நிதி நிலை:எப்படி திடீர்னு.. கருணாநிதி கேள்வி
சென்னை:
கடந்த நான்கு ஆண்டுகளாக அதால பாதாளத்தில் கிடந்த தமிழக நிதி நிலைமை சட்டசபைத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் திடீரென சீரானதுஎப்படி என்ற விவரத்தை தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கோரியுள்ளார்.
திமுக ஆட்சியில் இருந்தபோது, நடத்தப்பட்ட சாதனைகள், அமலில் இருந்த திட்டங்கள், அளிக்கப்பட்ட சலுகைகள், உரிமைகள், இவற்றால்அரசின் நிதியாதாரம் அதல பாதாளத்துக்குப் போய் விட்டதாக மூச்சுக்கு முன்னூறு தடவை கூறிக் கொண்டிருந்தார் ஜெயலலிதா.
அதைக் காரணம் காட்டியே, சலுகைகள், உரிமைகள் ஆகியவற்றைப் பறித்தார். பல திட்டங்களை ரத்து செய்தார். இப்போது விரைவில்தேர்தல் வரப் போகிறது என்றவுடன் திமுக ஆட்சியின் பழைய திட்டங்கள், உரிமைகள், சலுகைகள் ஆகியவற்றை திரும்பவும் கொண்டுவந்து இப்போது நிதியாதாரம் பிரமாதம் என்கிறார்.
நான்காண்டு காலமாக அதல பாதாளத்தில் இருந்து வந்த நிதி நிலைமை, ஆறு மாதங்களில் பொதுத் தேர்தல் வருகிறது என்றவுடன்அப்படியே அந்தர் பல்டி அடித்து சீராகி விட்டது என்று கூறினால் நம்பக் கூடிய செய்தியா அது?
தப்பித் தவறி இவரது ஆட்சி மீண்டும் வந்து விட்டால், தேர்தலுக்காக அறிவித்தவை அனைத்தும் ரத்துதான் என்று கூறியுள்ளார் கருணாநிதி.
| ||||
![]() திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்! |