For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மாணவிக்கு ஆபாச எஸ்எம்எஸ்: தொலைக்காட்சி விஜே கைது

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

பெங்களூரைச் சேர்ந்த கல்லூரி மாணவிக்கு ஆபாச எஸ்.எம்.எஸ். அனுப்பிய தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளரை(வி ஜே)போலீஸார் கைது செய்துள்ளனர்.

இந்தியாவிலேயே இல்லாத அளவுக்கு, தமிழகத்தில்தான் சைபர் கிரைம் எனப்படும் இன்டர்நெட், செல்போன் வழியான குற்றச்செயல்கள் உடனுக்குடன் கண்டுபிடிக்கப்பட்டு குற்றவாளிகள் பிடிபடுகிறார்கள்.

குறிப்பாக சென்னை போலீஸார் துரித கதியில் செயல்பட்டு குற்றவாளிகளை லபக் எனப் பிடித்து சாதனை படைத்து வருகின்றனர்.

சமீபத்தில் ஒரு பெண்ணுக்கு தொடர்ந்து 650 ஆபாச எஸ்.எம்.எஸ்.களை அனுப்பிய மாணவர் பிடிபட்டு தற்போது சிறையில்இருக்கிறார்.

இவர் பிடிபட்டு இரண்டு நாள் கூட ஆகவில்லை, அதற்குள் அடுத்த நபர் மாட்டி விட்டார்.

பெங்களூரைச் சேர்ந்தவர் ரம்யா. 22 வயதாகும் இவர் நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் எம்.பி.ஏ. படித்துவருகிறார்.

கடந்த 2001ம் ஆண்டு ரம்யா, பெங்களூரில் பி.இ. படித்து வந்தபோது, அவருக்கும் வெங்கி என்பவருக்கும் நட்பு ஏற்பட்டது.ஆனால் வெங்கியின் நடவடிக்கைகள் பிடிக்காத காரணத்தால் அவருடனான தனது நட்பைத் துண்டித்துக் கொண்டார் ரம்யா.

இந் நிலையில் ரம்யாவின் செல்போன் எண்ணைத் தெரிந்து கொண்ட வெங்கி, அவருக்கு ஆபாச எஸ்.எம்.எஸ்.களை அனுப்பத்தொடங்கினார். இதுதவிர இமெயிலிலும் ஆபாச படங்களை அனுப்பி தொந்தரவு செய்துள்ளார்.

மேலும் முன்பு ரம்யாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை ஏகப்பட்ட பிரிண்ட் எடுத்து ரம்யாவின் உறவினர்களுக்கு தபால்மூலம் அனுப்பி வைத்தார்.

வெங்கியின் இந்தத் தொல்லையால் மனம் உடைந்தார் ரம்யா. தனது பெற்றோரிடம் இதைத் தெரிவித்தார். அவர்களும் அதிர்ச்சிஅடைந்து ரம்யாவை சென்னைக்கு அனுப்பி படிக்க வைக்க முடிவு செய்தனர்.

இதைத் தொடர்ந்தே அவர் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனது தாத்தா வீட்டுக்கு வந்தார். அங்கு தங்கி எம்.பி.ஏ. படித்துவந்தார்.

ரம்யா சென்னைக்கு வந்ததை எப்படியோ அறிந்து கொண்ட வெங்கி, உடனடியாக சென்னைக்கு வந்தார். தனது மாமா வீட்டில்தங்கிக் கொண்டு, தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக சேர்ந்தார்.

இங்கு வந்தும் அவர் ரம்யாவை விடவில்லை. தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்தார். வெங்கியின் அடாவடிச் செயல்களைப்பொறுக்க முடியாத ரம்யா தனது பெற்றோருடன், மாநகர காவல்துறை ஆணையர் நடராஜை சந்தித்துப் புகார் கொடுத்தார்.

சைபர் கிரைம் தொடர்பான வழக்குகளை விசாப்பதில் புலி என பெயர் பெற்ற உதவி ஆணையர் பாலுவிடம் இந்தப் புகாரைஅனுப்பி வைத்தார் நடராஜ். பாலுவின் விசாரணையில் உடனே சிக்கினார் வெங்கி.

கைது செய்யப்பட்ட வெங்கியிடமிருந்து லேப் டாப், 2 செல்போன்களை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

ஏற்கனவே வெங்கி மீது பெங்களூர் காவல்துறையில் இதேபோன்ற ஒரு புகார் ரொம்ப நாட்களாக நிலுவையில் உள்ளது. ஆனால்சென்னை போலீஸார் துரிதமாக செயல்பட்டு வெங்கியை உள்ளே தள்ளியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X