For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வீண் வதந்திகளை நம்பாதீர்கள்: ஜெயலலிதா

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

வீண் வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம் என்று முதலமைச்சர் ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

சென்னை நகரில் முன் எப்போதுமில்லாத அளவிற்கு பெய்த கடும் மழையின் காரணமாக சென்னை நகரின்தாழ்வான பகுதிகளில் வசித்து வந்த மக்கள் பாதிக்கப்பட்டனர்.

நான் உடனடியாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரடியாக சென்று பார்வையிட்டு நிவாரண பணிகளை முடக்கிவிட்டேன். உடனடி நிவாரண நடவடிக்கைகளை எனது தலைமையிலான அரசு மிகத் துரிதமாக எடுத்ததன்விளைவாக இயல்பு நிலை விரைவிலேயே திரும்பியது.

சென்னை நகரை பொறுத்த வரையில், மழை வெள்ளம் ஏற்பட்ட பகுதிகளில் கட்டட அமைப்புகளை கருத்தில்கொண்டு, மாவட்டங்களில் குடிசை முழுவதுமாக சேதமடைந்த அல்லது பகுதி சேதமடைந்த குடும்பங்கள்அனைத்துக்கும் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

ரூ.2000 ரொக்கம், 10 கிலோ அரிசி, 1 வேட்டி, சேலை, மற்றும் 1 லிட்டர் மண்ணெண்ணெய் ஆகியவைவழங்கப்பட்டு வருகின்றன.

சென்னை மாநகரில் நிவாரண உதவிகள் நியாய விலைக் கடை மூலமாக டோக்கன்களை பெற்று கொள்ள வழிவகை செய்யப்பட்டது.

நிவாரண தொகுப்பு உதவி மையங்களும் ஆங்காங்கே திறக்கப்பட்டன. எந்தெந்த பகுதி மக்கள் எந்தெந்தஇடங்களில் நிவாரண உதவிகளை பெற்றுக் கொள்ளலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டிருந்தஅறிவிக்கையின் அடிப்படையில் இந்த மையங்களில் எவ்வித பிரச்சினையுமின்றி நிவாரண உதவிகள்வழங்கப்பட்டு வந்தன.

இந்த முறைப்படி இதுவரை 70,000 குடும்பங்களுக்கு நிவாரண உதவி வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்று அதிகாலை மார் 4.30 மணிக்கே உடனடியாக விரைந்து நிவாரணப் பொருட்கள் வழங்கும்மையத்திற்கு சென்று நிவாரணப் பொருட்களை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று சில விஷமிகள்வேண்டுமென்றே புரளி பரப்பினர்.

நிவாரண உதவி மையம் காலை 9 மணிக்கு தான் திறக்கப்படும் என்றாலும் வதந்தியை நம்பி அதிகாலை 4.30மணியளவில் வியாசர்பாடி பகுதியை சேர்ந்த சுமார் 3000 நபர்கள் நிவாரணப் பொருட்கள் வழங்கும் அம்பேத்கர்கல்லூரி முன்பு திரண்டனர்.

அந்த கல்லூரியின் முன் பக்க வாயிலில் காவல் கட்டுப்பாட்டை மீறி உடைத்து உள்ளே சென்ற போது ஏற்பட்டகூட்ட நெரிசலில் 6 பெண்கள் இறந்து விட்டனர் என்பதை அறிந்து நான் மிக்க துயருற்றேன்.

அவர்களின் குடும்பங்குளுக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தையும், இரங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சமும், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும்ஒவ்வொருவருக்கும் ரூ.15,000 முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்.

மழையால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் ஒரு கும்பம் விடுபடாமல் நிவாரண தொகுப்பு உதவி நிச்சயமாகவழங்கப்படும். எனவே யாரும் வீண் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றுகூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X