• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In

ஸ்ரீரங்கம் மூழ்கும் அபாயம்: ராணுவம் வருகிறது

By Staff
|

திருச்சி:

ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தின் கரை

காவிரி வெள்ள நீர் திருச்சி மற்றும் ஸ்ரீரங்கத்திற்குள் தொடர்ந்து புகுந்து வருவதால் இரு நகரங்களும் நீரில் மிதக்கின்றன.காவிரிக் கரை உடையும் அபாயம் ஏற்பட்டிருப்பதால் ஸ்ரீரங்கம் நகர் வெள்ளத்தில் மூழ்கும் பேராபத்தை சந்தித்து வருகிறது.

இதையடுத்து கரை உடைப்பைத் தடுக்க கோவை, பெங்களூரில் இருந்து ராணுவத்தின் பொறியியல் பிரிவு வீரர்கள் ஸ்ரீரங்கம்வரவழைக்கப்பட்டுள்ளனர்.

கர்நாடகத்தில் பெய்யும் கன மழையாலும், தமிழகத்தில் பெய்து வரும் பேய் மழையாலும் மேட்டூர் அணை நிரம்பி வழிகிறது.அணையைக் காப்பாற்ற 2 லட்சம் கன அடி அளவுக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டு வருகிறது.

இதனால் காவிரி ஆறு வெள்ளப் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த நீர் நேற்று முக்கொம்பை அடைந்து அங்கிருந்து நேற்று மாலைமுதல் திருச்சி காவிரியாற்றில் ஓடி வருகிறது. அளவுக்கு அதிகமாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டிருப்பதால் திருச்சி நகருக்குள்காவிரி நீர் புகுந்தது.

நகரின் முக்கியப் பகுதிகளான சத்திரம் பஸ் நிலையம், உறையூர், செயின்ட் ஜோசப் கல்லூரி, மலைக்கோட்டை உள்ளிட்டபல்வேறு பகுதிகளிலும் ஆறு புகுந்து வெள்ளக்காடாக மாற்றியுள்ளது. பல இடங்களில் வீடுகள் இடிந்து விழுந்துள்ளன.

ஆற்று நீர் பல கி.மீ. தூரத்துக்கு திருச்சி நகருக்குள் புகுந்துள்ளது. இதனால் பல பகுதிகளில் மார்பளவுக்கு தண்ணீர் தேங்கியுள்ளது.

இதனால் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டு, இயல்பு வாழ்க்கை பெதும் ஸ்தம்பித்துள்ளது. அசம்பாவிதத்தைத் தவிர்க்கதண்ணீர் சூழ்ந்துள்ள பகுதிகளில் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.

தண்ணீரில் மிதக்கும் சத்திரம் பஸ் நிலையம்

அதேபோல காவிரிக் கரையில் உள்ள ஸ்ரீரங்கத்திற்குள்ளும் வெள்ளம் புகுந்து ஊரையே நாசப்படுத்தியுள்ளது. ஸ்ரீரங்கத்தில்எங்கு பார்த்தாலும் வெள்ளக் காடாகக் காணப்படுகிறது. காவிரிக்கு மிகவும் அருகில் இருப்பதால் ஸ்ரீரங்கம் தான் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

காவிரிக்கும், கொள்ளிடம் ஆற்றுக்கும் நடுவில் தீவு போல இருப்பது தான் ஸ்ரீரங்கம். தற்போது காவிரி மற்றும் கொள்ளிடம்ஆகிய இரு ஆறுகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டிருப்பதால் ஸ்ரீரங்கம் வெள்ளத்தில் சிக்கித் தவிக்கிறது.

முற்றிலும் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பித்துள்ள நிலையில் ஸ்ரீரங்கம் மக்களுக்கு பெரும் பீதியூட்டும் வகையில், மேலூர்செட்டித்தோப்பு பகுதியில் காவிரிக் கரையில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.

காவிரி ஆற்றை ஒட்டி மலட்டாறு என்ற பெரிய கால்வாய் போகிறது. இந்தக் கால்வாயையும், காவிரி ஆற்றையும் இணைக்கும்வகையில் மேலூர் செட்டித்தோப்புப் பகுதியில் தடுப்பு கரை உள்ளது. இந்தக் கரையில் நேற்று மாலை விரிசல் ஏற்பட்டது.

திருச்சி காவிரியில் கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தை மக்கள் பார்க்கும் காட்சி
உடனடியாக அங்கு விரைந்த அமைச்சர் அண்ணாவி, மாவட்ட ஆட்சித் தலைவர் நந்த கிஷோர் உள்ளிட்ட அதிகாரிகள்அடைப்பை ச செய்யும் பணியில் தீவிரமாக இறங்கினர். ஆயிரக்கணக்கான மண் மூட்டைகள் போடப்பட்டு விரிசல் ஓரளவுக்குசரி செய்யப்பட்டது.

ஆனால் தண்ணீரின் வேகத்துக்கு முன்னால் அந்த மணல் மூடைகள் ஒன்றுமில்லாமல் போயின. இதையடுத்து மறுபடியும் 9000மணல் மூட்டைகள் போடப்பட்டன. இருப்பினும் அவையும் நெகிழ்ந்தவண்ணம் உள்ளது.

இதையடுத்து என்ன செய்வது என்று புரியாமல் விழித்த அதிகாரிகள், ஸ்ரீரங்கத்திலிருந்து மக்களை வெளியேற்றுவது மட்டுமேஒரே வழி என்ற முடிவுக்கு வந்தனர். இதைத் தொடர்ந்து காவல்துறையினர் ஸ்ரீரங்கம் மக்களை அங்கிருந்து வெளியேறுமாறு மைக்மூலம் அறிவித்தனர்.

திருச்சி பெரியார் நகரில் வெள்ளத்தில் மாட்டிக்கொண்ட கார்
இதைத் தொடர்ந்து பீதியடைந்த மக்கள் நகரிலிருந்து வெளியேறி வருகின்றனர். அடுக்கு மாடிக் குடியிருப்புகளில் வசிப்போர்மட்டும் வீடுகளை பூட்டி விட்டு மாடிகளுக்கு சென்று தங்கியுள்ளனர். மற்றவர்கள் கிடைக்கும் வாகனங்களில் ஏறி திருச்சிக்கும்அருகாமையில் உள்ள பாதுகாப்பான ஊர்களுக்கும் சென்று வருகின்றனர்.

ஸ்ரீரங்கத்திற்குப் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. நகரே வெறிச்சோடிக் காணப்படுகிறது. ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில்ஆயிரக்கணக்கானோர் தஞ்சமடைந்துள்ளனர். காவிரிக் கரை உடைந்தால் ஸ்ரீரங்கம் பெருமளவில் பாதிக்கப்படக் கூடும் என்றஅச்சம் ஸ்ரீரங்கம் மட்டுமல்லாது திருச்சி நகலும் நிலவுகிறது.

இதையடுத்து கோவையில் இருந்தும் பெங்களூரில் இருந்தும் ராணுவ வீரர்கள் இன்று இரவு வரவழைக்கப்படுவார்கள் எனதிருச்சி மாவட்ட கலெக்டர் நந்த கிஷோர் கூறினார்.

Mail this to a friend  Post your feedback  Print this page 

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X