மீண்டும் கேப்டனாகிறார் திராவிட்
மொஹாலி:
இந்திய அணியின் கேப்டனாக ராகுல் டிராவிட் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இந்தியா வரும் இலங்கை அணி ஏழு ஒரு நாள் போட்டி கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இத் தொடர் 25ம் தேதிதொடங்குகிறது. அடுத்ததாக தென் ஆப்பிரிக்காவுடன் 5 ஒரு நாள் போட்டிகளில் (நவம்பர் 16-28) இந்திய அணிமோதுகிறது.
இத் தொடர்களுக்கான கேப்டனை தேர்ந்தெடுக்க அணியின் தேர்வாளர்கள் கூட்டம் நேற்று மொஹாலியில்நடந்தது. இதில் டிராவிட் கேப்டனாக ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கங்குலி கையில் ஏற்பட்ட காயத்தால் அவதிப்படுவதால் இலங்கைக்கு எதிரான தொடரில் 2 போட்டிகளில்விளையாடமாட்டார் என்று தெரிகிறது.
பயிற்சியாளர் கிரேக் சாப்பலுடன் மோதல், ஃபார்மில் இல்லாதது போன்ற காரணங்களால் அவர் கேப்டன்பதவியில் இருந்து எளிதாக கழற்றி விடப்பட்டுள்ளார்.
இதனால் டிராவிட் இந்திய அணியின் கேப்டனாக தொடர்ந்து நீடிப்பார் என்று தெரிகிறது.
| ||||
![]() திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்! |