நீதிபதிகள் நியமனம்: வழக்கு தொடர்ந்த வக்கீலுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்
சென்னை:
நீதிபதிகள் நியமனம் தொடர்பாக பொது நலன் வழக்கு தொடர்ந்த சென்னை வழக்கறிஞருக்கு உயர்நீதிமன்றம் கடும் கண்டனம்தெரிவித்து அவரது மனுவைத் தள்ளுபடி செய்தது.
அதில், நீதிபதிகளாக நியமிக்கப்படுகிறவர்கள் அரசியல் கட்சி சார்புடையவர்களாகவோ அல்லது ஏற்கனவே நீதிபதிகளாகஇருந்து ஓய்வு பெற்றவர்களின் உறவினர்களாகவோ, நண்பர்களாகவோ இருக்கக் கூடாது என்று உயர்நீதிமன்றம் உத்தரவிடவேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற உயர்நீதிமன்றம் விசாரணையை தொடர்ந்தது. அப்போது வாதாடிய மத்திய மற்றும் மாநிலஅரசுகளின் வழக்கறிஞர்கள், நீதிபதிகள் நியமனம் தொடர்பாக முறையான விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன.
மனுதாரரின் வாதம் அவசியமற்றது, தேவையற்றது, ஊகத்தின் அடிப்படையில் அமைந்தது என்று வாதிட்டனர். இதையடுத்துநீதிபதி கற்பகவிநாயகம் தலைமையிலான டிவிஷன் பெஞ்ச் இன்று தீர்ப்பு வழங்கியது.
அப்போது, நீதிமன்றத்தின் நேரத்தை மனுதாரர் வீணடித்து விட்டார். இதுபோன்ற மனுக்களை தாக்கல் செய்து நீதிமன்றம் மற்றும்நீதிபதிகளின் நேரத்தை விரயமாக்குவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூறிய நீதிபதிகள் மனுவையும் தள்ளுபடி செய்தனர்.
| ||||
![]() திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்! |