For Daily Alerts
பர்னாலா பிறந்த நாள்: மலர் கொத்து அனுப்பினார் ஜெ
சென்னை:
தமிழக ஆளுநர் எஸ்.எஸ்.பர்னாலாவின் பிறந்த நாளையொட்டி அவருக்கு மலர்க் கொத்துடன் வாழ்த்துச்செய்தியை அனுப்பினார் முதல்வர் ஜெயலலிதா.
தனது வாழ்த்துக் கடிதத்தில், மக்களுக்குத் தொடர்ந்து சேவையாற்றிடும் வகையில் மேலும் பல்லாண்டுகள் நல்லஉடல் நலத்துடன் வாழ இறைவனைப் பிரார்த்திப்பதாக கடிதத்தில் தெரிவித்துள்ளார் ஜெயலலிதா.
வழக்கமாக ஆளுநரின் பிறந்த நாளின்போது அவரை நேரில் சென்று ஜெயலலிதா வாழ்த்துவது வழக்கம்.ஆனால் இந்த முறை அவர் செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
திமுக தலைவர் கருணாநிதியும் பர்னாலாவுக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளார்.
கவர்னர் பதவியில் நீடிக்க விரும்பாத பர்னாலா பஞ்சாப் திரும்பி தீவிர அரசியலில் ஈடுபட முடிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
| ||||
![]() திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்! |