For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மின் வாரிய ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு: போக்குவரத்து ஊழியர்களுக்கு 2 மடங்கு போனஸ்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தமிழ்நாடு மின்வாரிய ஊழியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு புதிய ஊதிய விகிதத்தை தமிழக முதல்வர் ஜெயலலிதாஅறிவித்துள்ளார்.

இந்த ஊழியர்களின் பழைய ஊதிய ஒப்பந்தம் கடந்த 2000மாவது ஆண்டு நவம்பர் மாத இறுதியுடன் முடிவடைந்தது. அதன்பிறகு புதிய ஊதிய ஒப்பந்தம் போடப்படவில்லை. இது தொடர்பாக இந்த ஊழியர்கள் விடுத்து வந்த கோரிக்கைகளை செவிடன்காதில் ஊதிய சங்கு மாதிரி மதித்தது தமிழக அரசு.

இந் நிலையில் வரும் சட்டமன்றத் தேர்தலை மனதில் கொண்டு பல தரப்பினருக்கும் சலுகைகளை வாரி வழங்கி வருகிறார்முதல்வர் ஜெயலலிதா.

அந்த வகையில் மின்வாரிய ஊழியர் சங்கப் பிரதிநிதிகளுடன் ஊதிய உயர்வு குறித்த பேச்சு நடத்த தமிழக அரசு முன் வந்தது.

மின் வாரியத் தலைவர் சமீபத்தில் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார். இதைத் தொடர்ந்து முதல்வர் ஜெயலலிதா,இன்று தலைமைச் செயலகத்தில் மின்வாரிய ஊழியர் சங்கப் பிரதிநிதிகளுடன் இறுதிக் கட்டப் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதைத் தொடர்ந்து அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இதன் தொடர்ச்சியாக ஜெயலலிதா ஒரு அறிக்கையை வெளியிட்டார். அதில், தமிழ்நாடு மின்வாரிய ஊழியர்கள் மற்றும்பணியாளர்களுக்கு 2002ம் ஆண்டு டிசம்பர் 1ம் தேதி முதல் புதிய ஊதிய விகிதம் அமல்படுத்தப்படுகிறது.

அதன்படி மின்வாரிய ஊழியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 6 சதவீத ஊதிய உயர்வு கிடைக்கும்.

இதன்படி குறைந்தபட்ச ஊதிய உயர்வு ரூ. 600 ஆகவும், அதிகபட்சமாக 2,235 ரூபாயாகவும் இருக்கும். அடிப்படைஊதியத்துடன் சேர்த்து இந்த ஊதிய உயர்வு அளிக்கப்படுகிறது. 2002ம் ஆண்டு முதல் அளிக்கப்படும் இந்த ஊதிய உயர்வின்நிலுவைத் தொகை ரொக்கமாக வழங்கப்படும்.

2 ஆண்டு காலமாக ஊதிய உயர்வு அளிக்கப்படாத கால கட்டத்திற்கு இடைக்கால நிவாரணம் ரொக்கமாக வழங்கப்படும்.

இதுதவிர 15 ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட காலத்தில் பணியாற்றியவர்களுக்கு பணிக்கால ஊதியம் வழங்கப்படும்.இந்த புதிய ஊதிய ஒப்பந்தம் நாளை கையெழுத்தாகிறது. 2007ம் ஆண்டு நவம்பர் 30ம் தேதி வரை இது அமலில் இருக்கும்.

புதிய ஊதிய விகிதத்தினால் மின் வாரியத்திற்கு நடப்பாண்டில் ரூ. 420 கோடி கூடுதல் செலவாகும் என்று கூறியுள்ளார்ஜெயலலிதா.

20 சதவீத போனஸ்:

இதற்கிடையே தமிழ்நாடு மின்வாரியம், அரசுப் போக்குவரத்துக் கழகங்கள், ஆவின் நிறுவனம், பூம்புகார் கப்பல்போக்குவரத்துக் கழகம் மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக ஊழியர்களுக்கு 20 சதவீத போனஸ் மற்றும் கருணைத்தொகையை ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை:

லாப நோக்கை மட்டும் கருத்தில் கொள்ளாமல், மக்கள் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு பொதுத்துறை நிறுவனங்கள்செயல்பட்டு வருகின்றன. எனவே இந்த நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள், பணியாளர்களின் பணி நிலைகளைமேம்படுத்துவதே எனது விருப்பமாகும்.

தமிழ்நாடு மின்வாரியம் பெரும் நிதிச்சுமையுடன் உள்ளது. இருந்தாலும் ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக ஊழியர் சங்கப்பிரதிநிதிகளுடன் இன்று பேச்சுவார்த்தை நடத்தி புதிய ஊதிய ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல மன நிறைவானபோனஸ் வழங்கவும் முடிவெடுத்துள்ளேன்.

மத்திய அரசின் போனஸ் உச்சவரம்பைத் தளர்த்தி கடந்த

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X