For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நானாவதி அறிக்கை: வாஜ்பாய் மீது கருணாநிதி தாக்கு

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

நானாவதி கமிஷனில் கூறப்பட்டுள்ளவை குறித்து கூடுதலாக விசாரணை நடத்த வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதிகூறியுள்ளார்.

இது தொடர்பாக கருணாநிதி முரசொலியில் எழுதியுள்ளதாவது:

நமது இந்தியாவில் எத்தனையோ நானாவதி கமிஷன்கள் காலாவதியாகி இருக்கின்றன.

எந்தக் கமிஷன் அறிக்கையானாலும் விருப்பு வெறுப்பின்றி நடவடிக்கை மேற்கொள்ள ஆளும் தரப்பினரும், அதே போலஅதற்கு ஒத்துழைக்க எதிர்த் தரப்பினரும் முன்வராவிடில் அதனால் எந்தப் பயனும் ஏற்படாது.

தற்போது வெளியிடப்பட்டுள்ள நானாவதி கமிஷன் அறிக்கை ஒரு பரிந்துரை தானே தவிர அதுவே தண்டனையை அறிவிக்கும்தீர்ப்பாகாது. அதை பூர்வாங்க ஆதாரமாகக் கொண்டு மேலும் விசாரணை நடத்தித் தான் முடிவெடுக்க வேண்டும்.

சீக்கியர்களுக்கு எதிராக நடந்த கலவரம் குறித்தி விசாரிக்க 9 விசாரணைக் கமிஷன்கள் அமைக்கப்பட்டு விட்டன. 1984ம்ஆண்டு நடந்த சம்பவத்திற்கு 2000ம் ஆண்டில் வாஜ்பாய் ஆட்சியில் விசாரணைக் கமிஷன் அமைத்தது உள்நோக்கம்கொண்டது என்பதே பலரது கருத்து.

இப்போது மன்மோகன் சிங் ராஜினாமா செய்ய வேண்டும் என்று வாஜ்பாய் கூறுவது அதை மெய்ப்பிப்பது போல உள்ளது. இதேபோல ஜகதீஷ் டைட்லர் பதவி விலகாவிட்டால் சீக்கியர்களின் மனம் கொந்தளிக்கும் என்று வாஜ்பாய் கூறுகிறார்.

மன்மோகன் சிங்பதவி விலகினாலும் சீக்கியர்களின் மனம் கொந்தளிக்கத் தானே செய்யும்? என்று கருணாநிதி குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையே நேற்று நாடாளுமன்றத்தில் இந்த விவகாரம் வெடித்தது. பிரதமரும், ஜகதீஷ் டைட்லரும் பதவி விலக வேண்டும்என்று கோரி பாஜக மற்றும் அகாலி தள எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் இரு அவைகளும் நேற்றுமுழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.

அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வரை நாடாளுமன்றத்தை நடத்த விடமாட்டோம்என்று பாஜக எச்சரித்தது. கம்யூனிஸ்ட் கட்சிகளும் இந்த விவகாரத்தில் காங்கிரஸுக்கு எதிரான நிலையே எடுத்தது.

இதைத் தொடர்ந்து நானாவதி கமிஷன் விவகாரத்தால் ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து விவாதிப்பதற்காக காங்கிரஸின்மத்தியக்குழு கூட்டம் செவ்வாய்க்கிழமை மாலை பிரதமர் மன்மோகன் சிங்கின் இல்லத்தில் நடந்தது.

இதில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, இவரது அரசியல் செயலாளர் அகமது படேல், மத்திய அமைச்சர்கள் பிரணாப்முகர்ஜி, குலாம் நபி ஆஸாத் மற்றும் முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தற்போது எழுந்துள்ள நிலை குறித்துவிவாதிக்கப்பட்டது.

