For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தொப்புளில் பம்பரம்; விஜயகாந்த் விளக்கம்!

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சின்னக் கவுண்டர் படத்தில் நடிகை சுகன்யாவின் தொப்புளில் பம்பரம் விட்டது குறித்து விமர்சனம் எழுந்துள்ளது குறித்துபதிலளிக்க முடியாது என்று நடிகர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

இயக்குநர் தங்கர்பச்சான், நடிகர், நடிகைகளின் வற்புறுத்தல் காரணமாக மன்னிப்பு கேட்டது தங்கரின் சொந்த ஊரான கடலூர்மாவட்டத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் விஜயகாந்த் மற்றும் நடிகை குஷ்புவுக்கு எதிராகஅம்மாவட்டத்தில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

மேலும், விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் விஜயகாந்த் கடுமையாக சாடியுள்ளார். நடிகைகளின் தொப்புளில்பம்பரம் விட்டவர் எல்லாம் தங்கர்பச்சானை மன்னிப்பு கேட்க கூறத் தகுதியில்லை என்று அவர் கூறியிருந்தார்.

இதுகுறித்து நடிகர் விஜயகாந்த்திடம் செய்தியாளர்கள் சனிக்கிழமை கேட்டபோது, திருமாவளவனுக்கு எல்லாம் பதில் சொல்லவேண்டிய அவசியம் எனக்கு இல்லை. இந்தப் பிரச்சினையை எப்படி சந்திக்க வேண்டுமோ அப்படி சந்திப்பேன்.

தங்கர்பச்சான் விவகாரம் அரசியலாக்கப்படுவது குறித்து நான் கவலைப்படவில்லை. அரசியல் கட்சி ஆரம்பிக்கவுள்ளேன்.அதற்குப் பிறகு இதுபோன்ற பிரச்சினைகளை அரசியல் ரீதியாக சந்திப்பேன். யாருக்காகவும் நான் பயப்பட வேண்டிய அவசியம்இல்லை. யாருடைய ஆதரவையும் நான் கோரவில்லை, தனியாகத்தான் நிற்கப் போகிறேன்.

ஒரு குடும்பத்தைப் பற்றி ஆபாசமாக பேசி விட்டு பின்னர் டிவியில் மன்னிப்பு கேட்டு விட்டால் சரியாகப் போய் விடுமா? எனவேதவறாக விமர்சிக்கப்பட்டவர்களஅ ஆத்திரப்பட்டதை தவறு என்று கூற முடியாது. இந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளிவைக்கப்பட்டு விட்டது. மறுபடியும் அதை பேச வேண்டிய தேவை இல்லை என்றார் விஜயகாந்த்.

முன்னதாக ரசிகர் மன்றத்தின் தொண்டர் படையினருக்கு தனது ஆண்டாள் அழகர் திருமண மண்டபத்தில் கொடுக்கப்பட்டு வரும்பயிற்சியை அவர் பார்வையிட்டார். பின்னர் தொண்டர்களுக்கு அவர் ஆலோசனைகள் கூறினார்.

தொண்டர் படை பயிற்சி குறித்து விஜயகாந்த் கூறுகையில், 1000 ரசிகர்களைத் தேர்ந்தெடுத்து தொண்டர் படையைஉருவாக்கியுள்ளோம். அவர்களுக்கு வெள்ளி மற்றும் சனி ஆகிய தினங்களில் பயிற்சி கொடுக்கப்பட்டு வருகிறது. முன்னாள்ராணுவ வீரர் நடராஜன் பயிற்சி அளிக்கிறார்.

இவர்கள் தவிர மகளிர் தொண்டர் படையில் 100 பேரை சேர்த்துள்ளோம். அவர்களுக்கு மதுரையில் 2 நாட்கள் பயிற்சிஅளிக்கப்படும்.

மாநாட்டு ஏற்பாடுகள் மிகத் தீவிரமாக நடைபெறுகின்றன. ரசிகர்கள் சொந்தக் காசை செலவழித்து ஏற்பாடுகளை கவனித்துவருகிறார்கள். வருகிற 7ம் தேதிக்குள் எனது படப்பிடிப்புகளை நடித்துக் கொடுத்து விடுவேன். அதற்குப் பிறகு மாநாட்டுப்பணிகளில் தீவிர கவனம் செலுத்தப் போகிறேன் என்றார் விஜயகாந்த்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X