• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தமிழகத்தில் தொடர்ந்து கன மழை: 10 பேர் பலி

By Staff
|

சென்னை:

தமிழகத்தில் வட கிழக்குப் பருவ மழை முன் கூட்டியே தொடங்கி விட்டது. இதுவரை கன மழைக்கு 10 பேர் இறந்துள்ளனர். மாநிலம் முழுவதும் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

சென்னை மிதக்கிறது:

சென்னை நகரில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து அடை மழை பெய்து வருவதால் இயல்பு வாழ்க்கை பெரிதும்பாதிக்கப்பட்டுள்ளது. பல பகுதிகளில் சாலைகளில் தண்ணீர் வெள்ளமாகத் தேங்கியுள்ளது.

வேளச்சேரி, சைதாப்பேட்டை, புரசைவாக்கம், அண்ணா சாலை, நுங்கம்பாக்கம் உள்ளிட்ட நகரின் சில பகுதிகளில் தாழ்வானபகுதிகளில் தண்ணீர் வீடுகளுக்குள் புகுந்துள்ளது. நகரின் பல பகுதிகள் தண்ணீரில் மிதக்கின்றன.

வியாசர்பாடி, சாந்தோம், பெசன்ட் நகர், மயிலாப்பூர், கிண்டி, மடுவங்கரை உள்ளிட்ட பகுதிகளில் குடிசைகளுக்குள் தண்ணீர்புகுந்துள்ளதால் அதில் வசிப்பவர்கள் தெருவுக்கு வந்துள்ளனர்.

அதேபோல அடையாறு, கூவம் ஆறுகளில் மழை நீர் வெள்ளம் போல ஓடுவதால், கரைகளின் இருபுறமும் வசிப்பவர்கள்முன்னெச்சரிக்கையாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

சுரங்கப் பாதைகளில் நீர்:

நகரின் முக்கிய சாலையான அண்ணா சாலையில், உள்ள அனைத்து சுரங்க நடைபாதைகளிலும் தண்ணீர் தேங்கியுள்ளதால்அவற்றைப் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. பாரிமுனை பகுதிதான் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் அதிகஅளவு தண்ணீர் தேங்கியுள்ளதால், பஸ் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பஸ்கள் ஊர்ந்துதான் செல்ல வேண்டியுள்ளது. கன மழை, ரயில் போக்குவரத்தையும் விட்டு வைக்கவில்லை. ரயில் நிலையங்கள்பலவற்றில் தண்ணீர் தேங்கியுள்ளதால் மின்சார ரயில்கள் மிகவும் தாமதமாகவே சென்றன.

வெள்ளம் போல தேங்கி நின்ற தண்ணீரில் எப்படி ஆட்டோவை ஓட்டுவது என்ற பீதியில், பல டிரைவர்கள் ஆட்டோக்களைஎடுக்கவே இல்லை. இதனால் ஆட்டோக்களும் குறைந்த அளவிலேயே ஓடுகின்றன.

கார் மீது மரம் விழுந்து 3 பேர் பலி:

நேற்று பிற்பகல் முதல் இன்று காலை வரை மழை விட்டுவிட்டு நீடித்து வருகிறது. இரவில் கன மழை பெய்ததால், நகரேஸ்தம்பித்துப் போனது.

புரசைவாக்கத்தில் கார் மீது மரம் ஒன்று நேற்று இரவு விழுந்து காரை நசுக்கியது. இதில் காரில் பயணம் செய்த பொதுப்பணித்துறை அதிகாரி கிருஷ்ணமூர்த்தி, அவரது மனைவி சித்ரா ஆகியோர் பலியாயினர்.

காரின் பின் இருக்கையில் அமர்ந்திருந்த அவர்களது 13 வயது மகன் மட்டும் அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் உயிர்தப்பினான்.

விடிய விடிய கன மழை பெய்ததில் பல இடங்களில் மின் வினியோகமும் துண்டிக்கப்பட்டுள்ளது.

காவிரி டெல்டாவிலும்..:

அதே போல காவிரி டெல்டா பகுதிகளிலும் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் பாசன விவசாயிகள் பெரும்மகிழ்ச்சியடைந்துள்ளனர். மழை காரணமாக மேட்டூர் அணையிலிருந்து திறந்து விடப்படும் நீரின் அளவு வெகுவாககுறைக்கப்பட்டுள்ளது.

மதுரை, நெல்லை, ராமநாதபுரம்:

இதேபோல மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சை, சேலம், ஈரோடு, கடலூர், நாகர்கோவில், கோவில்பட்டி, திருநெல்வேலி,பரமக்குடி, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் கன மழை பெய்து வருகிறது.

கன மழைக்கு இதுவரை 10 பேர் வரை பலியாகியுள்ளனர்.

டிசம்பர் வரை மழை நீடிக்கும்:

மழை குறித்து சென்னை நுங்கம்பாக்கம் வானிலை ஆராய்ச்சி நிலைய இயக்குனர் ரமணன் கூறுகையில்,

தமிழகத்தில் வட கிழக்குப் பருவ மழை தொடங்கியுள்ளது. வழக்கமாக அக்டோபர் 20ம் தேதிக்கு மேல்தான் தொடங்கும்.ஆனால் இந்த ஆண்டு முன் கூட்டியே தொடங்கியுள்ளது.

இதன் காரணமாக மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. தமிழகத்தைப் பொருத்தமட்டில், வடகிழக்குப் பருவ மழை மூலம்தான் அதிக அளவுக்கு மழை கிடைக்கும். தற்போது தொடங்கியுள்ள வட கிழக்குப் பருவ மழைடிசம்பர் மாதம் வரை நீடிக்கும் வாய்ப்பு உள்ளது என்றார்.

Mail this to a friend  Post your feedback  Print this page 

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X