ஆசிரியை மீனாட்சி வழக்கில் திடீர் திருப்பம்
குளித்தலை:
குளித்தலை ஆசிரியை மீனாட்சி காணாமல் போன வழக்கில் சிபிசிஐடி போலீசாருக்கு புதிய தடயம்கிடைத்துள்ளது. இதனால் இந்த வழக்கில் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
குளித்தலை போலீசார் விசாரித்து வந்த வழக்கு மதுரை உயர்நீதிமன்றத்தின் ஆணைப்படி சிபிசிஐடி போலீசாரிடம்ஒப்படைக்கப்பட்டது.
சிபிசிஐடி போலீசார் விசாரணையிலும் எந்த உபயோகமான தடயமும் கிடைக்கவில்லை. இதனால் இந்த வழக்கில்தொய்வு ஏற்பட்டது.
இந்த வழக்கில் குளித்தலை எம்எல்ஏ பாப்பா சுந்தரம் அவரது மைத்துனர், உறவினர்கள், மீனாட்சியின் கணவர்ஜோதிர்ராமலிங்கம் உள்பட ஏராளமான பேரை போலீசார் விசாரித்தனர்.
ஆனால் பயனுள்ள தகவல் ஏதும் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் மதுரை சிபிசிஐடி போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். அவர்களின் விாரணையில்வெளிமாநிலத்தை சேர்ந்த கோடீஸ்வரர் ஒருவர் கூலிப்படை மூலம் மீனாட்சியை கடத்தி சென்று சில நாட்களுக்குபிறகு கொலை செய்திருக்கலாம் என்று தகவல் கிடைத்துள்ளதாகவும்,
அதை உறதிப்படுத்தும் விதத்தில் சில தடயங்கள் கிடைத்திருப்பதாகவும் சிபிசிஐடி போலீசார் தெரிவித்தனர்.
இன்னும் ஒரு மாதத்தில் வழக்கை முடித்துவிடுவோம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ள போலீசார்,
நவம்பர் 11ம் தேதி மதுரை நீதிமன்ற கிளையில் மீனாட்சி காணாமல் போன வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும்நிலையில், இந்த வழக்கில் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
| ||||
![]() திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்! |