போலீஸ் தேர்வு வினாத்தாள் லீக்: 11 காக்கிகள் சஸ்பெண்ட்
சென்னை:
காவலர் தேர்வுக்கான வினாத்தாள் வெளியான விவகாரம் தொடர்பாக சென்னையைச் சேர்ந்த 11 காவலர்கள் தற்காலிகபணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இதைத் தொடர்ந்து இந்த விவகாரத்தில் உயர் அதிகாரிகளுக்குத் தொடர்பு இருக்கலாம் என்பதால் இதை சிபிஐ விசாரணைக்குவிட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணையின் போது இந்த சம்பவத்தில் தொடர்புடைய அதிகாரிகள் யாராக இருந்தாலும் அவர்களைதற்காலிக பணிநீக்கம் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கின் விசாரணை இன்று உயர்நீதிமன்றத்தில் வருகிறது.
இந் நிலையில் வினாத்தாள் வெளியான விவகாரம் தொடர்பாக சென்னை நகரைச் சேர்ந்த பல்வேறு காவல் நிலையங்களில்பணியாற்றி வரும் 11 காவலர்கள் அவசர, அவசரமாக தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு வினாத்தாள் வெளியான விவகாரத்தில் நேரடித் தொடர்பு உள்ளதாகத் தெரிகிறது.
| ||||
![]() திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்! |