For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காஷ்மீரில் பயங்கர சேதம்- 15 வீரர்கள் உள்பட நூற்றுக்கணக்கானவர்கள் பலி

By Staff
Google Oneindia Tamil News

காஷ்மீர்:

இன்று காலை தாக்கிய மிக பயங்கரமான பூகம்பத்தால் ஜம்மூ-காஷ்மீரில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. இங்கு ராணுவ வீரர்கள் 15 பேர்உள்பட 200க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர். பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய பாராமுல்லாவில் தான் அதிக உயிர்ச் சேதம்ஏற்பட்டுள்ளது.

ஆனால், உயிர்ச் சேதம் ஆயிரத்தைத் தாண்டும் என்று உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. இந் நிலையில் பிற்பகல் 2.30மணியளவிலும் இங்கு மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

பாகிஸ்தான் எல்லையில் உள்ள ஊரி பகுதியிலும் பாரமுல்லாவிலும் குப்வாராவிலும் இந்திய ராணுவ வீரர்களின் பல பதுங்கு அறைகள்நொறுங்கின. அதிலிருந்த 15 வீரர்கள் பலியாயினர். அதே போல பூஞ்ச் மாவட்டத்திலும், தோடாவில், உதம்பூரில் பெரும் உயிர்ப் பலிகள்ஏற்பட்டுள்ளன.

ஊரி பகுதியில் 200 வீடுகள் தடைமட்டமானதில் பலர் பலியாயினர். ஆயிரக்கணக்கானவர்கள் காயமடைந்தனர்.

மேலும் 2 பஸ்கள் நில நடுக்கத்தால் தூக்கி வீசப்பட்டு பள்ளத்தாக்கில் விழுந்தன. இதிலும் பலர் பலியாகியுள்ளனர். உதம்பூர் மாவட்டத்தில்வீடு இடிந்ததில் ஒருவர் பலியாகியுள்ளது உறுதியாகியுள்ளது. இங்கு மற்ற உயிர்ச் சேத விவரங்கள் இன்னும் தெரியவில்லை. காஷ்மீரில்தொடர்ந்து நில நடுக்கம் ஏற்பட்டவண்ணம் உள்ளது.

இந்த மிக சக்தி வாய்ந்த நில நடுக்கத்தால் இமாயமலைத் தொடரே அதிர்ந்துள்ளது. இதில் காஷ்மீரின் பாரமுல்லா மற்றும் ஊரிமாவட்டங்கள் தான் மிகப் பெரும் சேதத்தை சந்தித்துள்ளன. உயிர்ச் சேதம் மிக அதிகமாக இருக்கலாம் என்று தெரிகிறது. இங்கு பலஇடங்களில் தீ விபத்தும் ஏற்பட்டுள்ளது.

இங்கு மீட்புப் பணியில் ராணுவம் இறக்கிவிடப்பட்டுள்ளது. தொடர்ந்து நில நடுக்கம் ஏற்பட்டு வருகிறது.

பல மலைக் குன்றுகளில் இருந்து பெரிய பாறைகள் உருண்டு விழுந்ததில் காஷ்மீரின் முக்கிய சாலைகள் அனைத்திலும் போக்குவரத்துபாதிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள முஸாபராத்தில் தான் நிலநடுக்கத்தின் மையம் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதையொட்டியஇந்திய எல்லைப் பகுதியில் தான் மிகப் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து எல்லையை ஒட்டிய குப்வாரா, பூஞ்ச், பாரமுல்லாஆகிய மாவட்டங்களுக்கும் ராணுவ மீட்புப் படைகள் விரைந்துள்ளன.

ராணுவ ஹெலிகாப்டர்களும் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

பூஞ்ச் மாவட்டத்தில் ராணுவ பிரிகேட் தலைமைகம், பாலங்கள், போலீஸ் தலைமையகம், சிறிய அணைகள் ஆகியவையும்சேதமடைந்துள்ளன. பூஞ்ச் மாவட்டத்தில் 7 பேரும், தோடாவில் 2 பேரும் உதம்பூரில் 4 பேரும் பலியாகியுள்ளனர். ஜம்மூவில் பள்ளிக்கட்டடம் இடிந்து காயமடைந்த 35 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதே போல ஹிமாச்சல பிரசேதத்தின் குலு பகுதியிலும் பல உயிர்ச் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. இப் பகுதியில் இந்தோ-திபேத் எல்லைப்படை போலீசார் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

காஷ்மீரில் ராணுவம் தவிர விமானப் படையினரும் மீட்புப் பணியில் இறங்கியுள்ளனர். இதற்கிடையே இன்று பிற்பகல் 2.30 மணியளவில்மீண்டும் காஷ்மீரில் நில நடுக்கம் ஏற்பட்டது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X