For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இனி சென்னை- காஞ்சி, திருவள்ளூருக்கு லோக்கல் காலில் பேசலாம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள அனைத்து தொலைபேசி நிலையங்களும், சென்னை தொலைபேசிவட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ள. இதன்மூலம் சென்னை மாநகர தொலைபேசி வட்டத்தின் எல்லை விரிவடைந்துள்ளது.

தமிழக முதல்வர் ஜெயலலிதா சில மாதங்களுக்கு முன்பு சென்னை மாநகர காவல்துறையின் எல்லையை விரிவுபடுத்தினார்.சென்னைக்கு அருகே உள்ள புறநகர்ப் பகுதிகள் அடங்கிய செங்கை கிழக்கு காவல் மாவட்டம் சென்னை மாநகருடன்இணைக்கப்பட்டது. இதன் மூலம் சென்னை மாநகரக் காவல் எல்லை விரிவடைந்தது.

இந் நிலையில் சென்னைத் தொலைபேசி வட்டத்தின் எல்லையை விரிவுபடுத்த திமுகவைச் சேர்ந்த மத்திய தொலைத்தொடர்புஅமைச்சர் தயாநிதி மாறன் முடிவெடுத்தார். அதன்படி சென்னைக்கு அருகில் உள்ள காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டதொலைபேசி வட்டங்களை சென்னையுடன் இணைக்க தொலைத் தொடர்புத் துறை முடிவு செய்தது.

நேற்று (வெள்ளிக்கிழமை) நள்ளிரவு முதல் இந்த இணைப்பு அமலுக்கு வந்தது. அதன்படி, இரு மாவட்டங்களிலும் உள்ள 8தொலைபேசி நிலையங்கள் சென்னையுடன் இணைக்கப்பட்டு விட்டன.

எனவே இந்த தொலைபேசி நிலையங்களுக்குட்பட்ட தொலைபேசி எண்களும், சென்னையைப் போலவே 8 இலக்க எண்களாகமாற்றப்பட்டுள்ளன.

இந்த ஊர்களிலிருந்து சென்னைக்கும், சென்னையிலிருந்து இந்த ஊர்களுக்கும் இனிமேல் உள்ளூர் அழைப்பிலேயே பேசிக்கொள்ளலாம். இதுவரை எஸ்டிடி கட்டணம் செலுத்த வேண்டி வந்தது. இனிமேல் இந்த ஊர்களில் இருந்து சென்னைக்குலோக்கல் கால் ரேட்டில் பேசலாம்.

அதே போல சென்னையின் எஸ்.டி.டி. தொலைபேசி இலக்கமான 044 என்ற எண்ணே இனிமேல் இந்த இரு மாவட்டங்களும்எஸ்.டி.டி. கோட் எண்ணாக செயல்படும்.

ஊர் வாரியாக மாற்றப்பட்டுள்ள புதிய தொலைபேசி எண்கள் விவரம்:

காஞ்சிபுரம்: தற்போதுள்ள எண்ணில் கடைசி 5 இலக்கங்கள் மாறவில்லை. அந்த ஐந்து இலக்கங்களுக்கு முன்பாக புதிதாக 272என்ற எண்ணை சேர்த்துக் கொள்ள வேண்டும். (உதாரணம்: 234567 என்ற எண், 27234567 என்று மாறும்)

திருவள்ளூர்: கடைசி 5 இலக்கங்களுக்கு முன்பாக 276 என்ற எண்ணைச் சேர்க்க வேண்டும்.

செங்கல்பட்டு: கடைசி ஐந்து இலக்கங்களுக்கு முன்பு 274 என்ற எண்ணைச் சேர்க்க வேண்டும்.

கும்மிடிப்பூண்டி மற்றும் பொன்னேரி: கடைசி ஐந்து இலக்கங்களுக்கு முன்பு 279 என்ற எண்ணைச் சேர்க்கவும்.

ஸ்ரீபெரும்புதூர்: கடைசி ஐந்து இலக்கங்களுக்கு முன்பு 271 என்ற எண்ணைச் சேர்க்கவும்.

மதுராந்தகம்: கடைசி ஐந்து இலக்கங்களுக்கு முன் 275 என்ற எண்ணைச் சேர்க்க வேண்டும்.

திருத்தணி: கடைசி ஐந்து இலக்கங்களுக்கு முன் 278ஐ சேர்க்க வேண்டும்.

மற்ற ஊர்களிலிருந்து மேற்கண்ட இரு மாவட்ட தொலைபேசி எண்களுக்கும் பேச விரும்புவோர் எஸ்.டி.டி. கோட் எண்ணாக044ஐ பயன்படுத்த வேண்டும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X