அறிக்கையில் மோசடி:

எதிர்க்கட்சிகளை சமாளிக்க, அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்கள் மீது கண் துடைப்புக்காக சில நடவடிக்கைகள்எடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

இதற்கிடையே நானாவதி கமிஷன் அறிக்கையை திருத்தி காங்கிரஸ் மோசடியில் ஈடுபட்டுள்ளது என்று விஎச்பி குற்றம்சாட்டியுள்ளது. இது தொடர்பாக விஎச்பியின் துணைத் தலைவர் கிரிராஜ் கிஷோர் கூறுகையில், சீக்கியர்களுக்கு எதிராகநடத்தப்பட்ட கலவரத்தில் ஏராளமானோர் கொல்லப்பட்டனர்.

ஆனால் அந்த சம்பவத்தில் தொடர்புடைய அரசியல்வாதிகள் உட்பட ஒருவரது பெயரும் முதல் தகவல் அறிக்கையில்சேர்க்கப்படவில்லை. அவர்கள் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை.

அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட உடன் அதை சிறிது நாட்கள் மறைத்து வைத்திருந்தனர். அப்போது அதில் சில திருத்தங்கள்செய்யப்பட்டுள்ளது என்றார்.

இன்றும் அவை ஒத்தி வைப்பு:

நானாவதி அறிக்கை விவாகாரம் இன்றும் நாடாளுமன்றத்தில் எதிரொலித்தது. ராஜ்ய சபாவில் கேள்வி நேரத்தை ஒத்தி வைத்துநானாவதி விவகாரம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று பாஜக உட்பட தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் கடும்அமளியில் ஈடுபட்டன.

இதைத் தொடர்ந்து ராஜ்ய சபா தலைவர் பைரோவன் சிங் ஷெகாவத் அவையை பிற்பகல் வரை ஒத்தி வைத்தார்.

இதற்கிடையே லோக் சபாவில் நானாவதி விவகாரம் தொடர்பாக விவாதம் நடத்த காங்கிரஸ் ஒத்துக் கொண்டது. இதைத்தொடர்ந்து அவை நடவடிக்கைகளில் பங்கு பெறுவதாக தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் அறிவித்தன.

இதைத் தொடர்ந்து நடைபெற்ற விவாதத்தில் பேசிய அத்வானி, 1984ம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிராக நடத்தப்பட்டதாக்குதலுக்கு யார் காரணம் என்பதை கண்டுபிடிக்க வேண்டும். அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களை காப்பாற்றகாங்கிரஸ் ஏன் முயற்சிக்கிறது?

சம்பவம் நடந்த போது போலீஸார் நடந்து கொண்ட விதத்தைப் பார்த்த போது மேலிடத்திலிருந்த வந்த உத்தரவு தான் காரணம்என்று தெளிவாகத் தெரிந்தது. அப்படியென்றால் மேலிடத்திலிருந்து உத்தரவை பிறப்பித்தது யார்?

இது தவிர கலவரம் நடந்த பகுதியில் ராணுவத்தை ஈடுபடுத்துவதிலும் காலதாமதம் ஏற்பட்டது. போலீஸார் ஒன்றும்செய்யமாட்டார்கள் என்ற ஒரு தைரியம் இருந்ததால் தான் கலவரக்காரர்கள் மிகவும் துணிச்சலாக வன்முறையில் ஈடுபட்டார்கள்.

கலவரக்காரர்கள் சீக்கி மதத்தை சேர்ந்த ஆண்களை வீட்டுக்கு வெளியே இழுத்து வந்து உயிரோடு கொளுத்தினர். போலீஸாரும்பாதுகாப்பு தருவதாக கூறி சீக்கியர்களிடமிருந்து ஆயுதங்களை பறித்துக் கொண்டனர் என்றார்.

இதற்கிடையே ஜகதீஷ் டைட்லர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் கூறியுள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் மூத்த தலைவர் ஹன்னான் மொல்லா கூறுகையில், அறிக்கையில் கூறியுள்ளபடி ஜகதீஷ் டைட்லர் மீதுநடவடிக்கை எடுப்பது மிகவும் அவசியம் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X