நெய்வேலி: நீரில் மூழ்கிய மின் நிலைய சுரங்கங்கள்
நெய்வேலி:
கடலூர் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் நெய்வேலியில் உள்ள அனல் மின் நிலையத்தின் 2 சுரங்கங்களுக்குள்நீர் புகுந்துவிட்டது. சுரங்கத்தை நீர் மூடிவிட்டதால், மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் இந்த சுரங்கங்கள் மூலம் உருவாக்கப்படும் 200 மெகாவாட் மின் உற்பத்தி தடைப்பட்டுள்ளது. இதுதவிர 2வது மின்நிலையத்தில் தயாரிக்கப்படும் 210 மெகாவாட் மின் உற்பத்தியும் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.
தண்ணீரை அகற்ற ராட்சத இயந்திரங்கள் இருந்தபோதிலும், சேறும், சகதியுமாக இருப்பதால் அவற்றை அகற்ற முடியாமல்அதிகாரிகள் விழிபிதுங்கி நிற்கின்றனர். தண்ணீரை அகற்ற பல்வேறு வழிகளில் அதிகாரிகள் முயற்சிகள் மேற்கொண்டுள்ளனர்.
இங்கு மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின் வினியோகமும் பாதிக்கப்பட்டுள்ளது.
| ||||
![]() திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்! |