செய்துள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X