For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சூரியனைச் சுற்றி ஒளிவட்டம்; பரவசத்தில் பக்தர்கள் - பீதியில் மக்கள்!

By Staff
Google Oneindia Tamil News

கடலூர்/புதுவை:

குருப் பெயர்ச்சி தினமான திங்கள்கிழமை சூரியனைச் சுற்றி ஒளிவட்டம் காணப்பட்டதால் பக்தர்கள் பெரும் மகிழ்ச்சிஅடைந்தனர். அதேசமயம் இதுபோல ஏற்பட்டால் சுனாமி தாக்குதல் ஏற்படக் கூடும் என்ற பீதியில் பாண்டிச்சேரி மக்கள்பீதியடைந்தனர்.

நவக்கிரகங்களில் ஒன்றான குரு கிரகம், கன்னி ராசியிலிருந்து துலாம் ராசிக்கு இடம் பெயரும் நிகழ்வு குருப் பெயர்ச்சியாககூறப்படுகிறது. திங்கள்கிழமை காலை குருப் பெயர்ச்சி நடந்தது. இதையொட்டி குரு பகவான் தலங்களான ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் ஆலயம், சூரியனார் கோவில் உள்ளிட்ட இடங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இவற்றில்ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பூஜைகள் செய்தனர்.

குருப் பெயர்ச்சி தினமான நேற்று, ஒரு அரிய நிகழ்வும் நடந்தது. அதாவது சூரியனைச் சுற்றிலும் பிரகாசமான ஒளிவட்டம்காணப்பட்டது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இதுபோன்ற ஒளிவட்டத்தை காண முடிந்தது. மிக மிக அரிய நிகழ்வான இதுகுறித்து பொதுமக்களிடையே இரு விதமான கருத்துக்கள் காணப்பட்டன.

குருப் பெயர்ச்சி தினத்தன்று இதுபோல ஏற்பட்டதால் இது கடவுளின் திருவிளையாடல் என பக்தர்ரகள் நினைத்து மகிழ்ச்சிஅடைந்தனர். பலர் சூரியனை வழிபட்டு தங்களுக்கு நல்லது நடக்க வேண்டிக் கொண்டனர். அதேசமயத்தில் புதுவை போன்றகடலோரப் பகுதி மக்கள் பீதியடைந்தனர்.

இதுபோல ஏற்பட்டால் சுனாமி அலைத் தாக்குதல் போன்ற ஏதாவது இயற்கை சீற்ற நிகழ்வுகளுக்கு வாய்ப்பு உண்டு என்று கூறிபீதியுடன் காணப்பட்டனர்.

ஆனால் இது ஒரு சாதாரண நிகழ்வுதான் என்றும் இதனால் பீதி அடையத் தேவையில்லை என்றும் சென்னை கோட்டூர்புரத்தில்உள்ள பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தின் இயக்குநர் அய்யம்பெருமாள் கூறியுள்ளார்.

அவர் கூறுகையில், சூரியன், நிலவைச் சுற்றி இதுபோல ஒளிவட்டம் ஏற்படுவது சாதாரண விஷயம்தான். பயப்படத்தேவையில்லை. வளி மண்டலத்தில் ஈரப்பதம் அதிகம் இருக்கும்போது, இதுபோல ஏற்படும். வளிமண்டலத்தில் அதிக ஈரப்பதம்இருப்பதால் நல்ல மழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன என்று அவர் விளக்கினார்.

மழை பெய்வதும் நல்லதுக்குத்தானே!

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X