For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சேது: கடல் ஆழப்படுத்தும் பணியை உடனே நிறுத்த ஜெ. கோரிக்கை

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சேது சமுத்திரத் திட்ட அகழ்வுப் பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா கோரிக்கைவிடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை விவரம்:

மக்கள் வளர்ச்சிக்கு உதவும் மாபெரும் திட்டங்களை வகுத்து, மக்கள் நலனில் எனது அரசு எப்போதுமே முன்நிற்கிறது. திட்டங்கள் மக்களுக்குப் பயன் உள்ளவையாக இருக்க வேண்டுமே தவிர, அவர்களது வாழ்க்கைபாதிக்கப்படக் கூடாது என்பதில் எனது அரசு மிகுந்த கவனம் செலுத்துகிறது.

இதன் அடிப்படையில்தான், சேது சமுத்திரத் திட்டம் தொடர்பான சுற்றுச்சூழல் சந்தேகங்களுக்கு தெளிவான தீர்வுகிடைத்த பின்னரே அத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பதில் உறுதியுடன் இருந்தேன்.

சேது சமுத்திரத் திட்டம் தொடர்பான தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் நியாயமான கவலைகளுக்குத் தீர்வுகண்ட பின்னர்தான் அத்திட்டம் தொடங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினேன்.

ஆனால், திமுக தலைவர் கருணாநிதி, மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு, மத்திய அரசு ஆகியோர் சேர்ந்து,அவர்களுக்கு மட்டுமே தெரிந்த காரணங்களால் கடந்த ஜூலை மாதம் 2ம் தேதி அவசர கதியில் இத்திட்டத்தைத்தொடங்கினர். ஆனால் அன்று நான் தெரிவித்த கவலைகள் இன்று நிஜமாகி வருகிறது.

கடலை ஆழப்படுத்தும் பணியைத் தொடங்கியதில் இருந்து பாக் நீரினைப் பகுதியில் மீன்கள் கிடைப்பது குறைந்துவிட்டதாகமீனவர்களிடம் இருந்து எனக்கு புகார்கள் வந்துள்ளன.

மீன்கள் முட்டை போட்டு குஞ்சு பொறிக்கும் கடற் புதர்கள், கடல் வாழ் தாவரங்கள் ஆகியவை அழிக்கப்பட்டுகடலில் மிதக்கின்றன. மீன் உற்பத்தியும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இறால் மீன்களும் கிடைப்பதில்லை.டால்பின் போன்ற மீன்களும், அரிய மீன்களும் இடம் பெயறத் தொடங்கியுள்ளன.

பல லட்சம் மதிப்புள்ள மீனவர்களின் வலைகள், கடலை ஆழப்படுத்தும் கப்பல்களில் சிக்கி சேதமடைந்துள்ளது.

அப் பகுதியில் கடலின் இயற்கை- உயிரினத் தன்மையே மாறிவிட்டது. இதனால் மீனவர்களின் வாழ்க்கையேபிரச்சனையாகியுள்ளது. இதனால் இனியும் இதை நான் அமைதியாக பார்த்துக் கொண்டு இருக்க முடியாது.

மீனவர்களின் வாழ்க்கையை சீரழித்து வரும் சேது சமுத்திரத் திட்டப் பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும்.

இந்த விஷயத்தில் மீனவர்களின் அச்சத்தைப் புறக்கணித்துவிட்டு கருணாநிதியும், டி.ஆர்.பாலுவும் அவசர கோலத்தில்செயல்பட்டுவிட்டனர். இந்த விவகாரத்தில் நான் தெரிவித்த அச்சம் இப்போது உண்மையாகிவிட்டது.

இந்தப் பணியால் பாதிக்கப்பட்டுள்ள மீனவர்களுக்கு எனது அரசு தான் நஷ்ட ஈடு தர வேண்டும். எனது அரசிடம் இருந்துதடையில்லா சான்றிதழைக் கூடப் பெறாமல் கடந்த ஜூலை 2ம் தேதி கடலை ஆழப்படுத்தும் பணியை மத்திய அரசுஆரம்பித்துவிட்டது.

மீனவர்களை பாதிக்கும் இந்தத் திட்டத்தை ஏற்க எனது மனசாட்சி இடம் தரவில்லை. அதனால் தான் மதுரையில் பிரதமர் துவக்கிவைத்த இத் திட்டப் பணியின் தொடக்க விழாவில் நான் பங்கேற்கவில்லை.

இத் திட்டத்தால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து விரிவாக ஆராய, மத்திய கடலியல் தொழில்நுட்ப மையத்தின்முன்னாள் இயக்குனர் டாக்டர் ரவீந்திரன் தலைமையில் ஒரு கமிட்டியை தமிழக சுற்றுச்சூழல்துறை நியமித்துள்ளது.

இந்தத் திட்டம் குறித்த மத்திய அரசின் நீரி அமைப்பு வழங்கிய ஆய்வறிக்கையில் பல குறைகள் இருப்பதை ரவீந்திரன் கமிட்டிசுட்டுக் காட்டியுள்ளது.

சுனாமி பாதிப்பிலிருந்து இப்போதுதான் மீனவர் சமுதாயம் மீண்டு, இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வருகிறது. இந்நிலையில் சேது திட்டத்தால் மீனவர்களின் வாழ்வாதரங்களை முற்றிலும் இழக்கும் நிலைக்கு அவர்கள்தள்ளப்பட்டுள்ளனர்.

இந்த அறிவில்லாத செயலை (சேது சமுத்திரத் திட்டம்) இனிமேலும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாது. இத் திட்டத்தை தமிழகஅரசால் இனிமேலும் அனுமதிக்க முடியாது. எனவே உடனடியாக கடல் அகழ்வுப் பணிகள் நிறுத்தப்பட வேண்டும்என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X