கடன் தருவதாக கூறி நடிகைகளிடம் உல்லாசம்: ஐடியல் சுப்பிரமணியத்தின் லீலைகள்
சென்னை:
சென்னை மோசடி மன்னன் ஆதிகேவசன் பாணியில், பல பேரிடம் பல கோடி ரூபாய் பணத்தை சுருட்டிய ஐடியல்சுப்ரமணியனைப் பற்றி தினமும் பல பரபரப்பான தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.
சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த ஆதிகேசவன், நூற்றுக்கணக்கான பேருக்கு கடன் வாங்கித் தருவதாக கூறி பல கோடிரூபாய்களை சுருட்டி ஏப்பம் விட்டார். இவரை சில மாதங்களுக்கு முன்பு சென்னை போலீஸார் கைது செய்தனர்.
இந்த ஆதி கேசவனின் அதே பாணியில் பணத்தை மோசடி செய்த ஐடியல் சுப்ரமணியன் என்ற நபரை சென்னை போலீஸார்கடந்த சில தினங்களுக்கு முன் கைது செய்தனர்.
இவரிடம் சென்னை பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் ஆதிகேசவனைப்போலவே ஐடியலும் கோடிகள் புரள உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்தது தெரியவந்துள்ளது.
கொடைக்கானலில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வந்த ஐடியல், அங்கு படப்பிடிப்புக்கு வரும் நடிகைகளுக்கு இலவசமாககார்களை கொடுத்து பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்வார். நடிகைகளும் படப்பிடிப்பு முடியும் வரை குளுகுளு சொகுசு கார்களைஇலவசமாகப் பயன்படுத்திக் கொள்வார்கள்.
இப்படி ஏற்படும் பழக்கத்தை வைத்து, பண நெருக்கடியில் தவிக்கும் சில நடிகைகளுக்கு கடன் தருவதாக ஆசை வார்த்தைகூறுவார். இதற்கு வட்டி ஏதும் தேவையில்லை என்று கூறி "சைகை காட்டுவார். இதை நம்பி பல நடிகைகள் ஐடியலிடம்தங்களை இழந்துள்ளார்கள்.
இதற்கிடையே ஒரு மலையாளப் படம் தயாரிக்கப் போவதாக கூறியும் பலரை நம்ப வைத்துள்ளார். இதை நம்பி நடிகைகனவுகளுடன் வந்த ஏராளமான இளம்பெண்களின் கற்பை இவர் சூறையாடியுள்ளார்.
கேரளாவை சேர்ந்த பெண் வியாபாரி ஒருவரையும் 1 கோடி ரூபாய் கடன் தருவதாக கூறி வலையில் வீழ்த்தியுள்ளார். அவரைதிருச்சிக்கு வரவழைத்து அங்குள்ள ஒரு லாட்ஜில் உல்லாசமாக இருந்துள்ளார்.
அந்த பெண் வியாபாரியிடம் கடனுக்கு கமிஷனாக 5 லட்சத்தை வாங்கிக் கொண்டு அவரது கற்பையும் சூறையாடியது தான்இதில் வேடிக்கை.
7 நாள் போலீஸ் காவல்:
இதற்கிடையே சுப்ரமணியம் மீது ஏகப்பட்ட புகார்கள் இருப்பதால் அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க முடிவுசெய்து சென்னை பெருநகர கூடுதல் தலைமைக் குற்றவியல் நீதிமன்றத்தில் மனு செய்தனர். அதில் 15 நாள் காவலில்சுப்ரமணியத்தை அனுமதிக்குமாறு போலீஸார் கோரியிருந்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி அருள்ராஜ், 7 நாள் போலீஸ் காவலில் சுப்ரமணியத்தை அனுப்ப உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து சுப்ரமணியத்தை திண்டுக்கல், வத்தலகுண்டு, கொடைக்கானல் உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்துச் சென்றுவிசாரணை நடத்த போலீஸார் முடிவு செய்துள்ளனர்.
இதற்கிடையே சுப்ரமணியத்தின் கூட்டாளிகளான விக்கி, பவுல்ராஜ் ஆகியோருக்கும் போலீஸார் வலை வீசியுள்ளனர்.அவர்களைக் கைது செய்தால் சுப்ரமணியத்தின் மோசடி குறித்து முழு விவரங்களும் தெரிய வரும் என்று போலீஸார்நம்புகிறார்கள்.
| ||||
![]() திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்! |