ஜெயலட்சுமி ஜாமீன் மனு தள்ளுபடி
மதுரை:
ஜாமீன் கோரி ஜெயலட்சுமி அப்பீல் செய்த மனு மதுரை உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது.
இதை தொடர்ந்து மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ஜாமீன் மனு மீதான அப்பீல் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுமீதான விசாரணை இன்று நீதிமன்றத்திற்கு வந்தது.
ஜெயலட்சுமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் ரத்தினவேலு, உதயகுமார் ஆகியோர் விசாலாட்சியின் மகள்திவ்யா சம்பவத்தின் போது தன் தாயாருடன் வசித்தவர்.
அவர் தன் தாயாரின் தற்கொலைக்கு யாரும் காரணம் அல்ல என்றும் உடல்நலக் குறைவினால் மட்டுமேதற்கொலை செய்து கொண்டார் என்றும் கூறியுள்ளார்.
அதே போல விசாலாட்சியின் மூத்த பெண் மற்றும் உறவினர்கள் அளித்த சாட்சியத்தில் ஜெயலட்சுமியை தெரியாதுஎன்றும், விசாலாட்சி தற்கொலைக்கு யார் தூண்டுதலும் காரணமில்லை என்றும் கூறியுள்ளனர்.
போலீசார் தரப்பில் காட்டப்பட்டுள்ள சாட்சிகளை வைத்து மட்டும் ஜெயலட்சுமிக்கு தண்டனைஅளிக்கப்பட்டுள்ளது. எனவே தண்டனையை நிறுத்தி வைத்து அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்றுவாதிட்டனர்.
தண்டனை அளித்த குறைந்த காலத்திற்குள் ஜாமீன் மனு தாக்கல் செய்திருப்பதால் ஏற்க முடியாது என்று கூறி நீதிபதிசொக்கலிங்கம் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
| ||||
![]() திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்! |