இப்போது சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு..
சென்னை:
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணியாற்றும் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை முதல்வர்ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கிட்டங்கிகள், நவீன அரிசி ஆலைகளில் பணியாற்றும் சுமை தூக்கும் கூலித்தொழிலாளர்களுக்கு கூலித் தொகை 5 சதவீதம் உயர்த்தப்படுகிறது. இது உடனடியாக அமலுக்கு வருகிறது.
இதுதவிர பணிக்காலத்தில் இறக்கும் சுமை தூக்கும் கூலித் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி அளிக்கும் வகையில்காப்பீட்டுத் திட்டம் அறிவிக்கப்படுகிறது.
அதன்படி பணிக் காலத்தில் இறக்கும் சுமை தூக்கும் கூலித் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 65,000 நிதியுதவிஅளிக்கப்படும்.
அதன்படி பணிக்காலத்தில் இறந்த 117 தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு ரூ. 65,000 நிதியுதவியை உடனடியாக வழங்கஉத்தரவிட்டுள்ளேன். இதன்படி ரூ. 76.05 லட்சம் நிதியுதவி உடனடியாக வழங்கப்படுகிறது.
இறந்த கூலித் தொழிலாளர்களின் பணிக்காலத்தை அடிப்படையாகக் கொண்டு பணிக்கொடையும் உடனடியாக வழங்கிடஉத்தரவிட்டுள்ளேன்.
10 ஆண்டு பணி புரிந்த சுமை தூக்கும் கூலித் தொழிலாளர்களுக்கு பச்சை நிற அட்டையும், ஓரு ஆண்டுக்கு மேல் பணியாற்றியதொழிலாளர்களுக்கு இளஞ்சிவப்பு அட்டையும் வழங்கப்பட்டு அவர்களுக்கு ஏராளமான சலுகைகள் ஏற்கனவே வழங்கப்பட்டுவருகின்றன.
இளஞ்சிவப்பு நிற அட்டை வைத்திருக்கும் 1,536 கூலித் தொழிலாளர்களில் 1,451 பேர் 10 ஆண்டு பணியை முடித்து விட்டனர்.அவர்களுக்கு பச்சை நிற அட்டை வழங்க உத்தரவிட்டுள்ளேன்.
இதுவரை அட்டைகள் பெறாத 1,168 ஊழியர்களில் ஓரு ஆண்டுக்கு மேல் பணி முடித்த 1,050 பேருக்கு இளஞ்சிவப்பு நிறஅட்டைகள் வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்.
புதிதாக இளஞ்சிவப்பு நிற அட்டைகள் பெறுவோரும், இதுவரை அட்டைகள் பெறாத 118 ஊழியர்களும் இந்த ஆண்டு சலுகைகள்பெற முடியாத காரணத்தால் அவர்களுக்கு உடனடியாக ரூ. 750 கருணைத் தொகையாக வழங்க உத்தரவிட்டுள்ளேன்.
இந்த சலுகைகளால் நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு இந்த ஆண்டு ரூ. 3 கோடி கூடுதல் செலவாகும் என்று கூறியுள்ளார்ஜெயலலிதா.
| ||||
![]() திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்! |